நான்கரை ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிட்டார் பிரதமர் மாேடி?

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 10:37 am
pm-modi-led-bjp-governments-achievements

குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, அந்த மாநில முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்த நரேந்திர மாேடி, 2014ல், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும், தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும், மாநிலத்தின், மின், நீர் தேவையை, தங்கள் மாநிலத்திற்குள்ளாகவே சமாளிப்பதிலும், குஜராத் சிறந்து விளங்கியது. 

இதனால், அந்த மாநில முதல்வராக இருந்த நரேந்திர மாேடி, நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் பிற மாநிலங்களும் வளர்ச்சி அடையும் என, மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவானது.

விளைவு, நாடு முழுவதும் வீசிய மோடி அலையால், முன்னெப்பாேதும் இல்லாத வகையில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பின், தன்னை ஆதரித்த சிறிய கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு, மத்தியில், தேசிய ஜனநாய கூட்டணி அரசு, ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. 

மோடி பிரதமர் ஆகிவிட்டார். இனி, நாடு முழுவதும், உடனடியாக பாலாறும், தேனாறும் பாயும் என நினைத்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மாேடி தலைமையிலான அரசு மேற்கொண்ட, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, விஜய் மல்லையா, நிரவ் மாேடிகளின் கடன் மாேசடி போன்றவை, ஊடகங்களில் முதன்மை செய்திகளாக இடம் பெற்றன. 

 

அதை காட்டிலும், ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், பிரதமர் மோடியும், ராணுவ அமைச்சர் நிர்மலாவும், நாட்டையே விற்றுவிட்டதாக செய்திகள் இன்றும் வெளியாகி வருகின்றன.

மருத்துவ படிப்புகளில் சேர, நாடு முழுவதும், நீட் தேர்வை அமல்படுத்தியதன் மூலம், ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு, கனவாகிப்போனதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை என்ன ஆனது என, இன்று வரை கேள்வி கேட்கப்படுகிறது. 

இது அனைத்திற்கும் மேலாக, பொருளாதாரத்தில் பின் தங்கியாேருக்கு, பொதுப்பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்து, அதை சட்டமாக்கியதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினருக்கு தீங்கிளைத்துவிட்டதாக சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள், மாணவர்கள் மட்டுமா, தொழில் துறையினரையும் விட்டு வைக்காமல், நாடு மழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்ற பெயரில், ஜி.எஸ்.டி.,யை அறிமுகம் செய்தார். இதன் மூலம், ஏராளமான சிறு வியாபாரிகளின் தொழில் முடங்கிவிட்டதாகவும் பேசப்படுகிறது.

 

தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள பிரதமர் நரேந்திர மாேடி, இந்த நான்கரை ஆண்டுகளில் அப்படி எதைத்தான் சாதித்தார் ?

இவருக்கு முன் பதவியில் இருந்த இந்திய பிரதமர்கள், எந்தெந்த நாட்டிற்கெல்லாம் செல்லவில்லையோ, அவற்றையெல்லாம் கணக்கெடுத்து, அவற்றில் ஒன்று விடாமல் வெளிநாடுகளுக்கு சென்று வருவதையே பிரதான வேலையாக மேற்கொண்டார் என்றால், அதுவும் பொய்யில்லை. அவர் அதையும் தான் செய்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில், இந்த அரசு என்னதான் திட்டங்களை நிறவேற்றியுள்ளது என பார்த்தால், அவற்றில் சிலவற்றை மட்டுமே இங்கு நினைவு கூற முடிகிறது. 

1. இந்தியாவிலேயே மிக நீளமான ரயில், தரை பாலமான போகிபீல் பாலத்தை, 2015 டிச., 25ல் துவக்கி வைத்தார். இந்த பாலம் ஒன்றும் புதிதாக கட்டப்படவில்லை. 2002ல் அடிக்கல் நாட்டப்பட்டு, பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட திட்டம் துரிதப்பட்டு, 2015ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது அவ்ளவு தான். அசாம் மாநிலத்தில், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

2. மஹாராஷ்டிரா மாநிலத்தில், சோலாப்பூர்- துல்ஜாபூர் - ஒஸ்மானாபாத் இடையே, தேசிய நெடுஞ்சாலை அமைக்க, 2014ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதை, 2019ல் ஜன., மாதம், மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்த, பிரதமர், இத்திட்டத்திற்காக, மத்திய அரசு, 750 கோடி ரூபாய் ஒதுக்கியதாக கூறினார்.


3. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில், சரக்கு போக்குவரத்து திடத்திற்காக, 2016 ஆகஸ்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2018ல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. 

4. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து, கிழக்கு பகுதியை இணைக்கும், ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டத்திற்காக, 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2018ல் திட்டம் நிறைவடைந்தது. 

5. ஹரியானா மாநிலத்தில், 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட, வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டம் நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் பாேடப்பட்டிருந்தது. அத்திட்டத்திற்கு, 2016ல் புத்துயிர் அளிக்கப்பட்டு, 2018ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

6. புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானோர் மிகச் சிறந்த சிகிச்சை பெறும் வகையில், மிகப் பெரிய கேன்சர் சிகிச்சைக்கான மருத்துவமனையை கட்டும் பணி, 2015ல் துவங்கப்பட்டு, 2018 டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதுவும் ஹரியானா மாநிலத்தில் உள்ளது. 

7. கேரளாவில், 13.1 கி.மீ.,நீள பைபாஸ் சாலை திட்டத்திற்காக, 1972ல் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 2015 வரை, 4.1 கி.மீ., நீள சாலை மட்டுமே போடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, 2019 ஜனவரியில், சாலை பணிகள் முடிக்கப்பட்டன. அது தற்போது, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

8. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில், முதன் முதலாக, ஏர்போர்ட் கட்டுவதற்காக, 2004ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும், கிராம மக்களின் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால், 2014 வரை, அந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதுவும், தற்போது கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

9. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷன்கங்கா நீர்மின் திட்டத்திற்கான பணிகள், 2007ல் துங்கப்பட்டன. எனினும், பாகிஸ்தான் குறுக்கீட்டால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பாக்.,சதி முறியடிக்கப்பட்டு, 2014ல் மீண்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2018ல் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.


10. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் வைஷ்ணோ தேவி காேவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ரோப் வே திட்டம், 2018ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 

தொடரும்...
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close