குடியரசு தின விழா அணிவகுப்பில் வரலாறு படைக்கவிருக்கும் அசாம் ரைபிள்ஸ் படை பெண்கள் யார் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 26 Jan, 2019 07:24 am
all-women-assam-rifles-contingent-to-march-past-on-republic-day-story

டெல்லி ராஜ்பாத்தில் வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் 70வது குடியரசு தின விழா அணிவகுப்பில் அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப்படையைச் சேர்ந்த பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அணியினர் முதல்முறையாக பங்கேற்று சாதனை படைக்க உள்ளனர். துணை ராணுவப்படையில் அசத்தும் இந்த பெண்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்று வரலாறு படைக்கவிருக்கின்றனர். இவர்கள் யார் தெரியுமா? 

நம் நாட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நமது இந்திய ராணுவம் தான் முழு காரணம் என்று சொல்லுமளவுக்கு எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் பாதுகாத்து வருகின்றனர் நமது வீரர்கள். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுத்து ராணுவத்தின் வலிமையை பறைசாற்றி வருவதோடு, இந்த தாக்குதலில் சிக்கு் வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். 

அப்படி நாட்டுக்காக இன்னுரையிரை மாய்த்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறது நமது இந்திய ராணுவமும், மத்திய அரசும். வீரர்களை இழந்த குடும்பத்தினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தும் , நாட்டுக்காக தங்கள் குடும்ப உறவுகளை இழந்திருந்தாலும் அதே குடும்பத்தில் இருந்து அடுத்தடுத்த நபர்கள் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். 

ஒரு ராணுவ வீரரின் எண்ணம் என்னவாக இருக்குமோ, அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணமும் பெரும்பாலாக அதுவாகத் தான் இருக்க முடியும். 

இதற்கு எடுத்துக்காட்டாக தான் கடந்த 2016ல் ஒரு நிகழ்வு நடந்தது. மணிப்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மேஜர் அமித் தேஸ்வால் மரணமடைந்தார். அந்த சமயத்தில் அவரது மனைவி நீட்டா தேஸ்வாலுக்கு ஹரியானா மாநிலம் அரசு வேலை தருவதாக கூறியது. ஆனால் அது வேண்டாம் என்று உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் இணையப்போவதாக கூறினார்.

அப்போது அவர், 'எனது கணவரின் மறைவுக்கு பின்னர் நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னையும், எனது குழந்தையையும் இந்திய ராணுவம் பார்த்துக்கொள்ளும் என்று மட்டும் எனக்கு தெரியும். எனவே தான் நான் இந்திய ராணுவத்தில் சேர்த்துள்ளேன்" என்று தெரிவித்தார். அவருக்கு அப்போது 3 வயதில் ஒரு குழந்தை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

எனவே, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் ராணுவத்தில் சேர விரும்பினால் அவர்களுக்கென்று ஒரு தனிப்படையை உருவாக்க முன்னதாகவே திட்டமிட்ட மத்திய அரசு, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2016ம் ஆண்டு இதனை தொடங்க ஆணை பிறப்பித்தது. துணை ராணுவப்படையில் அசாம் ரைபிள்ஸ் -பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டது. முதலில் 127 பேர் இணைந்த நிலையில், தற்போது 365 பேர் இதில் உள்ளனர். இந்த படையில் உள்ள அனைவரும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவி, மகள் அல்லது சகோதரிகள் ஆவர். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்ப பெண்கள் தாங்கள் விரும்பினால் இந்தப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

முதலில் ஆண்கள் படைப்பிரிவினருடன் சேர்ந்து தான் பெண்கள் படை பிரிவுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாகலாந்து திமாபூர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  

இந்நிலையில், வருகிற ஜனவரி 26ம் தேதி நாட்டின் 70வது குடியரசு தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் முன்னிலையில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறும். இதில் இந்திய ராணுவப்படை, சிஆர்பிஎப் உள்ளிட்ட பிரிவினர் கலந்துகொள்வர். கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய ராணுவப் படையின் பெண்கள் பிரிவு முதல்முறையாக ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, வருகிற 70வது குடியரசு தின விழா ஒத்திகையின் போது, வரலாற்றில் முதல் முறையாக துணை ராணுவப்படையான அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த பெண்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட பிரிவினர் அனைவரும் இதில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். மேஜர் குஷ்பூ கன்வர் இந்த அணிவகுப்பிற்கு தலைமை தாங்க உள்ளார். 

இந்த படைப்பிரிவைச் சேர்ந்த சுனிதா தபா, "எல்லையில் நடந்த தாக்குதலில் நான் எனது கணவரை இழந்தேன். அவரது மறைவிற்கு பிறகு நான் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்பினேன். எனது குடும்பத்தினரும் எனது முடிவுக்கு ஆதரவாக இருந்தனர். எனது கணவருக்கு மரியாதை செலுத்தவும், அவரது ஆசையை நிறைவேற்றவும் நான் ராணுவப்படையில் இணைத்துள்ளேன். தற்போது என்னை நினைத்து எனது குடும்பத்தினர்  பெருமைகொள்கிறார்கள்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

வாழ்த்துக்கள் வீராங்கனைகளே...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close