அனைத்து மாநில கட்சிகளாலும், காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படுகிறதா...?

  பாரதி பித்தன்   | Last Modified : 13 Jan, 2019 01:43 pm

all-parties-boycotting-congress

பாராளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கப் போகிறது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 5 மாநிலத் தோல்விகளுக்கு பின்னர் பாஜக லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சியும் மாய வெற்றி அடைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் ஓட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பாஜகவும், சீட்டுகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியும் வென்று இருப்பதால் இந்த வெற்றியை மாய வெற்றியாக கணிக்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்த தேசிய கட்சிகளின் நிலை தற்போது வரை பரிதாபமாகவே உள்ளன.

பாஜக வடமாநிலங்களில் சிறப்பான இடத்திலும், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்ற சில மாநிலங்களில் அடையாளமே தெரியாத இடத்திலும் உள்ளது.

காங்கிரஸ் நாடுமுழுவதும் தன் பிடியை இழந்து விட்ட நிலையில் தென்மாநிலங்களில் மட்டும் அதன் வெற்றி பிரகாசமாக தெரிகிறது.  மாநில கட்சிகள் அந்த கட்சியை ஏற்றுக் கொண்டால் தான் ஒரளவு மதிக்கும் அளவிற்கு வெற்றியை உறுதி செய்ய முடியும். ஆனால் மற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற விடாது என்பது உபியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பாஜக, உ.பி.யில் பெற்ற வெற்றி அனைத்து கட்சிகளையும் அதிர்ச்சியடையச் செய்தன. கடந்த தேர்தலில் அதிகபட்சம் 51 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட பாஜ 73 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பகுஜன்சமாஜ் கட்சி பூஜ்யம். தற்போது அகிலேஷ் யாதவ் கனவு பிரதமரான மாயாவதி பெற்ற இடங்களின் எண்ணிக்கை இது . கடந்த தேர்தல் நிலைப்பாட்டை கடைபிடித்து இந்த தேர்தலி்ல போட்டியிட்டு தோல்வி பெற்றால் மயாவதி கட்சியை மூட்டை கட்டிவிட்டு போய்விட வேண்டியது தான். இதனால் அவர் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். சோதனை அடிப்படையில் நடந்த இந்த கூட்டணிக்கு புல்பூர், கோரக்பூர், கைராணா மக்களவை தொகுதிகளில் வெற்றி கிடைத்ததும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அதே நேரத்தில் இவர்கள் நெருக்கத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்பதும் உண்மை. இந்த நிலை காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல, நாட்டிற்கும் நல்லது அல்ல.

பாஜகவிற்கும் இந்த மாநிலத்தில் உச்சபட்ட இடங்களை பிடித்துவிட்டதால் அடுத்து இறக்கம் தான். அதைதான் மேற்குறிப்பிடிட தேர்தல்கள் அடையாளம் காட்டின. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியை மம்தா வரவேற்று இருப்பதன் மூலம் மேற்கு வங்கத்திலும் அவர் இந்த மனநிலையில் தான் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் கூட திமுக கூட்டணியில் காங்கிரஸ் தற்போது இருந்து வந்தாலும் கூட வாய்ப்பு இருந்தால் கழட்டிவிடப்படும் நிலையிலேயே இருக்கிறது. இந்த கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்படும் வரை நம்ப முடியாத நிலையில் தான் உள்ளது.

இப்படி ஒவ்வொரு மாநிலங்களாக கணித்தால் காங்கிரஸ் மக்களைவைத் தேர்தலில் 250 இடங்களில் போட்டியிட்டாலே அதிகம். அதில் தான் அவர்கள் மூழ்கி முத்து எடுக்க வேண்டும். ராகுலை பிரதமராக பதவியேற்கச் செய்ய வேண்டும் அது முடியுமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.