சோனியா குடும்பத்திற்கு புரோக்கர்கள் மட்டும் போதாதா?

  பாரதி பித்தன்   | Last Modified : 03 Jan, 2019 10:41 pm
brokers-are-enough-for-sonia-s-family

முன்னாள் மத்திய அமைச்சர் அந்தோணி, இந்திய அரசியலில் பெரும் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியில் வெகு சொற்பமாகக் காணப்படும் நேர்மையாளர்களில் ஒருவர். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராணுவ ஒப்பந்தங்களில் சோனியாவோ, ராகுலோ நேரடியாகத் தலையிட்டதே இல்லை என்று சத்தியம்செய்து கூறி உள்ளார். அது உண்மையாகக்கூட இருக்கலாம். அவர்கள் தலையிட்டால்தான் ராணுவ ஒப்பந்தங்கள் நிறைவேறும், சேர வேண்டிய கமிஷன் கிடைக்கும் என்று அர்த்தம் இல்லையே.

ரியல் எஸ்டேட் தொழில் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அதில் விற்பனை செய்பவனும், வாங்குபவனும் கடைசி வரை நேரில் களத்திற்கே வரமாட்டான் என்பது தெரியும். எல்லாமே புரோக்கர்கள் செய்வது தான். அந்த புரோக்கர் எப்படிப்பட்டவர் என்பது தான் கேள்வி.

காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய ஊழலாக கருதப்படுவது போர்போர்ஸ் பீரங்கி ஊழல். இதில் ஸ்நாம் பரோகெடி என்ற கம்பெனியின் பிரதிநிதியாக இந்தியாவில் செயல்பட்டவர் ஆட்டேவியோ குவாட்ரோச்சி என்ற இத்தாலிய நாட்டைச் சேர்ந்த புரோக்கர். இவருக்கும் சோனியாவிற்கும் மிக நெருக்கம் என்று கூறப்பட்டது. அவர் சோனியாவின் உறவினர் என்று கூட சொல்லுவார்கள். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் திட்டமிட்ட ரீதியில் இந்தியாவை விட்டு தப்பி செல்ல, மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் போர்போர்ஸ் வழக்கில் தண்டனை பெறாத வகையிலேயே வழக்கின் போக்கு சென்றது. இதற்கு பின்புலம் சோனியாதான் என்றும், அதற்காக மன்மோகன் சிங் ஒத்துழைத்தார் விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி குவாட்ரோச்சி தப்பிச் செல்ல ஏற்பாடு செய்த பிறகு, அந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய அப்போது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங்,  ஓர் மனிதனை எத்தனை ஆண்டுகள் தான் துன்பப்படுத்துவது என்று கூறியிருந்தார் என்பது நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

குவாட்ரோச்சி, அவரது ராணுவ தளவாட வரத்தகத்தில் புரோக்கராக ஈடுபட்டதன் மூலம், ராஜீவ், அல்லது அவரின் குடும்பத்தினர் நேரடியாக இந்த ஆயுத பேரத்தில் ஈடுபடாமல் வளம் கொழிக்க செய்தார் என்பது அந்தக் காலகட்டத்தில் நம்நாட்டு பத்திரிகைகளில் வெளிப்படையாக உலா வந்த செய்தி.

அதே போலத்தான் தற்போது அகஸ்டா வெஸ்டலேண்ட் ஒப்பந்தத்திலும் நடந்துள்ளது.  இதில் புரோக்கராக செயல்பட்ட பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், இந்த ஒப்பந்தம் இத்தாலிய நாட்டின் மகளின் தொடர்பால் ஏற்பட்டது என்ற போட்டு உடைத்துள்ளார்.

போஃபார்ஸ் ஊழல் பின்னணியிலும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்திலும் சோனியாவிற்கு நெருக்கமானவர்களின் கையே  ஓங்கி இருந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் ஏன் நேரடியாக ஓர் பேரத்தில் களம் இறங்க வேண்டும்,

இப்போது அமைச்சர் அந்தோணி போன்றவர்கள் நேரடியாக களம் இறங்கவில்லை. எந்த ஒப்பந்தத்திலும் தலையிடவே இல்லை என்று சோனியாவிற்கு நற்சான்று பகிர்வது மக்களை ஏமாற்றத்தான். இது போன்ற ஒப்பந்தங்களை சோனியா குடும்பத்தினர் புரோக்கர்கள் மூலமே நடத்தியுள்ளனர் என்பதை ஏனோ அமைச்சர் அந்தோணி போன்றவர்கள், மக்கள் பார்வையிலிருந்து மறைத்து வருகின்றனர்.

இன்றும் பத்து அல்லது 15 ஆண்டுகளாவது காங்கிரஸ் தயவு இல்லாத கட்சி அல்லது கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமையும் என்றால் தான் காங்கிரஸ் செய்த அனைத்து ஊழல்களும் வெளியே தெரியவரும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அனைத்து ஊழல்களும் மறைக்கப்பட்டுவிடும். எது நடக்க வேண்டும் என்ற முடிவு மக்களாகிய நம் கைகளில் தான் உள்ளது. நாம் அதை உணர்ந்து இருக்கிறோமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக நம்முன் எழுந்து நிற்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close