“பப்பு”  என்றால் நேர்மை என்று அர்த்தம்: ஹமாம் கிடையாது..!

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Jan, 2019 10:39 pm
pappu-meant-as-honest-its-not-hamam

கல்லுாரிகளில் விடுமுறைக்கு காரணம் கிடைக்காவிட்டால் மாணவர்கள் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று திடீர் போராட்டம் நடத்துவார்கள். அது போலவே தற்போது எம்பிக்களுக்கு ஆவேசம் காட்ட.வேண்டுமானால், காரணம் எதுவும்தேவையில்லை, ரஃபேல் ஊழல் என்று கூச்சல் இட்டால் போதும் பாராளுமன்றம் அமளிதுமளி ஆகிவிடும். அதுவும், நேர்மையின் பொருளாக இருக்கும் ராகுல்(பப்பு)விற்கு ஊழல் என்பது நெருப்பு போன்றதே, அதன் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய ரஃபேல் புயல் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தை மையம் கொண்டது. 

அதுவும் ரஃபேல் ஊழல் பற்றி அ முதல் ஃ வரை அறிந்த ராகுலிடமா பாஜகவின் நாடகம் எடுபடும். பப்புவிடம் எத்தனை ஆதாரங்கள்; ஆவணங்கள் உள்ளது என பாஜக காரர்களுக்கு தெரியுமா? 

கோவா சுகாதார அமைச்சர் விஷ்வஜீ்த் ரானே பேசிய ஒலி நாடாவை வெளியிடுவேன் என்று பப்பு சொன்னதும், எல்லோரும் ஆடிப் போய் அது உண்மையா; உண்மையா என்று அலறினர். அது மட்டும் பொய்யா இருந்தா, உன்னை  நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே விடமாட்டோம் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நம்ம பப்பு இந்த பயம் போதும் என்று, தேங்க்யூ சொல்லி அமர்ந்தார். ஆடியோ டேப் உரையாடல்  உண்மையா பொய்யா என்று எவனுக்கு தெரியும் சும்மா அள்ளிவிடுவதுதானே என்பது பப்புக்கு தெரியாத என்ன? நாட்டிற்கு ஒரு கேடு என்றால் எவன் வீட்டு பெட்ரூமையும் கூட எட்டிப்பார்க்க காங்கிரஸ் நிர்வாகிகள் தயங்கமாட்டார்கள். அதனால் தான் மனோகர் பாரிக்கர் வீட்டு பெட்ரூமை எட்டிப்பார்த்து அங்கு ரபேல் பைல்கள் அடிக்கி வைத்திருப்பதை  கண்டிறிந்து உலகுக்கு வெளிப்படுத்துகிறார்கள். 

நம்ம பப்பு தன் கண்களால் பார்க்காமல் எதையும் நம்ப மாட்டார். அதனால் தான் அவர் பாரிக்கரோ, அருண் ஜெட்லியோ, ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. மோடிதான் கையெழுத்து போட்டார் என்று உண்மையை போட்டு உடைத்தார் பாருங்கள் பாஜக காரர்கள் ஆடிப்போய்விட்டார்கள்.  அது எப்படி பப்புக்கு மட்டும் இது தெரிந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். ஹெலிகாப்டர் வாங்கியது, போபர்ஸ் பீரங்கி வாங்கியது, என்று எது இந்திய ராணுவத்துக்கு வாங்கினாலும், ராகுலோட அம்மா சோனியாதானே முடிவு செய்தாங்க. பப்புக்கு அது .தெரியாதா, அப்படித்தானே இதுவும். 

பப்பு என்று கூப்பிட்டா வாயில விரல வச்சுக்கிட்டு அப்பான்னு ஓடி வர பப்புண்ணு நினைச்சிங்களா, பலர் கண்ணுல விரல விட்டு ஆட்டுற பப்புடா நான் என்று கபாலி ஸ்டைலில், ராகுல் கர்ஜிப்பதை பார்த்துதானே, நீங்க தான் பிரதமரா வருணும் என்று எல்லோரும் ஏங்குறாங்க. இதை ஏன், நாட்டுல உள்ள யாருமே புரிந்து கொள்ள மாட்டேங்குறாங்க. 

நம்ம பப்பு விண்டோஸ் இன்ஸ்டால் செய்துள்ள கம்ப்யூட்டர் மாதிரி அப்ப அப்ப, தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பாரு. 

ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்த விலை முதலில் 36 ஆயிரம் கோடி ரூபாய் என்று அவங்க அம்மா சோனியா சொல்ல சொன்னாங்க உடனே பப்பு அதை அப்படியே பத்திரிகைகாரர்கள்ட்டயும், பொதுக்கூட்டத்திலயும் சொன்னாரு. அப்புறம் 40 ஆயிரம் கோடி  என்று சொல்லுன்னாங்க பப்புவும் சொன்னாரு. அதுபோதாதென்று இல்லை இல்லை, நான் முன்னடி சொன்ன விலையெல்லாம் தப்பு, உண்மையான விலை 58 ஆயிரம் கோடி என்ற மக்களிடம் கூறு என்று அன்னை சோனியா சொன்னதும், ஏன் எப்படி என்று கேட்காமலே அதை பொது வெளியில், பப்பு போட்டு உடைத்தாரு. தற்போதைக்கு இறுதியாக கடைசி வெர்ஷன் அப்டேட் விலையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி என்று சொல் என்று உத்தரவு வந்ததும், உடனே பப்பு அதையும் அப்டேட் பண்ணினார். இவ்வளவு தானா எத்தனை கோடி ரூபாய் என்று வேணாலும், அவர்ட்ட சொல்லுங்க, அதை இந்த காதில் வாங்கி, அதை மத்தவர்கள்ட்ட உடனடி அப்டேட்டா கக்கிடுவாரு.

அப்புறம் ஏன் குறைந்த எண்ணிக்கையில் விமானம் வாங்குறீங்க என்று போட்டாரு பாருங்க ஒருபோடு, அப்படியே பிரதமர் களை பப்பு மூச்சில சொட்டியது. அவருக்கு விவரம் தெரிஞ்சப்ப பாஜ ஆட்சி வந்திருச்சு, காங்கிரஸ் கட்சியா இருந்தாலும் இப்படித்தான் அவரு கேட்டாரு.  அப்பமே பப்புக்கு இந்த கோபம் உண்டு ஆனா அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா? அதான் இப்ப கேட்டாரு. இருந்தாலும் ஓர் முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு சட்ட மசோதாவை பொதுவெளியில் கிழித்து எரிந்தார்.

வாஜ்பாய் ஆட்சிக்கு அப்புறம் விமான படையில் பலம் குறைஞ்சு போச்சுன்ணு கத்தறீங்களே, அப்புறம் நமக்கு சேர வேண்டியது சேந்தாத்தானே வியாபாரத்த முடிக்க முடியும். களத்தில இருக்கிறவன் கொக்கு சுடுற துப்பாக்கி வைச்சிருந்தாலும், நமக்கு கவலை இல்லை. வரவேண்டியது வந்து சேர்ந்தா எதுவும் சரிதான். ராணுவம் எக்கேடு கெட்டா நமக்கு என்ன?

சீனா பத்தி நம்மகிட்டேயே பேசுறாங்க, பப்புவோட கொள்ளுத்தாத்தா சீனி இந்தி பாய்பாய் என்று சொன்னத, எத்தன தடவ இந்திரா பாட்டி பப்புக்கு கதையா ராத்திர தூங்க வைக்கிறதுக்காக சொல்லி இருப்பாக, அது உங்களுக்கு தெரியுமா?

அதையல்லாம் மீறி சண்ட வந்தா இந்து தீவிரவாதிகள் இந்தியாவில் இருப்பதாலதான் இந்த சண்டையே...பாஜவுக்கு ஓட்டு போட்டா அவ்வளவுதான் என்று கத்தி கூச்சல் போட பப்புக்கு தெரியாதா?

பொதுவா ஒன்னு சொல்லுறேன் சுந்திரம் வாங்கி தந்த கட்சியை வச்சுக்கிட்டு இருக்கிற பப்புக்கு அதை விக்கவும் தெரியும், வாங்கவும் தெரியும். எப்போதும் பாஜ காரன் பருப்பு, நம்ம பப்பு கிட்ட வேகாது  ஆமாம் சொல்லிப்புட்டேன். ஏன்னா நேர்மை என்றால் பப்பு என்று மட்டுமே அர்த்தம். ஹமாம் கிடையாது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close