புரட்சிப் பெண்ணே விட்டு விடு ஐயப்பனை! அய்யோ பாவம் அவன் உனக்கு சரிப்பட்டு வரமாட்டான்

  பாரதி பித்தன்   | Last Modified : 26 Dec, 2018 12:42 pm
let-the-revolution-girl-leave-her-iyyapan-will-not-come-to-you

எவன் தொல்லையும் வேண்டாம் என்று மலைமேல போய் உக்காந்தா கூட நிம்மதியில்லாம தவிக்கிறவன் ஒரு ஆள் இப்போ உலகத்தில ஒரு ஆள் உண்டு என்றால் அது ஐய்யப்பன் தான். இதுல அவனுக்கு ஓருதலைக் காதலி வேற எப்போ கட்டிக்கிற கட்டிக்கிற என்று மாளிகைபுரத்து மஞ்சள் மாதாவாக பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு இருக்கிறார்.  

மணிகண்டனுடன் மஞ்சள் மாதா திருமணம் செய்யக் காத்துக்கொண்டிருப்பது பற்றி கூட கவலைப்படாமல் இந்த ஆணாதிக்கவாதிகள் புதுசு புதுசா மாலை போட்டு கொண்டு ஒரு பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற உங்களின் ஆதங்கம் புரிகிறது. ஒரு பெண்ணின் சிரமம் பெண்ணுக்கு தான் புரியும் என்று கருதி நீங்கள் எல்லாம் புறப்பட்டு போய்விட்டீர்கள் போல. சபரிமலை மட்டும் தான் பெண்ணுரிமை நிரூபிக்க வேண்டிய இடமா புரட்சியாளர்களே. பாவம் அய்யப்பன் விட்டு விடுங்கள். நீங்கள் புரட்சி காட்ட வேண்டிய பல இடங்கள் உள்ளன. காவல்துறையில் பாருங்கள் இன்னமும் பெண் போலீசுக்கு ஆண்கள் அணியும் உடைதான்  சீருடை. எப்படிதான் அவள் இயற்கை உபாதையை அந்த உடையுடன் கழிப்பாள் என்ற சிந்தனை எந்த ஆண் ஆதிக்க அதிகாரிகளுக்காவது இருக்கிறதா?

இத்தனை இடதுசாரி அமைப்புகள் உள்ளனவே, அதற்கு பின்புலத்தில் இருந்து இயக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிட்ஸ் கட்சிகளில் ஒரு முறையாவது பெண் ஓருவர் அகில இந்திய தலைவராக இருந்துள்ளார்களா, நாம் செங்கொடி துாக்கி போராடி இருக்கலாமே. அல்லது மேலாடையை கழற்றி வீசிவிட்டு சுந்திரமாக கத்தியிருக்கலாமே.

இன்னும் கூட ஒரே புருஷன் கூட வாழ்ந்து புள்ளைபெத்து குடும்பம் என்ற விலங்கை மாட்டிக் கொண்டு இருக்கிறீர்களே, சுந்திரமாக வாழலாமே. அல்லது அப்படி நாளொரு புருஷன் கூட சுந்திர பறவைகளாக வாழும் பெண்களை விபச்சாரிகள் என்று கேவலமாக கூறும் ஆணாதிக்க சக்திக்கு எதிராக போராடி இருக்கலாமே புரட்சிப் பெண்ணே. பாலியல் என் உரிமை அதற்கு தடை போடக் கூடாது என்று உச்ச, உயர்நீதிமன்றங்களில் வழக்கு போடலாமே, அதற்கு பெரியாரின் கொள்கைகளை துணைக்கு இழுத்து இருக்கலாமே.

ஆடைகள் கூட அடிமைத்தனம் தான் பெண்ணே யோசியுங்கள், இயற்கை என்ன ஆடையோடா அனுப்பிவைத்தது. இந்த பூர்ஷ்வாக்களின் போக்கை உலகத்தி்ல் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்க ஏன் நீ முன்வரவில்லை புரட்சிப் பெண்ணே.

நம்புரட்சியின் வெற்றி இன்று ஊர்உலகத்தில் உள்ள டாஸ்மாக் தவிர உள்ள ஏனைய பார்களில் வெளிப்பட்டு வருகிறது. அது பாருக்குள்ளேயே முடங்கி விடாமல், மேலும் எழுச்சியுடன் வெளிப்பட நீ வெடித்து எழுவது தானே நியாயம் புரட்சிப் பெண்ணே.

