3 நாள் கொண்டாட்டம்... காந்திக்கு பிடித்த பாடல்: குடியரசு தினம் பற்றி இதெல்லாம் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 07:25 am
interesting-facts-about-republic-day

இந்தியாவின் 70 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குடியரசு தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துக்கொள்வோம். 

 • 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி காலை 10.18 மணி முதல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 
 • 6 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 
 • இது தான் உலகிலேயே மிகவும் நீளமான அரசியல் அமைப்புச் சட்டமாகும். 
 • இந்திய சட்ட அமைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பு வரை பிரிட்ஷாரின் இந்திய அரசு சட்டம் 1935 பின்பற்றப்பட்டது.

 • இந்திய அரசியல் சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் கொண்ட குழு இயற்றியது. அரசியல் சட்டத்தை எழுதி முடிக்க 2 வருடம் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 • அப்போது இரண்டு பிரதிகள் மட்டுமே அப்போது எழுதப்பட்டது. ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று இந்தியிலும் எழுதப்பட்டது. 
 • 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியன்று இந்த இரண்டு பிரதிகளிலும் 308 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். 
 • இவை இரண்டும் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

 • ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டங்கள் 3 நாட்களுக்கு நடக்கும். ஜனவரி 29ம் தேதி விஜய் சௌவ்க் பகுதியில் இந்திய ராணுவத்தினர் சார்பில் ‘Abide by Me’பாடலின் இசை வாசிக்கப்பட்ட பிறகு கொண்டாட்டங்கள் நிறைவுப் பெற்றதாக அறிவிக்கப்படும். 
 • இந்த பாடல் தேச தந்தை மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறப்படுகிறது. 

 • குடியரசு தினத்தின் போது வீரதீர செயல்களுக்கான பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா, கிர்தி சக்ரா மற்றும் அசோக சக்ரா விருதுகள் வழங்கப்படும்.  
 • இந்திய அரசியல் சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உரிமைகள் குறித்த ஷரத்துகள் கனடா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்தும், குடிமகனின் கடமைகள் சோவித் யூனியனில் இருந்தும், மேலாண் கூறுகள் அயர்லாந்தில் இருந்தும், குடியரசு நிர்வாகம் பிரான்ஸ் சட்ட அமைப்பில் இருந்தும், நெருக்கடி குறித்த சட்டங்கள் ஜெர்மனியின் சட்டத்தில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. 
 • இந்திய அரசியல் அமைப்பு சட்ட முன்னுரையானது அமெரிக்க சட்ட அமைப்பின் முன்னுரையை போல “We the people…” என்று தொடங்கும். 
 • 1959 முதல் 1954 வரை குடியரசு தின கொண்டாட்டங்கள் இர்வின் மைதானம், செங்கோட்டை, ராம்லீலா மைதானம், கிங்ஸ்வே -ல் நடைபெற்றன. 
 • ராஜ்பாத்தில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பு 1955ம் ஆண்டு நடைபெற்றது. 
 • 1950ம் ஆண்டு நடந்த முதல் குடியரசு தின நிகழ்ச்சியில் அப்போதைய இந்தோனேசிய குடியரசு தலைவர் சுகர்னோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

 • 1955ம் ஆண்டு நடந்த முதல் குடியரசு தின அணிவகுப்பில் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

 • குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ரவீந்திர நாத் தாகூர் எழுதிய ஜன கன மன பாடல் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close