டிரம்பெட் மோடி !

  பாரதி பித்தன்   | Last Modified : 23 Jan, 2019 11:04 pm
trumphet-modi-special-story

‛டிரம்பெட்’ என்று ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. அதில் கதாநாயகன் டிரம்பெட் வாசித்துக் கொண்டே வீதியில் செல்லும் போது, வீட்டில் அடைந்து கிடக்கும் எலிகள் கூட்டம் அங்கிருந்து வெளியேறி, அவரை பின்தொர்ந்து ஓடும். 
அதே போல தான், மோடி என்ற டிரம்பெட், இந்தியாவின் வெற்றி என்ற டிரம்பெட் வாசிக்கும் போது, வெளிநாட்டில், உள்நாட்டில் வாழும் இந்தியர்கள் அதை ரசித்துவிட்டு அடுத்தவேலையை பார்க்க சென்றுவிட்டனர். 

ஆனால், நாட்டை சுரண்டித் தின்ற எலிகள் கூட்டம், இப்போது மாநிலம் மாநிலமாக கூச்சலிடக் கிளம்பி விட்டார்கள். மோடி மற்றும் பா.ஜ.,வை கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம்; அதற்காக காரணமே இல்லாமல் எதிர்க்கவும் வேண்டாம். 

இடதுசாரிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி செய்த மாநிலத்தில் அவர்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றி, அதில் அமர்ந்த மம்தா;  மத்தியில் அமைந்த பா.ஜ., ஆட்சியில், ரயில்வே அமைச்சர் பொறுப்பு வகித்த மம்தா,  மோடியை விரட்டி அடிக்க ஒரு நெல்லிக்காய் கூட்டணி அமைத்து, அதன் கூட்டத்தை சமீபத்தில் கொல்கத்தாவில் நடத்தினார்.

 அதில் கலந்து கொண்ட பெரும்பாலான தலைவர்கள் பாஜவுடன் கூட்டணி வைத்தவர்கள் தான். அதே போல, தெரிந்தோ தெரியாமலோ அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

அதனால் தான், இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால், லலித் மோடி, நிரவ்மோடி, விஜய்மல்லையா வரிசையில் இந்த தலைவர்களும் வெளிநாட்டிற்கு ஓடி பிழைக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படித்தானே பாகிஸ்தான் அதிபர் தேர்தல் முடிவுகள் அமைகின்றன. 

மக்களை பொறுத்தளவில், மோடியின் ஆட்சியில் சங்கடங்கள் இருந்தாலும், நாட்டிற்கு நல்லது நடந்துள்ளது. 


எதிர்கட்சியின் தரத்தை, அவர்களின் கொள்கையை சென்னையில் நடந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா, கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டம் ஆகியவை விளங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 

டாலரை பிடித்து தொங்கி கொண்டிருந்த நாம், இப்போது ரூபாயில் வர்த்தகத்தை நடத்த தொடங்கி உள்ளோம். இதனால், அமெரிக்கா கூட அடங்கி நடக்க தொடங்கி உள்ளது. வங்கி கடன் வாங்கி கொண்டு ஏமாற்றியவர்கள் மீது திவால் சட்டம் பாயும் என்றதும், பணம் கட்டும் முயற்சி தொடங்கி உள்ளது.
 பாகிஸ்தான் உள்ளே புகுந்து அவர்களை தாக்கிய பின்னரும் உலகநாடுகள் மவுனம் காக்கின்றன. இந்த உறவை எதிர்கட்சிகள் பாதுகாப்பார்கள் என்பது என்ன நிச்சயம். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் நதிநீர் இணைப்பு பற்றி பேசியதோடு சரி; ஆனால் மோடி அரசு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.  

மக்களுக்கு காப்பீடு பற்றிய விபரங்கள் தபாலில் சென்று சேர்ந்துள்ளன. எதிர்கட்சிகளிடம் இது போன்ற திட்டம் எதுவும் இல்லை. 

உண்மையில் எதிர்கட்சிகள் மோடி அரசிடம் குறை கண்டுபிடித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்ன இன்ன திட்டம் வைத்திருக்கிறோம். அதன் மூலம் உலகின் குருவாக இந்தியா மாறும் என்று விளக்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்யவில்லை. அவற்றுக்கு பதிலாக மோடி வெளியேற வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தி உள்ளனர்.


எனவே, பிரதமர் மோடியையும், பா.ஜ., ஆட்சியையும் எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், அதற்கு வலுவான காரணத்தை முன்வைக்க வேண்டும். இல்லையேல், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும். 

எதையும் செய்யாமல், மோடியை விரட்டுவோம் என மட்டும் கூறினால், அந்த கூச்சல் மக்கள் மத்தியில் எவ்வளவு துாரம் எடுபடும் என்பதும் யாேசிக்க வேண்டிய விஷயம் என்பதை, எதிர்க்கட்சிகள் புரிந்து நடக்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close