பிரியங்கா பாட்டியாகலாம் ஆனால் ராபர்ட்...?

  பாரதி பித்தன்   | Last Modified : 26 Jan, 2019 09:53 pm
priyanka-can-become-as-indra-but-robert

பாஜக உபி மாநிலத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் அவர்களே நினைத்து பார்க்காத வெற்றியை பெற்றனர். அதன் சட்டசபைத் தேர்தலிலும் அதே நிலை. அரசியல்வாதிகள் மட்டும் தான் முதல்வராக வருவார் என்ற நினையில் அந்த இடத்திற்கு யோகி ஆதித்தயநாத் அமர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். எதிர்கட்சிகளுக்கு ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என்பதை இந்த தேர்தல்கள் உணர்த்தின. அதை நன்கு புரிந்து கொண்டு அனை ஒன்றாக சேர்ந்ததும் லோக்சபா, சட்டசபைத்  இடைத் தேர்தல்களில் பாஜகவிற்கு தோல்வி முகம். இதனால் லோக்சபா தேர்தலிலும் இதே கூட்டணி வலுப் பெறும் என்று நினைத்த நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி இணைந்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் உபியின் 3 முனை தேர்தல் என்பது வெளிப்படையாக தெரிந்தது. இதில் பாஜகவின் வெற்றி குறையலாம். சமாஜ்வாடி கூட்டணி வெற்றி அதிகரிக்கலாம். ஆனால் காங்கிரஸ் நிலை?

எதையாவது செய்து காங்கிரஸ் தன் வெற்றியை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம். ராகுல்  களம் இறங்கியது காங்கிரஸ் கட்சிக்கு உறுதியாக வெற்றியை தேடித்தரும் என்று சொல்வதற்கு இல்லை. இதன் காரணமாக பிரியங்காவை களம் இறக்கி அரசியல் களத்தில் சிறிது அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகம் போன்ற சென்டிமெண்ட் மாநிலங்களில் பிரியங்காவின் வருகை எடுபட்டுள்ளது. அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றி எதுவும் தெரியாது. தமிழகத்தில் சசிகலாவிற்கு அரசியல் ஞானம் உண்டு, அவர் ஜெயலலிதாவுடன் 32 ஆண்டுகள் கூடவே இருந்தார் என்று கூறுவதற்கு இணையாக காங்கிரஸ் எடுத்த வெற்றிகரமான நிலைப்பாடுகளில் பிரியங்கா கூடவே இருந்தார் என்று கூறப்படுகிறது (அரசியல் கட்சியிலேயே இல்லாமல் அதன் முடிவுகளில் பங்கெடுப்பது தார்மீக ரீதியில் குற்றம் என்றாலும் புகழ் மழையில் இது காணாமல் போய்விடும்.)

அதை விட பிரியங்கா பாட்டி மாதிரியே இருக்கிறார் என்று அவர் உருவத்தை பார்த்து எடை போடத் தொடங்கி விட்டோம் .

கட்டாயம் பிரியங்கா பாட்டிபோல உருவத்தில் மட்டும் அல்ல குணத்திலும் இந்திரா பாட்டிமாறியே மாறுவார் என எதிர்பார்க்கலாம். இதற்கு இந்திராவின் குணமே காரணம். 

லக்னோவில் கணவர் பெரோஸ் காந்தி, சஞ்சை, ராலுடன் இந்திரா லக்னோவில் தனிக்குடுத்தனம் நடத்திய வரை யில் இந்திய பெண்ணாக இந்திரா இருந்தார். அதன் பின்னர் அவர் இரு குழந்தைகளுடன் நேருவுடன் வந்து சேர்ந்ததும் குணம் மாறி இந்தியாவின் தாயாக உருவாகும் நினைப்பு அவருக்கு தோன்றிவிட்டது.  இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் தோன்றியது. ஒரு கட்டத்தில் நேரு கூட இந்திராவின் அதிகார வெறியால் எடுத்த நடவடிக்கைகளை ஏற்கவில்லை. இப்படி பட்ட அதிகார வெறி கொண்ட இந்திராவாக வேண்டுமானால் பிரியங்கா மாறக்கூடும். 

