இது எப்போது அரங்கேறும் தோழர் பிணராயி?

  பாரதி பித்தன்   | Last Modified : 08 Jan, 2019 07:24 am

when-this-will-be-staged-pinarayi

மார்க்சியம் ஒரு சர்வதேசத்தை தழுவிய கொள்கை. எல்லா நாடுளில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அதில் உள்ளது. பைபிள், குரான், மனு நீதி போன்றவைகள் கூறும் தர்ம நியாயங்களை விட மார்க்ஸ் கண்டுபிடித்தவை தாங்கி பிடிக்க வேண்டியவை. அந்த கொள்கைகள் தான் உலகை ஆள வேண்டும். இந்த தத்துவத்தைதான் இடதுசாரிகள் துாக்கிப் பிடித்து வருகிறார்கள். அதனால் தான் மதம் என்பது அபீன் என்று கூறும் காரல்மாக்ஸ், தற்காலிக வலிநிவாரணியான மதத்தை விட நிரந்தர வலிநிவாரணியாக , உலக மக்களுக்கு, அவர் மார்க்சியத்தை அடையாளப்படுத்தி விட்டுச் சென்றார்.

இதன் அடிப்படையில் தான் தோழர் பிணராயி விஜயன், சபரிமலை ஐயப்பனை முன்னிறுத்தி ஆண், பெண் பேதம் ஏற்படுவதை உடைக்க சமீபத்தில் 2 பெண்களை புர்க்கா அணிய வைத்து,அந்த மாநில போலீசார் உதவியுடன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அது  ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து எல்லாம் இடதுசாரிகளுக்கு கவலையில்லை. மிப் பெரிய புரட்சி நடக்கும் போது இது போன்ற அவலக்குரல்கள் எழுவது சகஜம் தான். புரட்சியின்போது அதெல்லாம் சகஜம்தானே.

தோழர் பிணராயி விஜயன் தற்போது முதற்படியில் தான் காலடி வைத்துள்ளார். அதற்கு துணையாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் இருந்தது பேருதவியாக அமைந்துவிட்டது.

அடுத்து அவர் எந்த நோக்கில் அடியெடுத்து வைப்பார் என்பதற்கு தற்போது சீனா வழிகாட்டி உள்ளது. சீனாவில் கம்யூனிசம் கலந்த இஸ்லாமிய நடைமுறைகளை சட்டமாக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாம். நம்ம பிணராயி விஜயன் போல தைரியம் அவர்களுக்கு இல்லை என்பதால் இஸ்லாமிய தலைவர்களுடன் சேர்ந்து  ஆலோசித்து புதிய நடைமுறைகளை அந்த நாட்டின் அரசு உருவாக்கி உள்ளது. இப்போது கூட இஸ்லாமியர்கள் தாடி வளர்ப்பது, புர்கா அணிவது, வழிபாடு செய்வது, நோம்பு நோற்பது போன்றவை அங்குள்ள உய்கூர் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

பிணராயி விஜயன் ஐயப்பன் கோயில் விவகாரத்தில் வெற்றி ஈட்டிய பின்னர் சிறுபான்மையினர் நசுக்கி ஒடுக்கபடும் இந்த நாட்டில் அவர்கள் விடுதலைக்காக தன்னெழுச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வார். அப்போது இஸ்லாமியர்கள் தாடி வளர்ப்பது ,புர்கா அணிவது, வழிபாடு செய்வது, நோம்பு நோற்பது போன்ற சிறுபான்மையினர் அடையாளங்கள் எதுவும் இருக்காது. எங்கெங்கு காணிணும் தோழர், தோழியர் மயம் தான்.

அந்த சூழ்நிலையில் சிறுபான்மை, பெரும்பான்மை வேறுபாடு தெரியாத காரணத்தால் சிறுபான்மையினரை யாரும் ஒடுக்கமாட்டார்கள். என்ன ஒரே ஒரு விஷயம் பிணராயி விஜயனின் நல்ல நோக்கம் அறியாமல் யாராவது எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கும் சீனாவே வழிகாட்டுகிறது. அங்கு உய்கூர் மாகணத்தில் பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியர்கள் சித்ரவதை செய்யப்பட்டு 10 லட்சம் பேர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் மட்டும் அல்லாது பல்வேறு மதங்களின் அன்றாட நடைமுறைகளிலும் சீனா அப்படித்தான் பலாத்காரமாக பல்வேறு விஷயங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்தகைய சீன கம்யூனிஸ்ட்டுகளுக்கே ஓர் சிறந்த வழிகாட்டியாக விளங்கக்கூடிய வகையில் பிணராயி விஜயன், ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் நுழைவது தொடர்பான விவகாரத்தில் செயல்படுவதாக சீன கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ விரைவில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே நம்ம தோழர் பிணராயி விஜயன் சபரி மலை ஐயப்பன் விவகாரத்தில் வெற்றி பெற்றால், சீனாவின் துணை அதிபராக அமர்த்த அந்நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் சிந்தனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்தியர் ஒருவர் சீனாவின் துணை அதிபராவது நமக்கெல்லாம் பெருமை தானே.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.