ஜனாதிபதியாகிறார் மோடி!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 27 Jan, 2019 12:11 pm
article-about-prime-minister-narendra-modi

டீ விற்றார் மோடி என்று பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கும் நாம், நம் நாட்டின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக அவர் அமர உள்ளதைக் காணப் போகிறோம். 

அதென்னவோ தெரியவில்லை பாரதிய ஜனதா கட்சி மற்றும் மோடிக்கு 13ம் நம்பர் பல நேரங்களில் ரொம்பப் பொருந்துகிறது. அக்கட்சி மற்றும் மோடிக்கு 13 என்ற எண் அவர்களின் வாழ்க்கையின் ஊடாக முக்கிய நிகழ்வுகளுக்கான திருப்புமுனையாக இருந்துள்ளது.

அதாவது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி முதன்முதலாக  மத்தியில் ஆட்சியில் அமர்ந்த போது பதிமூன்று நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடிந்தது.. அதன் பிறகு பதிமூன்று மாதங்கள் ஆட்சியில் பதவி வகிக்க முடிந்தது.

அதே போல, குஜராத்தில் முதலமைச்சராக பதிமூன்று ஆண்டுகாலங்கள் நரேந்திர தாமோதர தாஸ் மோடி தொடர்ந்து ஆட்சி புரிந்தார். பின்னரே  கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று அவர் பிரதமராக பதவி உயர்வு பெற்றார்

இயற்கையின் சுழற்சி எப்பொழுதும் இது போன்ற ஓர் அடுக்குகளிலேயே தான் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. எலியட் வேவ் தியரி தெரிந்தவர்களும் சரி, ஃபிபனாஸ்க்கி தியரி தெரிந்தவர்களும் சரி இதை முழுமையாக ஒப்புக் கொள்வர். அதே படிநிலையில், கீழ்க்கண்ட கணக்கினைக் கணித்திருக்கிறோம்.  நிச்சயம் நடக்கும்.

ஏற்கனவே பிரதமராக ஐந்தாண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில் இன்னும் எட்டு ஆண்டுகள் மோடியே பிரதமராக இருப்பார். குஜராத்தில் பதிமூன்றாவது ஆண்டாக ஆண்டு கொண்டிருக்கும் போது தான் பிரதமராக நிலை உயர்வு பெற்றார்.

அதே போல பிரதமராக பதிமூன்றாவது ஆண்டு ஆட்சிபுரியும் போது நிலையுயர்வு பெற்று ஜனாதிபதியாவார்.  அதுவே அவரின் வாழ்வில் நடைபெற உள்ள அடுத்த திருப்பு முனையாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்.

2027 என்பது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அது மோடி பிரதமராகப் பணியாற்றும் பதிமூன்றாவது வருடமாக இருக்கும். 

ஒரு கடைநிலைத் தொழிலாளியாக தன் பயணத்தைத் தொடங்கியவர் தேசத்தின் மீது கொண்ட பற்றினாலும், கடும் உழைப்பினாலும், தன் தன்னலமற்ற சேவையினாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்திருக்கிறார் என்று உலகம் முழுவதும் குழந்தைகள் பாடமாகப் படிப்பார்கள். 

ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா..
 வருக மோடியே வருக

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close