நாடாளுமன்றத் தேர்தல்: நாட்டு மக்களுக்கு கர்நாடகா விடுக்கும் அவசரச் செய்தி !

  பாரதி பித்தன்   | Last Modified : 18 Jan, 2019 05:56 pm
urgent-message-to-the-people-from-karnataka

புத்திசாலி அடுத்தவன் தவறில் இருந்து பாடம் கற்பான், முட்டாளோ தன்னுடைய தவறில் இருந்து கூட பாடம் கற்கமாட்டான் என்று ஒரு மூதுரை உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் தமிழர்கள் புத்திசாலிகள் என்று நிரூபிக்க வேண்டும் என்றால் கர்நாடக மக்கள் தற்போது செய்துள்ள தவறில் இருந்து பாடம் கற்க வேண்டும். 

தமிழகத்தில் நடைபெற்றுள்ள கடந்த பல தேர்தல்களில், நம்ம தொகுதியில மட்டும் அதிமுக வராது, ஆனால் அந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற லாஜிக்கான விமர்சனத்தை அனைவரும் கேட்டிருப்போம். திமுகவின் நிலையும் இதேதான். நோட்டா, வெற்றி பெறவே முடியாத கட்சி ஆகியவற்றுக்கு ஓட்டுப்போடுவது என்று ஏடாகூடமாக சிந்திக்காமல்,  வாக்களிக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில் தேர்தலில் கேலிக் கூத்தாக ஓட்டு போடுவது இதைவிடக் கொடுமை. இதனால் ஒரு நிலையான அரசு அமைய வேண்டிய இடத்தில் குழப்பம் தான் ஆட்சி செய்யும்.

தற்போது கர்நாடகத்தில் நடக்கும் ஆட்சி அது போன்றதுதான். கர்நாடகாவில் 222 தொகுதிகள் உள்ளன. மெஜாரட்டிக்கு 113 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் பாஜ 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 118 இடங்களில் பக்கத்து தொகுதிக்கார்கள் மன நிலை என்ன வென்றே அறியாமல் மக்கள் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். 

இதன் காரணமாக பாஜக நிலையான ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை. மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியாவது ஆட்சிக்கு வருமா என்றால் அந்த கட்சி 78 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. 

இப்படிப்பட்ட மக்கள் குழப்பாக வாக்களித்தன் விளைவு தான் இன்று கர்நாடகாவில் அனைத்து கேலிக் கூத்துக்களுக்கும் நடைபெற்று வருகின்றன. 

கவர்னர் னர் ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து விட்டால் அந்த கட்சியை ஆட்சி நடத்த அனுமதிக்கவிட்டு, பிரச்னைகள் அடிப்படையில் எதிர்கட்சிகள் ஆதரவு அளித்தால், அந்த கட்சி முறையாக ஆட்சி நடத்தும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற .பெயரில் ஒன்றை திணிப்பதன் மூலம் அரசியல் சாசன அனுமதியுடன் குதிரை பேரம் ஊக்குவிக்கப்படுகிறது. 

இதைவிடக் கேவலம் தேர்தலுக்கு பிந்தய கூட்டணி; மக்களை சந்திக்கும் போது பேசிய கொள்கைகளுக்கு எதிராக தேர்தலில் .தோல்வி அடையச் செய்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதை விட வரம்பு மீறல் எதுவும் கிடையாது. ஆனால் அதையே சட்டமாக்கி, அதற்கு நியாயங்களை காரண காரியங்களை பூவாகச்சூடிவிட்ட காரணத்தால் நடக்கும் நாடகத்தை மக்களாகிய நாம் கண்ணீருடன் காண வேண்டி இருக்கிறது. 

இப்படிப்பட்ட அசிங்கம் தான் கர்நாடகாவில் தற்போதுள்ள ஆட்சியை உருவாக்கி இருக்கிறது. பாரதிய ஜனதாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்றதும், ஆளுநர் காங்கிரஸ் கட்சியை அழைத்து ஆட்சி அமைக்கக் கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து அந்த கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாளமும் கூட்டணி அமைத்தது அரசியல் அநாகரீகம். அதுவும் கூட 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்காமல் 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி. பெற்ற மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹெச்.டி.குமாரசுவாமியை ஆட்சியில் அமர்ந்தியது, காங்கிரஸ் கட்சிக்கு ஓர் பொம்மை கிடைத்துவிட்டது என்பதற்காகத்தான். 

மக்கள் 9 தொகுதிகளில் பாஜவை வெற்றி பெற செய்யாத காரணத்தால் வெறும் 38 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற கட்சி இன்று மாநிலத்தை ஆள்கிறது. 

இதே நிலைதான் நாளை மத்தியிலும் உருவாகலாம். இன்று .மோடிக்கு எதிராகவோ, அவரை பிடிக்காமலோ மெஜாரிட்டி இல்லாமல் செய்தோம் என்றால் நாளை காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்காது . ஏனெனில் தற்போது வெளியாகி வரும் கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு நாடெங்கிலும் போட்டியிட்டால் கூட மொத்தம் 80 நாடாளுமன்ற இடங்கள் கிடைத்தால் பெரிய விஷயம் என்றே தெரிய வந்துள்ளது. அத்தகைய நிலையில் காங்கிரஸ் கட்சி, அதற்கு பதிலாக திமுக, அதிமுக, மம்தா, மாயாவதி, அகிலேஷ் என்று யாருடனாவது கூட்டணி வைத்து அவர்களை ஆட்சி செய்யச் சொல்லும். அப்படி ஆட்சிக்கு வருபவர் நிச்சயம் நாட்டை காப்பாற்ற முடியாது. 

காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்கவும், அக்கட்சி சொல்வதை மட்டுமே செய்வதையே முழுநேர ஆட்சிப் பணியாக அக்கூட்டணி ஆட்சி செய்ய வேண்டியிருக்கும். அது நாட்டிற்கு நல்லது அல்ல. கர்நாடக மக்கள் தற்போது அனுபவித்து வரும் இந்த பாடத்தை நாம் உணர வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ், அல்லது பாஜவிற்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதே கர்நாடகா இன்று நமக்கு கற்பித்துள்ள பாடம்.   மக்களாகிய நாம் அதை முறையாகச் செய்வோமா என்பதே தற்போது உள்ள பிரதான அரசியல் பிரச்னை என்று நாம் கருதுகிறோம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close