ஆனால் அவர் கணவர் ராபட் கட்டாயம் பெரோஸ் காந்தியை போல மாறவே முடியாது. பெரோஸ் காந்தி இந்திரா இடையே ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் அவர் எடுத்த தீமை தரும் முடிவுகளே காரணம். நேருவின் ஆட்சிக்காலத்தில் கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலம் குற்றி இருந்தன. அந்த சூழ்நிலையில் பெரோஸ் காந்திதான் எதிர்கட்சித் தலைவராக உருவெடுத்தார். இந்தியாவை கூட்டாச்சி தத்துவம் தான் ஆள வேண்டும் என்று பெரோஸ் நினைத்தார். அது இந்திராவிற்கு ஏற்புடையதாக இல்லை. 1959ம் ஆண்டு தேர்தல் முலம் ஆட்சிக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் அரசான கேரள மாநில அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சி வருவதை இந்திரா உறுதி செய்தார். இந்த நிலைப்பாட்டை பெரோஸ் கடுமையாக எதிர்த்தார். தன் மனைவி என்றும் பாராமல் இந்திராவை பாசிஸ்ட் என்று  மாமனார் முன்னிலையில் அவர் அழைத்தார் என்றால் அவரின் கோபத்தை புரிந்து கொள்ள முடியும். பெரோஸ் காந்தியின் முக்கிய நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சிறை செல்ல வேண்டியிருந்தது. அதில் டிடி கிருஷ்ணமாச்சாரி முக்கியமானவர். காப்பீட்டுத்துறை அரசுடமை ஆக்கப்பட்டது. 

இவற்றை விட இன்று பேனா பிடிப்பவர்கள் லேப்டாப்களில் விரல்களால் நடனமாடுபவர்கள் நன்றியோடு நினைக்க வேண்டிய நபராக இருப்பவர் பெரோஸ் காந்தி. பாராளுமன்றத்தில் பேசுவதை எல்லாம் எழுதக் கூடாது அவ்வாறு செய்யும் பத்திரிக்கையாளருக்கு தண்டனை வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டிற்கு எதிராக பெரோஸ் தனிநபர் மசோதா கொண்டு வந்தார். பின்னர் அது பெரரோஸ் காந்தி பத்திரிக்கை சட்டமாக உருவானது. ஆனால் இந்த சட்டத்தை இந்திரா .நெருக்கடி நிலையில் துாக்கி எறிந்ததும். பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அந்த சட்டத்தை அமல்படுத்தியதும் வரலாறு. பெரோஸ் காந்தியின் அரசியல் பங்களிப்பை உலகம் அறியாத நிலையில் மறைத்தவர் இந்திரா என்றால் போலி குற்றச்சாட்டு அல்ல. 

இப்படி நாட்டின் நலனுக்காக ராபர்ட் செயல்படுவாரா என்பது தான் கேள்விக்குறி. ராகுல் காங்கிரஸ் கட்சியில் அடியெடுத்து வைத்த உடன் பிரியங்காவையும் அரசியலுக்கு காங்கிரஸ் கட்சியினர் அழைத்தனர். தம்பிக்கு உதவியாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்காவும் தேர்தல் வேலை செய்தார். ஆனாலும் அப்போது கூட அவர் நேரடியாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை.. ஆனால் அப்போதே ராபர்ட் மீது போலி ஆவணங்கள் கொடுத்து நிலம் வாங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னரும் அவர் மீது அவ்வப்போது குற்றசாட்டுகள் வெடித்துக் கொண்டே இருந்தது. ராபர்ட் குடும்பத்தினருடன் காங்கிரஸ் கட்சியின் தொடர்பு கொள்ள கூடாது என்று உசோனியா எச்சரித்தது தான் அவரின் மீதான நம்பகத் தன்மை, அவர் குடும்பத்தினரின் மீதான நம்பகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. 

இதனால் தான் ராபர்ட் என்றுமே பெரோஸ் ஆக உருவாக முடியாது என்று கூறக் காரணம். அதே நேரத்தில் உபியில் காங்கிஸ் கட்சி பெறும் வெற்றி ராகுலை சீதாராம் கேசரி நிலைக்கு தள்ளி, பிரியங்கா இந்திராவாகமே மாற்றி விடும் என்பது நிச்சயம். லகலகலக...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close