தங்கள் முகத்தில் தாங்களே கரி பூசிக்கொள்ளும் நசீருதீன் ஷாக்கள்!

  கிரிதரன்   | Last Modified : 23 Dec, 2018 06:15 pm
naseeruddin-shah-gets-support-from-pakistan-pm-imran-khan

"நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது; சிறுப்பான்மையினர் மீதான சகிப்பின்மை அதிகரித்துவிட்டது; இதனை கண்டிக்கும் விதமாக எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய அரசு விருதுகளை எல்லாம்  திரும்பத்  தருகிறோம்" என தங்களை தாங்களே அதிமேதாவிகளாக கருதும் ஒரு பிரிவினர், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பாஜக அரசுக்கு போலியாக மிரட்டல் விடுத்தனர்.

பாஜக அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில், பீகார் மாநில  சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு , 2015- இல் நடைபெற்ற இந்த முயற்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

"இந்த நாட்டில் மாடுகளுக்காக கவலைப்படுவோர், சிறுபான்மை மக்களை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த தேசத்தில் வாழும் முஸ்லிம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது" என பிரபல ஹிந்தி நடிகர் நசீருதீன் ஷா திடீர் சமூக அக்கறையுடன்  அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்தர்ஷாவில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு தான் கூறிய இந்த கருத்துக்காக பொதுவெளியில் கடும் கண்டங்களை ஷா எதிர்கொண்டு வருகிறார்.
இதன் உச்சமாக, "பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும் அளவுக்கு இந்த தேசத்தில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. இதைவிட என்ன சுதந்திரம் வேண்டும் நமக்கு?
இன்று உங்களது சமூகத்தினருக்காக கண்ணீர் வடிக்கும் நீங்கள், பண்டிட் சமூகத்தினர்  காஷ்மீரிலிருந்து அடித்து துரத்தப்பட்டபோது எங்கே போனீர்கள்? சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது உங்களை போன்றவர்களின் கண்டன குரல்கள் ஒலிக்கவே இல்லையே?" என, நசீருதீன் ஷாவின் தம்பியும், நடிகருமான அனுபம் கேர், அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


உள்நாட்டில் நசீருதீன் ஷாவுக்கு கண்டனங்கள் வலுக்கவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மத்திய அரசை சாடியுள்ளார்.
"நசீருதீன் ஷா கூறியுள்ள வார்த்தைகள், தமக்கு முகமது அலி ஜின்னாவை ஞாபகப்படுத்துகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்ததால்தான் பாகிஸ்தான் என்ற தனிநாட்டை  ஜின்னா உருவாக்கினார்.

அனைத்து மதத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பாகிஸ்தான் அரசின் கடமை. அந்த கடமையை செய்வதன் மூலம் சிறுபான்மையினரை எப்படி வழிநடத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்" என்று பிரதமர் இம்ரான் முழங்கியுள்ளார்.

பயங்கரவாதத்தின் மொத்த புகலிடமாக விளங்கும் ஒரு நாடு, நம் நாட்டின் பிரதமருக்கு பாடம் நடத்துவோம் என சொல்வதைவிட கேலிக்கூத்து வேறெதும் இருக்க முடியாது. இருப்பினும், பயங்கரவாத விஷயத்தில் மெத்தப்போக்கை கடைபிடித்து வந்த காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையில் உள்ள இம்ரான் கான் போன்றவர்கள் இப்படி பேசுவதில் வியப்பேதும் இருக்க முடியாது.

ஆனால் ஒன்று... சிறுபான்மையினர் பிரச்னைகளை முன்வைத்து பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கும் நசீருதீன் ஷா போன்றவர்கள், அவர்கள்  வக்காலத்து வாங்கும் இம்ரான் கான் வகையறாக்கள், தங்களின் முகத்தில் தாங்களே கரியை பூசி கொள்கின்றனர் என்பது மட்டும் நிசர்சனம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close