விஞ்ஞானி நம்பி நாராயணன்  மீது மீண்டும் கல்வீசுவது நியாயமா? 

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 07:23 pm
article-about-scientist-nambi-narayanan

சினிமா, சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கபட்ட நிமிடத்தில் இருந்தே, சர்ச்சைகளும் பிறப்பெடுக்கும். விருது பெறுகிறவர்கள் தகுதியின் அடிப்படையில், சர்ச்சை, சம்பந்தப்பட்டவர் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற சர்ச்சையில் சிக்குவது, பத்ம விருதுகளுக்கும் வாடிக்கையாகிவிட்டது. 

அதிலும் இந்த முறை, விஞ்ஞானி நம்பி நாராயணை குறிவைத்து, கேரள முன்னாள் காவல்துறை தலைவர் சென்குமார் குற்றம்சாட்டி உள்ளார். ‛நம்பி நாராயணன், பத்ம விருது வழங்கும் அளவிற்கு பெரிய விஞ்ஞானி இல்லை’ என்பது தான் அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

உலக நாடுகள் எதுவும் இந்தியாவிற்கு திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை தர முன்வரவில்லை. இதனை சவாலாக ஏற்றுக் கொண்டு, கிரையோஜெனிக் ராககெட் எஞ்சின் தயாரித்த குழுவின் தலைவராக இருந்தவர் நம்பிநாராயணன். 

இது போன்ற கண்டுபிடிப்புகள் காரணமாகத்தான், சிவகாசிக்காரர்களுக்கு போட்டியாக, ஐ.எஸ்.ஆர்.ஓ., ராக்கெட் தயாரித்து, வானில் விட்டு விளையாடுகிறது. 

ஐரோப்பிய நாடுகள் கூட, விலை மலிவு என்ற காரணத்தால், தங்கள் தயாரிப்புகளை ஐ.எஸ்.ஆர்.ஓ.,விடம் கொடுத்து வானில் ஏவுகின்றன.
இந்நிலையில், பாராட்டுகளை பரிசாக கொடுக்க வேண்டிய நம்மவர்கள், நம்பி நாராயணுக்கு கொடுத்தது துரோகி பட்டடம். 

குளிரியல் துறையின் தலைவராக அவர் இருந்த போது,  இவர் மற்றொரு விஞ்ஞானி சசிகுமரனுடன் இணைந்து மாலத்தீவில், பாகிஸ்தான் தீவிரவாதிக்கு ரகசியங்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.  

சில ஆண்டுகள் கழித்து, இது தவறான குற்றச்சாட்டு என்று, சி.பி.ஐ., வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் அவர் நேர்மையானவர் என்று தெரிந்தால் கூட, குற்றச்சாட்டு எழுந்த போது ஏற்பட்ட வாத, பிரிதிவாதங்கள் ஏற்படுத்திய தாக்கம் குற்றச்சாட்டில் சிக்கியவர்களால் தான் உணர முடியும்.

தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கோரி வழக்கு தொடர்ந்ததும், அதில் அவருக்கு கேரள போலீசாரிடம் ரூ. 50 லட்சம் வசூலித்து அதனை நம்பிநாராயணுக்கு இழப்பீடாக வழங்க, நீதிபதி தீபக் மிஸ்ரா தலமையிலான, 3 நீதிபதிகள் அடங்கிய குழு உத்தரவிட்டதும் தனிக் கட்டுரையே எழுதாலாம்.

இந்த சூழ்நிலையில் தான் அவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்று இருக்கிறார். அவருக்கு அரசு செய்த தவறுக்கு பரிகாரமாகக் கூட இருக்கலாம். அதைப் பற்றி விமர்சனம் செய்ய, கேரள போலீஸ் முன்னாள் தலைவருக்கு என்ன தேவை வந்தது.

 இத்தனையும் அவர் சார்ந்த துறைதான் நம்பிநாராயணன் மீது குற்றசாட்டு கூறியது என்ற நிலையில், போலீஸ் அதிகாரியின் மீது சந்தேகம் எழுகிறது.
நாகர்கோயிலில் பிறந்து, மதுரை தியாகராஜன் பொறியியல் கல்லுாரியில் பயின்ற நம்பி நாராயணன், பத்ம பூஷண் விருது பெறுவது, தமிழர்களுக் பெருமை. 
அதனை கெடுக்க வேண்டும் என்று கூட தற்போது குற்றச்சாட்டு எழலாம். ஆனால், ஏற்கனவே அவர் மீது கல்வீசி நாமே தலையை உடைத்துக் கொண்டோம். மீண்டும் கல் வீசுவது நியாயமா?
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close