நீல சாயம் வெளுத்து போச்சு டூம்.. டூம்.. டூம்..!

  டேவிட்   | Last Modified : 27 Dec, 2018 10:46 pm
ambani-family-marriage-invitees

நடிகர் கமல்ஹாசன் மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவிக்கு நரிக்கதை சொல்லுவார். அதில் முருங்கமல காட்டுக்குள் இருந்து தந்திரம் மிகுந்த நரி நாட்டுக்குள் வரும். வந்த இடத்தில் கால் தவறி விழும். அந்த இடத்தில் நீல நிற சாயம் வச்ச தொட்டி இருக்கும். அதில் விழுந்த நரி கலர் மாறிவிடும். மீண்டும் காடு தேடி போகும் நரி. அங்கோ ஏதோ ஒரு புதிய மிருகம் வந்ததாக மற்றவை எண்ணி பயப்படும். அதனால் நரியின் நாட்டாமை அரங்கேறி, சிங்கம், புலிகளை கூட மிரட்டி ஆட்சி செய்யும். இந்த நரியை போன்று கலர் மாறிவிட்ட காங்கிரஸ்காரர்கள் தான் நம்மிடம் மத்திய அரசை பற்றிய பயத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். 

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் அம்பானி பிரதர்ஸ் ஏஜெண்டாகவே சித்தரிக்கப்படுகிறார். சமூகவலை தளத்தில் ஒருவர் ஆர்எஸ்எஸ் என்பதையே ரிலையன்ஸ் சேவக் சங்க் என்று எழுதுகிறார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் அம்பானி சகோதர்களுக்காக ஏற்படுத்தப்படுள்ளது என்று ராகுல் கூச்சல் இடுகிறார். அதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்து ஊதுகின்றன. ஞாபக மறதிக்காரர்களான நாமும் கூட சுதந்திரம் வாங்கி தந்த  கட்சி உண்மையை தான் கூறும் என்று நினைக்கிறோம்.

அம்பானிக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டால் கூட வெறும் 4 ஆண்டுகள் தான் இந்த பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகி உள்ளது. இவ்வளவு தானா அம்பானி வளர்ச்சி அடைய தேவையான காலகட்டம். நகைப்பிற்குரியதாக இல்லை இந்தக் கருத்து

உண்மை இதை விட கொடுமையானது. திருபாய் அம்பானி மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த காலகட்டத்திலேயே அவரின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தொழிலை வளம் பெறச் செய்தார். பாம்பேடையிங் நிறுனத்தின் நஸ்லி வாடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா ஆகியோர் இடையே நட்பு இருந்தது. அதில் விரிசல் ஏற்பட்டு மோதல் வெடிக்கும் வரை திருபாய் அம்பானியின் ஊழல்கள் வெளிப்படாமல் இருந்தன.  நஸ்லி வாடியா மோதல் அம்பானி, ராம்நாத் கோயங்கா மோதலாக திசை மாறியது. இதைத் தொடர்ந்து அம்பானியின் முறைகேடுகளை, அவருக்கு பின்புலத்தில் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு செயல்பட்டதை தற்போதைய துக்ளக் பத்திரிகையின்  ஆசிரியரா உள்ள ஆடிட்டர்  குருமூர்த்தி இன்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்.

குருமூர்த்தி, பத்திரிக்கையளர் மானெக் தவார் ஆகிய இருவரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஊழல்களை வெளிப்படுத்தினர். இந்த கட்டுரைகள் வெளியானதில் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரராக துாக்கிப் பிடிக்கப்பட்ட விபி சிங் உதவி, மறைமுகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பினனர் அம்பானிக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி செயல்பட்டதால், இது அவருக்கும் கோயங்காவிற்கும் இடையிலான மோதலாக மாறியது. இதற்காக 1988–89ம் ஆண்டில் இந்தியன் எஸ்பிரஸ் மீது ராஜீவ்  தலைமையிலான காங்கிரஸ் அரசு பலவிதமான வழக்குகளை தொடர்ந்து அந்தப் பத்திரிகையை முடக்கப் பார்த்தது.

அம்பானி இறந்த ஜூலை 8, 2002ம் அன்று கணக்குபடி ரிலையன்ஸ்குழுமம் விற்று முதல் 75 ஆயிரம் கோடி என்றால் அதன் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதை உணரலாம். தொடக்க காலத்தில் இதன் விற்றுமுதல் 70 கோடி தொழில் தொடங்க வெறும் 15 ஆயிரம் மட்டும் முதலீடு ஆகியவற்றின் மூலம் அம்பானியின் பின்புலத்தை அறியலாம். அந்த காலகட்டத்தில் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது என்பது கூடுதல் தகவல்.

