அரசியல் களம் இறக்கப்பட்ட அடுத்த வாரிசு...பிரியங்கா...

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Jan, 2019 06:47 pm
article-on-priyanka-vadra

இந்தியாவின் குடும்ப அரசியல் கட்சியான காங்கிரஸ், தன் அடுத்த அரசியல் வாரிசை களம் இறக்கி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில், 7.53 சதவீதம் ஓட்டு பெற்று, சோனியா, ராகுல் போட்டியிட்ட, 2 தொகுதியில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. 

கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி, இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தன்னை, அகிலேஷும், மாயாவதியும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு, கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்.

ராகுல் என்ன என்னவோ வேஷம் கட்டியும், காங்கிரஸ் இம்மி அளவு கூட நகரவில்லை. சமீபத்தில் நடந்த, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கு உயிர் ஊட்டினால் கூட, ராகுல் அதை எழுந்து நடமாட வைக்க, இன்னும் 2 தேர்தல்கள் தேவைப்படும். 

ராகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தால், இருக்கும் ஆதரவு கட்சிகள் கூட ஓடிவிடும் என்பதே நிதர்சணம்.
இந்தச் சூழ்நிலையில் தான், பிரியங்கா தொபுகடீர் என்று அரசியலில் குதித்துள்ளார். ஒரு புறம் சகோதருக்கு தோள் கொடுக்கும் அவர், மற்றொரு புறம், தாய் சோனியாவிற்கு மாற்றாக அமைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் பிராமணன் வேடம் கட்டி முற்பட்டோர் ஓட்டுக்களை கவர நினைக்கும் அதே நேரத்தில், தாய், கணவர் வழியில் பிரியங்கா கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களை வளைத்து போட உதவுவார் என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தான், பிரமர் மோடியின் தொகுதி அமைந்துள்ள, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக பிரயங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு பகுதிக்கு, மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராத்திய சிந்தியா, பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இளமை துடிப்பு உள்ள, இரண்டு வாரிசுகளும் உ.பி.,யை மாற்றி காட்டுவார்களா என்பது இனி வரும் காலத்தில் தான் தெரியும்.

 

ஆனால் இப்போதே தெரியும் விஷயம் ஒன்று உள்ளது. பொதுவாக பெரும்பாலனாவர்கள்  தன் சொந்த முயற்சியில் மட்டுமே அரசியலில் நுழைவார்கள். சிலரோ வாரிசுகளாக உள்ளே நுழைவார்கள். இந்த 2 தரப்பினர் மீதும் அரசியலுக்குள் நுழைந்த பின்னர் தான் கரை படியும். 

ஆனால் இந்தியாவில் முதல் முறையாக அரசியலுக்குள் நுழையும்போதே கரை படிந்த நிலையிலேயே  உள்ளே நுழைபவர் பிரியங்கா வாத்ராவாக மட்டுமே இருக்க முடியும்.
இவர் மீது நேரடியாக குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டாலும் கூட, இவரது கணவர் ராபட் வதேரா மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
அரியானா மாநிலத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து நிலத்தை அபரித்த குற்றச்சாட்டு உள்ளது. இதே போல ராஜஸ்தான் மாநிலத்திலும் நில மோசடி  குற்றச்சாட்டு உள்ளது.

 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போது, ரபேல் போர் விமானம் வாங்குவதில் கூட, வதேராவின் கரம் இருந்தது.அதில் அவர், முக்கிய இடைத்தரகராக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அந்த டீல் சரியாக  நடக்காமல் கை நழுவிப் போன காரணத்தால்தான், தற்போதைய பா.ஜ., அரசின் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக, காங்கிரஸ் கட்சி இவ்வளவு ஆவேசம் காட்டுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

தன் மீது குற்றச்சாட்டுக்களின் நிழல் கூட படவிடாமல், எதையும் தாங்கும் இதயம் போல, அனைத்து ஊழல் உள்ளடி வேலைகளிலும், வாத்ராவின் பங்கு மட்டுமே இருப்பது போல பார்த்துக் கொண்டவர் தான்  பிரியங்கா. 

நாளை ஏதேனும் பெரிய ஊழல் வெடித்தால் கூட, நம்ம ஊர் வழக்கப்படி, பாவம் பிரியங்கா, அவங்க நல்லவங்கதான். இந்த வாத்ரா தான் ரொம்ப கெட்டவர் என்ற புலம்பல் நாடு முழுவதுமிருந்து எழும்.

பிரியங்கா தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்ததும், பார்க்க பாட்டி இந்திரா  போலவே இருக்கிறார் என்று ஆச்சரியப்படத் தொடங்கி விட்டார்கள். அவ்வளவு அப்பாவி ஜனங்கள் நம் நாட்டு மக்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close