அதையெல்லாம் விடுத்து ஐய்யப்பனிடம் சென்று பெண்ணுரிமை மீட்கப் போராடுகிறாயே அது நியாயம் தானா. நைஷ்டீக பிரம்மச்சரிய விரதம் என்ன என்று உனக்குத் தெரிந்தால் எனக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லேன் புரட்சிப் பெண்ணே. அங்கு ஒருத்தி மாளிகைபுரத்தம்மா, மஞ்சள்மாதா என்ற பெயரில் ஐயப்பனிடமிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலேயே அமர்ந்து அவனை திருமணம் செய்ய வேண்டும் எனத் தவமிருந்து வருகிறாளே அது ஏன்? அவள் ஐயப்பன் இருக்குமிடம் அருகிலேயே அமர்ந்து தவம் இருக்கலாமே. அப்படி ஏன் செய்யவில்லை என்பதை எல்லாம் அறிந்து சமூகத்தை சீர்திருத்த வந்த நீ விளக்கலாமே புரட்சிக்காரியே. இதைத் தான் நம் மார்க்கங்கள் கற்பித்ததா, அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன நீ மும்முறை தலாக் சொல்லிவிட்டு விலகி விடு.

உன் நெடிய போராட்டம் தான் பாதிரியார் ஆடைகளை பேண்ட் சர்ட்டாக மாற்றிவிட்டது.  அதே போல லட்சக்கணக்கான ஆண்கள் மட்டுமே செல்லும் சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் என்று போராடுவது நல்லது போராளியே. இந்த போராட்டத்தில் உன்னை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். அவர்கள் உன்னை கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள். உன் குடும்பம் உன்னை இழக்க தயாராக இருக்கலாம். ஆனால் நீ இல்லாமல் பாலியல் வறட்சியில் சிக்கி தவிக்கும், உன் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண்களை ஒரு இரவேணும் சிந்தித்தாயா.

இந்த போலீஸ்கார்களை நம்பி களம் இறங்காதே புரட்சிப் பெண்ணே. சந்தடி சாக்கில் அவனுகளே சுட்டுவிட்டு மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு பேட்டி கொடுப்பான், துாத்துக்குடியில் கூட இப்படிதானே நடந்தது .

உங்களைப் போன்ற போராளிகள் தமிழத்தில் கிடைப்பது அரிதிலும், அரிது, நம்ம ஊர் பெண்கள் யாரும் உன்னை போல அந்தரங்க உறுப்புகளை சமூகவலைதளங்களில் ஆட்டிக்காட்டி புரட்சி செய்ய மாட்டார்கள். தேவைப்பட்டால் படுக்கையை பகிர்ந்து கொண்டு, அதையும் படும் எடுத்துப்போட்டு, போர்பரணி பாடமாட்டார்கள். இது போன்ற மடையர்கள் குலத்தில் வந்து உதித்த மாணிக்கம் நீ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம்ம ஊரில் கறுப்பு சட்டை போட்டு திரியவன் எல்லாம் நம்ம கொள்கை பேசுறதை பார்த்து விட்டு சபரிமலையில் கறுப்பு சட்டை போட்டு சுத்துறவன் எல்லாம் கட்சிக்காரன் என்று நம்பி போய்விடாதே. திமுக, அதிமுக கூட்டத்துக்கு கூப்பிடுவதுபோல காசு கொடுத்து கூட கூப்பிடுவாங்க .போய்விடாதே, அப்புறம் 2 வருஷத்துக்கு மெழுகுபத்தி ஏத்தி முஷ்டியை மடக்கி கூச்சல் போட்டு ரெண்டு பூ போட்டு விட்டு போய்விடுவான்.

இந்த தேசத்தில் நீ முக்கியம் அதை விட உன் உடல் முக்கியம், பல புரட்சிகள் உயிருடன் உள்ள உன் உடல் மீது தான் உருவானது. அதன் மீது புரட்சியாளர்கள் தான் புரண்டுபடுக்க வேண்டுமே தவிர்த்து புழுக்களை புரள விட்டுவிடாதே.

இதற்கு மேலும் நீ முரண்டு பிடித்து சபரிமலைக்கு போனால் வேறு வழியே இல்லை. உன் தங்கையை தான் அடுத்த புரட்சியாளனாக உன் இயக்கத்தினர் மாற்றி விடுவார்கள் ஜாக்கிரதை புரட்சிப் பெண்ணே.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close