செல்போன் பறிப்பு- யார் பொறுப்பு?

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Dec, 2018 12:42 pm
cellphone-snatching-awarness-to-public

இன்றைய நவீன உலகில் தகவல் தொடர்புக்கு நாம் அதிகமாக பயன்படுத்துவது செல்போன்கள் தான் என்பதை நாம் மறுக்க முடியாது. 5 வயதுடையவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் செல்போன் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.

ஏழை முதல் பணக்காரர்கள் வரையில் அவரவர் வசதிக்கேற்ப செல்பாேன்களை வைத்துள்ளனர். செல்போன் ஒரு புறம் நன்மைக்குரிய விஷயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதிலும் அதன் மூலம் உருவாகி வரும் ஆபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சாலையில் செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள், தங்கள் காதுகளில், ஹெட்போன் எனும் கருவியை பொருத்தியவாறு பேசிக்கொண்டு செல்வதால் அவர்கள் கவனம் சிதறி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

சாலையில் நடந்தவாறு செல்போனில் பேசிச் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் சுற்றுப்புரத்தை மறந்துவாறு பேசிச் செல்கின்றனர். இதுவே செல்போனை கொள்ளையடிக்கலாம் என்ற சிந்தனையை கொள்ளையர்களுக்குத் தோற்றுவிக்கிறது. செல்போனுக்குச் சொந்தக்காரர்களின் அலட்சியம் அவர்களுக்கு இழப்பாக மாறுகிறது. கொள்ளைபோன பிறகு புலம்பியோ, போலீசாரிடம் சென்று புகார் தெரிவிப்பதன் காரணமாக எத்தனை செல்போன்களை அவர்கள் தேடிக் கண்டுபிடித்துத்தர இயலும். 

மேலும் செல்போன் பறிப்பு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்களிடமிருந்து தினமும் செல்போன் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் தான் என்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல்.

இந்த சிறுவர்களை இயக்குவது, அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட்டு வரும் ஒரு பெரிய கும்பல் என்பதும் உண்மை. இதற்கு காரணம் சிறுவர்கள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டால் அவர்கள் வயதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பெரிய தண்ட‌னை வழங்கப்படுவதில்லை என்பதற்காகதான்.

உதாரணத்திற்கு செல்போன் பறிப்பு குறித்து ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுக்க பாேனால் செல்பாேனில் உள்ள ஐஎம்இஐ எண், மாடல், மற்றும் செல்போன் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றின் நகல்களை கொடுக்க வேண்டும். செல்போன்களை பறித்து செல்லும் திருடர்கள் பெரும்பாலும் குறைந்த விலைக்கு சில குறிப்பிட்ட வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர்.

அந்த வியாபாரிகள் அந்த செல்பாேனில் உள்ள ஐஎம்இஐ எண்களை கணினி மூலம் மாற்றி அதை அண்டை மாநிலத்திற்கு எடுத்து சென்று விற்று விடுகின்றனர். சமீபத்தில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ‌சென்னை பர்மா பஜார் மற்றும் மூர் மார்கெட் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த ஆயிரக்கணக்கான செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் பொதுமக்கள் தான் போதிய விழிப்புணர்வோடு சாலைகளில் செல்லும் பாேது தங்களது செல்போன்களை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசார் கருத்து தெரிவித்தள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close