அவதூறு பரப்பு…. ஆட்சியைப் பிடி...!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 15 Dec, 2018 10:37 am
spread-defamation-special-story

ஒரு கணவன் மனைவிக்குள் பிரிவினை உண்டாக்க வேண்டுமா? அந்த மனைவிடம் சென்று உன் கணவனை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாகப் பார்த்தேன் என்று சொல்லிவிட்டு, உன் நன்மைக்காகச் சொல்கிறேன். நான் சொன்னேன்னு சொல்லிடாதேனு சொல்லிட்டு போய்விட்டால் போதும்,  உண்மையாக இருக்குமோ என்று உறுத்த ஆரம்பித்து, சந்தேகம் அதிகரித்து  படிப்படியாக இருவருக்குள் பிரிவு வந்து விடும். ஒருவேளை, தவறான தகவல் என்று தெரிந்து கொண்டு  நம் சட்டையைப் பிடித்தால், அட, அது நீயில்லையாப்பா? பார்க்க உன்னை மாதிரியே இருந்தானே? அடடா அவசரப் பட்டுட்டேனே என்று சமாளித்து விடலாம். ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் செய்தது போல...

சமீப 2-3 வருடங்களாக மக்களுக்கு மத்தியில் தற்போதைய மத்திய அரசு ஊழலற்ற சுத்தமான ஆட்சி கொடுத்து வருகிறது என்று புரிய ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே அடிபட்டுக் கிடக்கும் காங்கிரஸ்க்கு இது மேலும் பின்னடைவைக் கொடுத்து வருகிறது. இந்தச் சூழலை உடைக்க காங்கிரஸ் செய்த அரசியல் தந்திரம் தான், பாஜக தலைமையிலான அரசின் மீது அவதூறு பரப்பும் உத்தி, ரஃபேல் பற்றிய ஆழ்ந்த அறிவோ, தளவாட வியாபாரம் பற்றிய புரிதலோ இல்லாத அப்பிராணி மக்கள் மத்தியில், ஐயோ மோடி ஊழல் செய்து விட்டார், விமானம் வாங்கியதில் இத்தனை கோடி கமிஷன் வாங்கி விட்டார் என்று பரப்பி விட்டால், அட மோடியும் இப்படித்தானா? என்றோ நெருப்பில்லாமல் புகையுமா என்றோ மக்கள் சந்தேகப்படத் துவங்கி விடுவார்கள். சந்தேகத்தின் பலன்> எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்ற நிலைக்குத் தள்ளப்படும்.

 நாட்டின் பாதுகாப்பு கருதி அதன் முழு விபரங்களை பொதுவெளியில் கொடுக்க முடியாது என்ற விஷயம் ஏற்கனவே பலவாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்க்கு நன்கு தெரியும். அப்படியே சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மக்களுக்கு விஷய ஞானம் கிடையாது. எனவே தான் ரஃபேலில் ஊழல் என்று பற்ற வைத்தார்கள்.  அதன் பலனாக, மத்தியபிரசம், சட்டீஸ்கர் போன்ற அதிக படிப்பறிவில்லா மக்களைக் குழப்பி வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இனி நீதிமன்றம் யாரை குற்றவாளி இல்லை என்று சொன்னாலும் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. நீதிமன்றம் உண்மையைச் சொல்வதற்கு முன்பே ராகுல்காந்தியின் ரஃபேல் குறித்த முன்னுக்குப் பின்னான உளறலே இதில் உண்மை இல்லை என்று ஓரளவுக்கு விசயம் தெரிந்தவர்களுக்கு உணர்த்தி விட்டது. ஆனால், பொது மக்கள் மனதில் படிந்த சந்தேகக் கறை அத்தனை எளிதாக விலகாது. இதே உத்தியைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர,  இனி அடுத்த தேர்தலுக்கு வேறொரு அவதூறுடன் கிளம்பி வருவார்கள். 

இது போன்ற உத்திகளால் தான் தமிழக மக்களிடையே திராவிடக் கட்சியினர் ஓட்டு வேட்டை நடத்தி வந்தனர். ஓரளவு பொது அறிவு கொண்ட மக்கள் இவர்களின் ஏமாற்று வேலையைப் புரிந்து கொண்டு திராவிடக் கட்சிகளை ஒதுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது போன்ற அவதூறுகளுக்கு எதிரான விழிப்புணர்வு தேசம் முழுவது ஏற்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மக்களிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close