மக்களுக்கு என்ன செய்தார் பிரதமர் மோடி ?- 2

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 06:35 pm
modi-government-s-achievement-part-2

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், ‛நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ், இரண்டு கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டம், டிச.,2018ல் செயல்படுத்தப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில், ஜார்சுகுடா ஏர்போர்ட் கட்டும் பணி, 2013ல் துவங்கி, மிகவும் மந்த கதியில் நடந்து வந்தது. அந்த பணி துரிதப்படுத்தப்பட்டு, செப்., 2018ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில், சம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கோடா - சம்பால் பால திட்டம், 2006ல் துவங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பணிகள் முடங்கி கிடந்தன. இறுதியில், மத்திய அரசு தலையீட்டால், பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2017  மே மாதம், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்ட மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்ததன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் மாேசடி தடுக்கப்பட்டது. 

இதன் மூலம், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட காஸ் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு, அதற்கு மானியமும் பெறப்பட்டது தடுக்கப்பட்டது. இதனால், மத்திய அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை குறைந்துள்ளதாக, அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக, வங்கிக் கணக்கில்லாத ஏழைகளுக்கு, எவ்வித நிதி வைப்பும் இல்லாமல், இலவசமாக வங்கிக் கணக்கு துவங்கி கொடுக்கப்பட்டது. 

‛ஜன் தன்’ என்றழைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 33 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையின் போது, எல்லா தரப்பு மக்களும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

கடந்த, 2016 நவம்பரில், பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்ததும், 'உலக அளவில், இந்திய பாெருளாதாரம் பாதாளத்திற்கு செல்லும்' என, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு, கடும் கண்டனமும் தெரிவித்தனர். 

இந்த நடவடிக்கைக்குப் பின், நாட்டின் பல பகுதிகளில், ஆங்காங்கே, கட்டுக்கட்டாக, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக்கப்பட்டு கிடந்ததையும், தீயிட்டு கொளுத்தப்பட்டதையும் பார்க்க முடிந்தது. 

அதே போல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக, புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி, அவற்றை பதுக்கி வைத்திருந்தவர்களின் வீடுகளில் சாேதனை செய்யப்பட்டு அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இந்த செய்திகளும் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின. இதன் மூலம், பணமதிப்பீட்டு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கறுப்பு பண முதலைகள், தங்களிடம் இருந்த கறுப்பு பணத்தை கிழிக்கவும், எரிக்கவும் செய்தனர். 

பல இடங்களில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்ட கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் செலுத்தப்பட்டு, அவற்றிற்கு பதிலாக புதிய நோட்டுகள் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலத்திற்குள், 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதன் மூலம், பழைய ரூபாய் நோட்டுகளாக பதுக்கப்பட்ட கறுப்பு பணத்தின் பெரும் பகுதி, அதை பதுக்கி வைத்தவர்களாலேயே, கிழிக்கப்பட்டும், தீயிட்டு கொளுத்தப்பட்டும் அழிக்கப்பட்டது. 

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றதால், பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கள்ள நோட்டு வருகை முற்றிலும் தடை செய்யப்பட்டது. 

அதே போல், எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதால், தீவிரவாத இயக்கங்கள், பாக்., ஆதரவு பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டது. 

இதனால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவு, வன்முறை சம்பவங்கள் குறைந்ததாக, மத்திய உள்துறை அமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்தது. 

தொடரும்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close