மத்திய அரசுக்கு எதிராக சுதேசி விழிப்புணர்வு இயக்கம்?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 23 Jan, 2019 01:36 pm
sudesi-is-against-to-central-government

RCEP - The Regional Comprehensive Economic Partnership  எனப்படும் பிராந்திய விரிவானப் பொருளாதாரப் பங்காளிகள் என்ற அமைப்பு, WTO-க்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய வர்த்தக / பொருளாதார ஒப்பந்த அமைப்பாகச் செயல்படுகிறது. 

“விரிவான பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு” என்ற அமைப்பு தான் இன்றைய உலகப் பொருளாதார வல்லுனர்களின் மிக முக்கியமான விவாதப் பொருளாகவும், உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தக் காத்திருக்கும் இந்த அமைப்பினை அத்தனை நாடுகளும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இதைப் பற்றிய விவாதத்தை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் முக்கியமாக விவாதித்து தீர்மானமாக வெளியிட்டிருக்கிறது.

இந்த அமைப்பின் அங்கத்தினராக ASEAN நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர் பிலிபைன்ஸ் உட்பட பத்து நாடுகளும், ஜப்பான், ஆஸ்திரேலியா நியூஸ்லாந்து, சீனா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகளும் அங்கத்தினராக இருக்கின்றனர்.  இந்த அமைப்பின் நாடுகளை மட்டும் கணக்கில் கொண்டால், உலக மக்கள் தொகையில் 45%த்தையும், உலக வர்த்தகத்தில் 30 சதவீதத்தையும் (49.3 ட்ரில்லியன் டாலர்), உலகத்தின் ஒட்டு மொத்த GDPயின் 39 சதவீதத்தையும் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய அமைப்பாக விளங்கும் இந்த RCEP அமைப்பு முழுமையாக இயங்கும் தருவாயில், இதுவே உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பெரும் சக்தியாக விளங்கும்.

இந்த அமைப்பு முன்னெடுத்துள்ள முக்கியமான விசயம் FREE TRADE AGREEMENT எனப்படும் வரிகளை விலக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஆகும். அதன் படி இப்பொழுது நடக்கும் இறக்குமதி வர்த்தகத்தில் சுமார் 90 – 92 சதவீத பொருட்களுக்கு ஜீரோ சதம் வரி என்ற வட்டத்திற்குள் ஒப்பந்த நாடுகள் வந்துவிடும். 

இந்த ஒப்பந்தத்தில் இது வரை கையெழுத்து போடாமல் இந்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பாராட்டுகிறது. இது ஆரம்பித்த 2012 நாளிலிருந்து இதுவரை 24 முறை கூடி பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தியிருக்கின்றது. ஆனால், இந்தியா தன் பிடியிலிருந்து சற்றும் தளராமல், தீர்க்கமாக சில நிபந்தனைகளை விதித்தும், வர்த்தக வரி விதிப்புகளில் சில சலுகைகளை முன்னெடுத்தும் விவாதித்து வருகின்றது. இந்தியா, தான் வழங்கும் சலுகைகளை மூன்று வகையாகப் பிரித்துள்ளது. அவை, 1, ASEAN நாடுகளுக்கென்று தனியாகவும், 2, ஏற்கனவே FREE TRADE AGREEMENT ல் கையெழுத்து போட்டுள்ள நாடுகள் என்று தனியாகவும், 3, FTAவில் கையெழுத்து போடாத ஆஸ்திரேலியா, சீனா, நியூஸிலாந்து ஆகிய நாட்டிற்கு தனியாகவும் முன்வைத்துள்ளது. 

சுதேசி விழிப்புணர்வு இயக்கம், RCEP ஒப்பந்தம் என்பது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் ஒப்பந்தமாக இருக்காது என்று கருதுகிறது. மாறாக, இந்த அமைப்பு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று வலியுறுத்துகிறது. காரணம் இறக்குமதியின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 2009-10ல்  7.7 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை 2017 – 18ல் 13 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் திறந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது, பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல், உள் நாட்டு வேலை வாய்ப்பினையும் பெரிதும் பாதிக்கும் என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கருதுகிறது. 

நிறைவாக, இந்த ஆர்.சி.ஈ.பி அமைப்பினால், பாரதத்தின் எந்தவொரு துறைக்கோ, எந்தவொரு அமைப்பிற்கோ, எந்தவொரு பகுதிக்கோ பிரயோஜனமாக இல்லை. இருக்கப்போவதும் இல்லை.. இந்த அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் தேசத்திற்குப் பேரழிவையே கொண்டு வரும். எனவே தேச நலனைக் கருத்தில் கொண்டு ஆர்.சி,ஈ.பி, அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சுதேசி விழிப்புணர்வு இயக்க அகில பாரத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close