மோடி குறித்த சாடல்...! திராவிட பாரம்பரியத்தை பின்பற்றுகிறாரா ஸ்டாலின்?

  பாரதி பித்தன்   | Last Modified : 31 Dec, 2018 10:53 am
modi-is-sadist-stalin-special-story

கஜா புயல் தமிழகத்தை புரட்டிப் போட்டது வேதனையானது தான். அதற்கு வந்து பார்த்துவிட்டு ஆறுதல் கூற வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பதுதான். அவ்வாறு நடக்காத போது ஆத்திரத்தின் உச்சத்தில் திட்டுவது அனைவரின் வழக்கம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாடிஸ்ட் என்று திட்டும் தகுதி இவருக்கு, இவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு தகுதி உள்ளாதா?

ஒரு போலீஸ்காரர் நல்லவனா? கெட்டவனா என்பதை யார் கூறுகிறார்கள் என்பதை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். போலீஸ்காரர் ரொம்ப கெட்டவர் என்று பொதுமக்கள் கூறினால் அவர் லஞ்சம் வாங்குவார், குற்றங்களை தடுக்க மாட்டார் என்று அர்த்தம். அதுவே ஒரு குற்றவாளி அந்த போலீஸ் ரொம்ப கெட்டவர் என்றால் குற்றவாளிகளை தண்டிப்பார். தவறுகள் நடக்க விடமாட்டார் என்று அர்த்தம். அதே போல தான் சாடிஸ்ட் விவகாரமும். ஸ்டாலின் வந்த பாரம்பரியம் எப்படி என்பதை அறிந்து கொண்டால் பிரதமர் மோடி சாடிஸ்ட் என்பது உண்மையா என்பதை அறிந்து கொள்ளலாம்.

திராவிட கலச்சாரத்தின் எண்ணம் முழுவதும் ஆபாசத்தையே சுற்றி வளைத்தது. சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியினர் அறிஞர் அண்ணாவிற்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாச்சாரத்தை தாங்கிபிடிக்கும் இவர்கள், பதறி இருக்க வேண்டும். 


ஆனால் அண்ணாவின் பதில் வேறு விதமாக இருந்தது. அவர் பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல என்றாராம் அண்ணா. பானுமதி தபால் அலுவலகத்தில் உள்ள மைக் கூடு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்பது அண்ணாவின் பதில். இவரின் வாரிசுகள் தான் இன்று பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள்.

காங்கிரஸ் எம்எல்ஏ அனந்த நாயகி திராவிட நாடு என்றால் என்ன என்று கேட்கிறார். அதற்கு முத்தமிழ் அறிஞர் கொடுத்த பதில் நாடாவை அவிழ்த்தால் பாவாடையை தூக்கினால் தெரியும் திராவிட நாடு என்பது. சட்டசபையே அதிர்ந்ததும் பைலின் நாடாவை அவிழ்ந்து அதனை மூடியிருக்கும் துணி பாவாடை துாக்கினால் தெரியும் என்று சமாளித்தவர் நம் தமிழினத் தலைவர்.

கலைஞர் உதிர்த்த தத்துவ முத்துக்களை ஒரு பெரிய பட்டியலே இடலாம். பருவப் பெண்களின் தோள்களில் கைபோட்டு பவனி வருபவர் காந்தி என்றார்.

சிரிமாவோ பண்டாரநாயகா நேரு சந்திப்பை பற்றி கூறிய கலைஞர் நேருவோ, மனைவியை இழந்தவர், அவரோ கணவரை இழந்தவர் அவர்கள் இருவரும் 2 மணி நேரம் அப்படி என்ன பேசினர் என்று ஒரே போடு போட்டார்.

காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி விதவை இந்திரா என்றவர் அவரை திமுகவினர் கல்லால் தாக்கி தலையை உடைத்து ரத்தம் கொட்டிய போது எழுத முடியாத அளவிற்கு ஆபாசமாக விமர்சனம் செய்தது கலைஞர் தான்.

வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ்புகழ், சாணான் , மரமேறி, எருமைத் தோலன், கறுப்பன், வழிபோக்கன், இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி, பரதேசி, காந்தாரி, சூர்ப்பநகை, மரம்வெட்டி, தரகர், கம்ப்யூனிஸ்ட் வேடதாரி போன்ற பண்பட்ட சொற்களால் கட்சி, ஆண்,பெண் வேறுபாடு இல்லாமல் விமர்சனம் செய்தவர் கலைஞர்.

அறிஞர் அண்ணா எழுதிய அண்ணாவின் ரோமாபுரி ராணிகள், கபோதிபுரத்துக் காதல், குமரிகோட்டம் , போலீஸ்காரன் மகள் போன்ற தமிழ் இலக்கியத்தின் புகழ் பரப்பும் நுால்களை படித்து பாருங்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்டவர்கள் தான் இன்று மோடியை சாடிஸ்ட் என்று திட்டுகிறார்கள். அதுவும் இதயமில்லாத இத்தாலிக்காரியை, அவரின் மகனை மேடையில் வைத்துக் கொண்டே திட்டுகிறார்கள். இதற்கு காரணம் மக்களின் மறதி தான்.

4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு இருந்த நிலை அனைவருக்கும் தெரியும், அதற்கு முன்பு திமுக ஆட்சியில் தமிழகத்தின் தவிப்பை அனைவரும் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதனால் தான் இது போன்ற தடித்த வார்த்தைகளால் அவர் மோடியை அர்ச்சனை செய்கிறார்.

இவர் ராகுல் பிரதமர் என்று கூறியதையே மற்றவர்கள் ஏற்காத போது, மோடியை திட்டியதை மட்டும் ஏற்கவா போகிறார்கள். ஆனாலும் இவர்கள் இப்படி பேசுவதற்கு காரணம் நாஞ்சில் மனோகரன் பாணியில் கூற வேண்டும் என்றால் காலத்தின் குற்றம் அல்ல கருவின் குற்றம்.

அதை வரும் தேர்தலில் உணர்த்த வேண்டிய கடமை தமிழகத்திற்கு உள்ளது.அதிலும் கலா்சாரத்தை பண்பாட்டை பாதுகாக்க வேணடும் என்று பாடுபாடும் தமிழர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் வீட்டில் உள்ள டீன் ஏஜ் வாலிபர்கள், பெண்களை காப்பாற்ற முடியும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close