சீனாவின் உளவாளி ராகுல் காந்தி..?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 25 Jan, 2019 06:05 pm
china-s-spy-rahul

சீனாவுக்குக்கும் நேரு குடும்பத்திற்கும் ஏதோ பூர்வீக பந்தம் இருக்கும் போல… சீனாவின் பரம்பரை அடிமைகளாகவே நேருவும் அவரது சொத்தை வித்துகளும் நடந்து கொள்கின்றனர். 

சீனாவே ஒரு பயந்தாங்கொள்ளி நாடு. மங்கோலியாவுக்குப் பொழுது போகலைனா சீனாவில் வந்து தான் நாலு பேரைப் போட்டுத் தள்ளி விளையாடிட்டுப் போவார்கள். அடுத்ததாக ஜப்பான் தனக்கான அரசியல் அடிமையாகவும், வியாபாரத்திற்கான விளை நிலமாகவும் சீனாவைத் தான் பற்பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது. ஜப்பான் எழுந்திருன்னா எழுந்திருக்கவும் உட்காருன்னா உட்காரவும் செய்யும் அடிமையாக சீனா இருந்து வந்தது. திபெத்திலிருந்து, லாவோஸ் வியட்நாம், கம்போடியா தைவான் உட்பட தன்னைச் சுற்றியுள்ள அத்தனை சின்ன நாடுகளிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாடு பிடிக்கும் ஆசையில் வாய் வைக்கும் சீனா, எப்பொழுதாவது அதன் எல்லையில் பயன்படுத்தவே பயன்படுத்தாத ரஷ்யாவின் நிலத்தில் காலோ கையோ வைத்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா? செய்யவே மாட்டானுக. அவ்வளவு பயந்தாங்கொள்ளிப் பயலுக. ஏதாவது சின்ன நாடு அதுவும் வலிமை இல்லாத நாடு என்றால் உருட்டி மிரட்டி நாட்டைப் பிடிக்கப் பார்ப்பார்கள்.  

நம் நாட்டிற்கும் மாலத்தீவுக்கும் இருக்கும் ஒப்பீட்டு அளவு தான் சீனாவுக்கும் தைவானுக்கும் உள்ள நில அளவு. அவ்வளவு தம்மாத்துண்டு தைவானிடம் ஒரே சீனானு ஒரு கோஷத்தை வச்சு வம்பிழுத்தது சீனா. தைவானும் சீனா தான். ஹாங்காங் போல தைவானும் இணைந்து விட வேண்டும் என்று மிரட்டிப் பார்த்தார்கள். ஆனால் 2005ல் தைவான் தன் படைகளை சீனாவுக்கு எதிராக அணி வகுத்ததும் அப்படியே பம்மி பின் வாங்கியது சீனா அவ்வளவு தான் அவர்கள் வீரம். 

இவ்வளவு பெரிய கோழை நாட்டிற்கு அடிமையாக இருந்த நேரு பரம்பரையில் கடைசி வித்தும் சொத்தையாக இருப்பது பற்றி தான் இந்தக் கட்டுரை.

பஞ்ச சீலக் கொள்கை என்ற பாடாவதிக் கொள்கையை சீனாவுக்கு தன்னை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது போல உருவாக்கி கையெழுத்து போட்டவர் தான் நேரு மாமா. போரை சீனா வாபஸ் செய்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி செய்தியைச் சொல்ல பயந்த ஆகாசவாணி அண்டப்புளுகியதன் காரணகர்த்தாவும் இந்த மாமா தான்!

இரும்புப் பெண்மணி இந்திரா சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போட்டார்? படுக்கும் போது கூட வடகிழக்குப் பக்கம் தலை வைக்காமல் படுத்துக் கொண்ட கோழைப் பெண்மணி. 

அதன் பிறகு 1988ல் ராஜீவ்காந்தி சிறு குழுவுடன் நேரு விட்டுச் சென்ற அந்த வெள்ளைக் காக்காவைத் தூக்கிக் கொண்டு சீனாவுக்குப் போய் டெங் ஜியோபிங்கைச் சந்தித்து,  தன் குடும்ப அடிமை சாசனத்தை புதுப்பித்து விட்டு வந்தார். அப்பொழுதே வி.பி சிங் மிக அழகாகச் சொன்னார். “புருஷனும் பொண்டாட்டியும் கவர்ச்சியான ஒரு டூர் போயிட்டு வந்துட்டீங்க” என்று. அதன் பிறகு ராஜீவ் இறந்து போனதால் சோனியா தனியா சீனாவுக்குப் போகவில்லை. அல்லது இங்கே கொள்ளையடிக்கவே அந்தம்மாவுக்கு நேரம் போதாததால் சீனாவுடனான உறவைப் புதுப்பிக்கவோ, எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ விரும்பவில்லை. 

ஆனால், இப்பொழுது தாங்கள் செய்த ஊழல் குற்றச் சாட்டுகளிலிருந்து மீள முடியாது என்று தெரிந்தவுடன், சீனாவுக்கு உளவாளியாகக் கூட செயல்படத் தயாராகிவிட்டார்கள். மானசரோவருக்குப் பயணம் போனதாகச் சொல்லி விட்டு மாமா வேலை பார்த்துத் திரும்பியிருக்கிறார் ராகுல் காந்தி! இத்தனை நாள் இத்தாலி தேசத்துக்கான உளவாளிகள் என்று நினைத்து வந்ததை விட, சீன தேசத்தின் அடிமைகள் என்று தங்களை நிரூபித்துள்ளனர். இப்படியான ஓர் அடிமைக் குடும்பத்தினை ஆட்சிபுரிய விட்ட பாவத்திற்கு நாம் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டியது தான் என்றாலும், இவர்கள் எத்தனை ராணுவ மற்றும் இறையாண்மை ரகசியங்களை விற்றார்களோ என்று தெரியவில்லை. மத்திய அரசு சற்றும் தயவுதாட்சண்யம் பாராமல் ராகுல் மற்றும் அவர்கள் குடும்பத்தைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அப்ப இந்தியாவுக்கு எதிராகச் சீனா படையெடுத்து வந்ததே? நம் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதே? நம்மை வெற்றி பெற்றதே? இப்படியெல்லாம் கேள்வி கேட்கத் தோன்றினால்,  தோல்விக்குக் காரணம் நம் வீரர்கள் என்றோ, நம் படைபலம் என்றோ நினைக்காதீர்கள். நம் படை வீரர்கள் மிகவும் வீரமானவர்கள். நம் தளபதிகளை சுய முடிவு எடுக்க விடாமல் தடுத்து வைத்திருந்த நேரு என்ற அன்றையத் தலைவர் தான் சீனாவுடனான தோல்விக்குக் காரணம். (இன்னொரு தருணத்தில் நேருவின் வீர சாகசங்களை விரிவாக எழுதுவோம்) 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close