இது சிதம்பரம் ரகிசயம்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Jan, 2019 03:27 pm
chidambaram-s-confidential-special-story

ராகுல் ஆட்சியில் இருந்தே நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் சிதம்பரம். காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உரியவர் என்றால், ஊழல்களிலும் என்பது சொல்லாமலே விளங்கும். அதனால் தான் தோல்வி முகத்தில் இருந்தால் கூட அழகிரியின் உதவியால் வெற்றி பெற்றார் என்பது, அவர் மத்திய அரசில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்று இருந்தார் என்பது நன்கு விளக்கும். 

நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இவர் மட்டும் அல்லாமல், மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் என்று ஊழல் குடும்பமாகவே உருவெடுத்தது. 

2 ஜி ஸ்பெக்டரம், சாரதா நிதி நிறுவனம், ஏர்செல் மேக்ஸி என்று சிதம்பரத்தின் குடும்ப ஊழல்கள் எண்ணில் அடங்காது. இந்த ஊழல்களில் தொடர்புடைய மற்றவர்கள் அனைவரும் சிறைகளில் தஞ்சம் அடைந்து விட்டநிலையில் சிதம்பரம் மற்றும் குடும்பத்தினர் மட்டும் இன்னும் வெளியே சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தியும் சிதம்பரமும் சிக்கி உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டில் இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் இந்த நிறுவனம் ரூ. 4.62 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி கோரி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரிக்கை விடுக்கிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அந்த நிருவனம் ரூ.305 கோடியை இறக்குமதி செய்கிறது. சந்தை மதிப்பை விட 86.2 சதவீதம் கூடுதலாக ஒவ்வொரு பங்கையும் 862.31 என்ற விலைக்கு மொரீசியஸ் நிறுவனங்கள் வாங்குகின்றன.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை இந்திராணி தம்பதியினர் அணுகுகிறார்கள். இதற்காக கணிசமான தொகை கைமாறியதும், விஷயம் சுமுகமாக முடிகிறது. 

2ஜி வழக்கில் கூட ஏர்டெல் நிறுவன நிறுவனர் பாரதி மிட்டலையும் அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவையும் சந்திக்க வைத்தன் பின்னணியில் கார்த்தி இருந்ததை ராஜாவே தன் நுாலில் குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிலநாட்களில் ஜாமீனில் வந்தார். அதன் பின்னர் வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

மேற்கு வங்கமாநிலத்தை சேர்ந்த சாரதா நிதி நிறுவனம் 2500 கோடி ரூபாயை வசூலித்து ஏப்பம் விட்டது. அந்த தொகையை மடைமாற்றி விட்டதில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுடன் சிதம்பரத்தின் மனைவி நளினியின் பங்கு அலாதியானது. இது தொடர்பான வழக்கை இப்போது அமலாக்கத்துறை விவசாரித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்த வழக்க நடைபெற்று வருகிறது. 

இது போன்ற வழக்குகளில் சாதாரணமானவர் சிக்கி இருந்தால் வாழ்க்கை முழுவதும் கம்பி எண்ணிக் கொண்டு தான் இருக்க வேண்டும். ஜாமீன் வழங்கப்பட்டாலும் கூட நம்ம ஊரு போலீஸ் விதவிதமாக கேஸ் போட்டு ஜெயில் வாசலிலேயே கைது செய்யும். ஆனால் சிதம்பரம் குடும்பத்தார்கள் எந்த கவலையும் இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள். வெறும் 12 நாட்கள் மட்டும் கார்த்தி சிதம்பரம் சம்பரதாயமாக ஜெயிலில் இருந்தார். அதற்குள் விசாரணை முடிந்துவிட்டதாம். அவரை ஜாமீனில் விடலாமாம். நளினி சிதம்பரம் பாவம் பெண் அல்லவா, சிரமப்படக் கூடாது என்று விடுமுறை நாளில் கூட கோர்ட் கூடி அவருக்கு முன்ஜாமீன் வழங்குகிறது. சிதம்பரமும் அப்படித்தான். 

சிதம்பரம் குடும்பத்தாருக்கு நீதித்துறையும், மத்திய அரசின் கறுப்பு ஆடுகளும் செய்யும் சேவையில் பத்தில் ஒரு பங்கு மக்களுக்கு செய்தால் கூட உலகிலேயே முதலிடத்தை எளிதில் பிடிக்கும். ஆனால் அனைத்து மக்களும் நிதி அமைச்சர் ஆக முடியாது அல்லவா. அப்படியே மாறினால் கூட எதிர்கட்சி ஆட்சியில் கூட தனக்கு ஆதரவு நடவடிக்கைகள் இருக்கும் வகையில் லாபி செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. சுப்பிரமணியம்சுவாமி தற்போதுள்ள நிதி அமைச்சரே சிதம்பரம் குடும்பத்தாரின் நெருக்கமானவர்கள் என்று குற்றம்சாட்டுகிறார். நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவரின் குற்றச்சாட்டு உண்மை என்றே காட்டுகிறது. 

அதிஷ்டம் புயலாக வீசினால் தான் சிதம்பரம் குடும்பத்தாருக்கு நடப்பது போல நமக்கும் நடக்கும். அதற்கு வாய்ப்பே இல்லை என்னும் போது காசா பணமா சும்மாவே வயிற்றெச்சல் படலாம்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close