"பிண"ராயி விஜயன்: பேய் அரசாண்டால் பிணம் தின்னும்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 03 Jan, 2019 10:54 pm
pinarayi-vijayan-kerala-sabarimalai

சபரிமலையில் 2 பெண்கள் ஐயப்பன் சன்னிதானத்திற்குள் முறைகேடாக நுழைய வைக்கப்பட்டுள்ளனர். இதை "பிண"ராயி விஜயன் தலைமையிலான அரசு வெற்றியாக சுட்டிக்காட்டி உள்ளது. இது வெற்றியா, தோல்வியா என்பதை விட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்திய வழிமுறை சரியா தவறா என்பது தான் கேள்வி.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் வர வேண்டும் என்றால் சுமார் 25 வருடத்திற்கு முன்பு அவர் ஷாகா என்று கூறப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் அன்றாட பயிற்சிக்கு வந்து இருக்க வேண்டும் என்று புதுக்கோட்டையை சேர்ந்த மறைந்த பெரியவர் ஒருவர் கூறினார். அதே நிலைதான் இடதுசாரிகளுக்கும். சுதந்திரம் பெற்ற காலத்தில் இடதுசாரிகள் எதிர்கட்சியாக இருந்தார்கள். அதன் பின்னர் ஒட்டுமொத்த தேசிய அரசியலில் அவர்கள்  தொடர் தோல்வியை தழுவி வந்தாலும், மத்தியல் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடி சமூதாயத்தின் எல்லா மட்டத்திலும், சிந்தாந்த ரீதியில் தங்கள் பிடியை இறுக்கி கொண்டனர். அதனால் இன்றைக்கு பியுன் முதல் முதன்மை செயலாளர் வரை, சார்பு நீதிபதி முதல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வரை, ஏரியா நிருபர் முதல் தலைமை நிருபர்கள் வரை,  பலர் இடதுசாரிகளாக இருந்து வருகிறார்கள்.

மார்க்ஸும் சரி அவர் உருவாக்கிய கம்யூனிஸமும் சரி, தேசம், தேசியம், தேசிய அடையாளம் என்பதை கொள்கைரீதியில் ஏற்றுக்கொண்டதில்லை. அதுமட்டுமல்லாது அப்படிப்பட்ட கொள்கைகளையே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறது கம்யூனிஸம். அதையொட்டி ஒரு நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம், கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் புகுந்து கொண்டு அதை சிதைத்து, மக்களை அவற்றின் மீது நம்பிக்கையறச் செய்து, சம்பந்தப்பட்ட நாட்டை தங்கள் வசம் கொண்டு வருவது இடதுசாரிகளின் நிலைப்பாடு. உலகவரலாற்றை நன்கு படித்தவர்கள், இடதுசாரிகள் கைகளில் சிக்கிய நாடுகளை சீர்தூக்கிப் பார்த்தால், கலாசாரரீதியில் அவை எவ்வளவு சிதையுண்டு போயுள்ளன என்பது நன்கு புலப்படும்.

இதே நடைமுறையை தான் அவர்கள் இந்தியாவிலும் கடைபிடிக்கிறார்கள். ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது இல்லை. எனவே அது தவறில்லை: ஓர் பெண் அவளது கணவனுடன் கொண்டுள்ள திருமண உறவிற்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளும் கள்ளக்காதல் தவறு இல்லை: நைஷ்டீக பிரம்மச்சரியாக இருந்து வரும் பகவான் ஐயப்பன் குடிகொண்டுள்ள சபரிமலைக்கு எந்த வயது பெண்டிரும் செல்லாம் என்ற  தீர்ப்பு: அயோத்தி ராம்ஜன்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கை, இதுவொன்றும் தலைபோகிற விஷயமல்லை, எனவே இதை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க மறுப்பது: ஹிந்துகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தினஅ தீர்ப்பு மீதான சீராய்வு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பது போன்றவை நாட்டின் உச்சபட்ச அமைப்புகள் எந்த மனநிலையில் இருக்கின்றது என்பதை வெளிப்படையாகக் காட்டி வருகின்றன. அவர்கள் மனதில் இடதுசாரிகள் நிலைப்பாடு இருப்பதால் தான் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைத்து, நாட்டில் குழப்பதை உருவாக்கி வருகின்றனர்.

அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு நினைத்திருந்தால், சபரிமலை கோயில் நிர்வாகத்தை அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்க வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தில், சம்பந்தப்பட்ட மதம் சார்ந்த மக்களின், மற்றும் ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை எடுத்துக்கூறி தீர்ப்பை திருத்தச் சொல்லி மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். அதற்கு பதிலாக திருட்டுத்தனமாக இரு பெண்களை பர்தா அணியச் செய்து கோயிலின் பின்புறமாக அழைத்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய வைத்தது, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து இருக்கிறது. தன் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கூட மாலையை கழற்றி விடும் பக்தர்கள் மனதில் இடது சாரிகள் நெருப்பை அள்ளிப் போட்டுள்ளார்கள்.

இடதுசாரிகளின் இது போன்ற நிலைப்பாடுதான் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு, மதம் வேறு என்று வாழும் மக்கள் மத்தியில், தாங்கள் சார்ந்த எந்த விஷயத்தையும் அரசியல் சரியாக  அணுகினால் மட்டுமே  எதிர்காலத்தில் சரியாக அமையும் போல் உள்ளது என்ற சிந்தனையை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது சபரிமலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தூண்டுதல் காரணமாகவே நடைபெற்று வருகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும், கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனும் திரும்பத் திரும்ப சொல்லி வருவது ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை தவறாக சித்தரிக்கும் போக்காகவே நிலவி வருகிறது. இது பக்தர்களாக முன்னெடுத்துச் செல்லும் தன்னெழுச்சி போராட்டம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். சபரிமலை பக்தர்கள் எல்லாம் பாரதிய ஜனதாகாரன் என்றால் உள்ளாட்சி தேர்தலில் கூட அவர்களால் ஓர் தொகுதியில் கூட ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதற்கு கம்யூனிஸ்டுகள் பதில் சொல்லியாக வேண்டும்.

 தமிழகத்தைப் போல் இல்லாமல் கடவுள் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தங்களின் மத அடையாளங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த மாநிலத்தில் இது போன்ற விவகாரத்தை தொடங்கி, ஐயப்ப பக்தர்களிடம் பிணராயி விஜயன் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டு வருவது தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்த இடதுசாரிகள், மக்களிடம் அங்கீகாரம் இழப்பதற்கும் தொடங்கி இருக்கிறார்கள் என்பதையே காட்டுவதாக உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close