செல்ஃபி மோகம்...! ஏற்படும் சோகம்...!

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Dec, 2018 03:58 pm
159-people-died-in-selfie-accidents-in-india-this-year

உலகிலேயே செல்ஃபி புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் விபத்துக்களால் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

உலகம் முழுவதும் மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்துக்கொள்வதை அனைவரும் பெரிதும் விரும்புகின்றனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அப்போது திடீர் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். இதில் உலகில் இதுவரை நடைபெற்ற மொத்த செல்ஃபி விபத்துக்களில் 60 சதவீதம் விபத்துக்கள் இந்தியாவில் நடைபெற்றதாக ஒரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

செல்ஃபி விபத்துகளில் இந்தியாவில் இந்தாண்டு மட்டும் 159 பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ‌16 உயிரிழப்புகளுடன் ரஷ்யா 2வது இடத்திலும், 14 உயிரிழப்புகளுடன் அமெரிக்க 3வது இடத்திலும், 11 உயிரிழப்புகளுடன் பாகிஸ்தான் 4வது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் இளைஞர்களே செல்ஃபி விபத்துகளில் உயிரிழந்திருப்பது தான் அதிர்ச்சி தகவல். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் இளைஞர்கள் ஆபத்தான் இடங்களில் செல்ஃபி எடுப்பதால் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். மேலும் ரயில் பாதையில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்த ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய மரணத்தையும் செல்போனில் பதிவு செய்துள்ளார் என்பது தான் கொடுமையின் உச்சக்கட்டம். 

கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது போன்று இயல்பான தோற்றத்துடன் புகைப்படம் கிடைப்பதால் அதிகமானோர் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அரசாங்கம் எவ்வளவு சொன்னாலும் அவரவர் உயிர்களை அவர்களே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம் என்பது தான் உண்மை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close