பாலியஸ்டர் நுால் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 1981ம் ஆண்டு முகேஷ் அம்பானி பொறுப்பேற்றார். அதன் பின்னர் பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி ஆகியவற்றில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட தொடங்கியது. அந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார்.

இப்படி அம்பானி குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிதான் இப்போது ரபேல் ஊழல் குறித்து காட்டுக் கத்து கத்துகிறது. அனில் அம்பானிக்காவே ரபேல் ஊழல் நடப்பாக கூறும் காங்கிரஸ், முகேஷ் அம்பானியின் வளர்ச்சி பற்றி, அவருக்கு தங்கள் அரசு காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் பற்றி மூச்சுவிட வில்லை. ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் தனிப்பட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும்  ஊழல்  எதுவும் நடைபெறவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்னர் கூட காங்கிரஸ் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை.

சரி காங்கிரஸ் கட்சி, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஊழல் எதிர்பார்ப்பாளர்களாக மாறிவிட்டார்கள் என்று நினைத்தால் அதை தவறு என சமீபத்திய நிகழ்வு ஒன்று நிரூபித்து விட்டது.

கடந்த 12ம் தேதி முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணம் மும்பையில் நடந்தது. இன்றைய சூழ்நிலையில் மோடி வந்து சாம்பார் வாளி தூக்கி இருக்க வேண்டும். ஸ்மிருதி ராணி வாசலில் வந்து வரவேற்று இருக்க வேண்டும். ராஜ்நாத் சிங் திருமணத்திற்கு வந்து பாதுகாப்புஏற்பாடுகளை கவனித்து இருக்க வேண்டும். சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு வெளிநாட்டு விருந்தினர்களை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்வது என்றால் நம்ம அம்மா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தின் 2ம் பாகமாக அந்த திருமணம் நடத்திருக்க வேண்டும். அது அப்படி இருந்திருந்தால் மோடிக்கும், அம்பானி சகோதர்களுக்கும் உள்ள நட்பு வெளிப்படையாக தெரிந்திருக்கும். ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை அங்கே கூடியவர்களை அறிந்தீர்கள் என்றால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விடுவீர்கள். இந்த கட்டுரையின் முதலில் குறிப்பிடப்பட்ட பாடலில் திருப்புமுனையாக இடி இடிக்கும் மழை பெய்யும். அதில் நீல நரியின் சாயம் வெளித்து போகும். நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் என்று நரி காட்டை விட்டே ஓடிப் போகும்.

அப்படி இஷா அம்பானியின் திருமணமும் நீல நரிகள் பலவற்றின் சாயத்தை வெளுக்கச் செய்தது. இந்த திருமணத்திற்கு வந்தவர்கள் பட்டியல் இதோ. முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி, நிதியமைச்சர் சிதம்பரம், கர்நாடகா அமைச்சர் சிவக்குமார், எம்பி பிரஃபுல்படேல் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். மோடிதான் அம்பானி சகோதர்களின் பாட்னர் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்களே அந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களை தவிர தற்போது கூட்டணியில் உள்ள, கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மம்தா, சந்திரபாபு நாடு, சரத்பவார், தேவகவுடா ஆகியோரும் இந்த திருமணத்தில் ஆஜர். இவர்களின் இரட்டை வேடத்தை இந்த திருமணம் அம்பலமாக்கி இருக்கிறது.

பெரும்பாலும் தேர்தல் நேரங்களில் இது போன்ற பொது இடங்களில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அதன் அடிப்படையில் தான் ரஜினி, கமல், விஜயகாந்த் வெளிநாட்டு பயணங்களும் தேர்தல் அடிப்படையில் பேசப்படுகின்றன. தற்போது இந்த திருமணத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஆஜர். அதிலும் இந்திய பணக்காரரின் திருமண வீட்டில், இங்கு அவர் மத்தியில் பெட்டிகள் கைமாறுவது  பற்றி யாரும் பேசி இருக்க மாட்டார்கள். எந்தெந்தத மாநில தேர்தல் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முகேஷ் அம்பானி இவர்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுத்திருக்க மாட்டார். ஆனால் திருணத்திற்கே வராத மோடிக்கு மட்டும் அவரும் சரி, அவர் தம்பியும் சரி அள்ளி அள்ளி கொடுப்பார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

இஷா அம்பானியின் திருமணம் இவர்கள் நாட்டை ஆள்வதற்காக ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இல்லை என்று நிரூபித்து விட்டது. அவர்கள் நரி தான் என்று வெளிப்பட்ட பின்னரும் ராஜா என்று நினைத்து அவர்களை ஆட்சி செய்ய அனுமதிப்பது முட்டாள் தனம். நாம் முட்டாள்கள் என்று அவர்கள் நினைப்பதை ஒழித்து கட்ட வேண்டாமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close