ஹிந்து மதத்தின் மீது மட்டும் கல்லெறியும் அறிவுஜீவிகள்!

  கிரிதரன்   | Last Modified : 23 Dec, 2018 11:53 am
after-spreading-negativity-during-diwali-elite-group-now-is-in-a-festive-mood-during-christmas

"உங்களின் உடல் எடையை கருத்தில் கொண்டு, தீபாவளி பலகாரங்கள் சுவைப்பதை தவிருங்கள் அல்லது அளவோடு உண்ணுங்கள்"...என்ன இது... தீபாவளி முடிந்து பொங்கல் பண்டிகையே வரவிருக்கிறது...இப்போது போய் இப்படியொரு எச்சரிக்கையாக என எண்ண வேண்டாம்.

சென்ற தீபாவளி பண்டிகையின்போது,  பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த, கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்தான் இவை.

ஆனால், அதே நிறுவனம்தான் "விருந்துகள் இல்லாத விழாக்களா? இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை பிளம் கேக்குடன் உற்சாகமாக கொண்டாடுங்கள்" என தமது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளது.

அதாவது, தீபாவளி பண்டிகையின்போது நம் இல்லங்களில் பரிமாறப்படும் முறுக்கு, அதிரசம், லட்டு, பால்கோவா போன்ற இந்திய வகை பதார்த்தங்களை உண்டால், உடம்பில் அதிக கொழுப்புச் சத்து சேர்த்து  உடல் பருமன் அதிகரித்துவிடுமாம்...

அதுவே கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பிளம் கேக், ஸ்ட்ராபெரி கேக், சாக்லேட் கேக் அது, இதுவென வெளிநாட்டு வரவுகளான இனிப்பு வகைகளை சாப்பிட்டாலும், உடல் பருமனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதாம்...

இதை ஏதோ தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பதிவாக மட்டும் எண்ணிவிட வேண்டாம். ஹிந்துமத பண்டிகைகளை ஏளனம் செய்யும் அறிவுஜீவிகள், ஹிந்துமத நம்பிக்கைகளின் மீது மட்டும் குறிவைத்து கல்லெறியும் அதிமேதாவிகளின் எண்ண ஓட்டங்களின் ஒரு சிறு பிரதிபலிப்புதான் இந்த டுவிட்டர்  பதிவுகள்.

இதுமட்டுமா... தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்துவிடுமென கண்ணீர் விடுவோர், டெல்லி போன்ற நகரில் தினந்தோறும் காற்று மாசு அடைந்து வருவதை பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை.

தீபாவளி திருநாளில் சாமானியர்களை பட்டாசு வெடிக்க வேண்டாம் என பணிக்கும் பிரபலங்கள், தங்களது இல்ல திருமண விழாக்களில் மத்தாப்புகளை கொளுத்தி, பட்டாசு வெடிப்பதில் கிடைக்கும் சந்தோஷங்களை இழக்க விரும்புவதில்லை.

ஜல்லிக்கட்டு போன்ற திருவிழாக்களின்போது மட்டும் விலங்குகளின் நலன் குறித்து திடீர் அக்கறை கொள்பவர்கள்தான், பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள், ஒட்டகங்கள் வெட்டப்படுவதை வசதியாக கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

ஹோலி பண்டிகையின்போது மட்டும் தண்ணீர் சிக்கனம் பற்றி ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், ஆண்டின் மற்ற  364 நாள்களும் இதைப் பற்றி கவலையே கொள்வதில்லை.

ஆணாதிக்கம்... ஆணாதிக்கம்... என சப்தமாக பேசுபவர்கள், முத்தலாக் என்றதும் ஏனோ மௌனம் சாதித்து வருகின்றனர்.

சபரிமலையில் எல்லா வயது பெண்களையும் ஏன் அனுமதிக் கூடாதென கேள்வி கேட்பவர்களிடம் , மசூதிகளில் பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இப்படி ஹிந்து மதத்துக்கு எதிரான, தங்களை தாங்களே அறிவுஜீவிகளாக சொல்லிக் கொள்பவர்களின் அடாவடித்தனங்கள் சொல்லி மாளாது.

இதுபோன்றவர்களின் மனதி்ல் ஆழமாக வேரூன்றி இருக்கும் அல்லது விதைக்கப்பட்டிருக்கும் ஹிந்து மதத்துக்கு எதிரான வெறுப்புணர்வே இதுபோன்ற நகை முரண்களுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.

இந்த வெறுப்புணர்வின் வெளிப்பாடாக, மத கோட்பாடுகளின்படி ஹிந்துக்கள் எதைச் செய்தாலும், அதை ஏளனமோ, விமர்சனமோ செய்வதையே இந்த கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இஸ்லாமிய,  கிறிஸ்தவ மத கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கும் இவர்களின் உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.  அந்த மதங்களில் உள்ள குறைகள் குறித்து, பிறருக்கு காதில் விழும்படி மூச்சு விடவே மாட்டார்கள் இந்த அறிவுஜீவிகள். அந்த மதங்களில் நிலவி வரும் குறைகள் குறித்து கேட்டால் மௌனம் மட்டுமே, ஹிந்து மதத்தை நிந்திப்பவர்களிடம் இருந்து பதிலாகக் கிடைக்கும்.

ஆனால், யார் என்ன செய்தாலும், கூறினாலும் அன்பு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு போன்ற உயர்  பண்புகளை குடும்ப மற்றும் சமூக சூழலில் ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வதற்கான சிறந்த ஏற்பாடே ஹிந்து மதம் தொடர்பான பண்டிகைகள்... அதனை விமர்சிக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close