குறைந்தபட்ச ஊதியம் - இன அழிப்புக்கான வேலை...

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 29 Jan, 2019 11:02 pm
work-for-ethnic-cleansing-special-story

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் எதற்கும் லாயக்கற்ற கூட்டம்  என்று சொல்ல வருகிறாரா இல்லை எதைச் சொன்னாலும் நம்பும் முட்டாள்கள் தான் இந்திய மக்கள் என்று முடிவு செய்து விட்டாரா? 

எல்லாவற்றையும் விட இதை பாராட்டிப் பேசியும் எழுதியும் வரும் ஊடகங்கள் தரம் தாழ்ந்து விட்டனவா? இல்லை மக்களைத் தரம் தாழ்த்தி எடை போடுகிறதா?

திருவாளர் ராகுல் காந்தி திருவாய் மலர்ந்து, அடுத்து ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச தொகுப்பூதியம் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார். அதாவது, அரை நூற்றாண்டுக்கு மேலே ஆட்சிபுரிந்த ஒரு கட்சியின் தலைவர், தன் நாட்டிலுள்ள ஏழைகளுக்கு பிச்சை போடப் போவதாகச் சொல்லியிருக்கிறார். 

இதன் மூலம் அன்னார் இந்தியக் குடிமக்களுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், 

1. அரை நூற்றாண்டுக்கு மேல் நாங்கள் ஆட்சி புரிந்தும் எங்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. என் பாட்டன், பாட்டி, அப்பா, என் அம்மா என்று ஆட்சிபுரிந்த அனைவருமே கையாலாகாதவர்கள். நிர்வாகம் தெரியாத முட்டாள்கள். அவர்கள் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சத் தொகுப்பூதியத்தை இலவசமாகக் கொடுப்போம். 

2. நாங்கள் எங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கும் தகுதியில் இல்லை. ஆதலால், முட்டாள் மக்களுக்கு இலவசப் பேராசையைக் காட்டி மீண்டும் ஓட்டு வாங்குவோம்.

3. அடுத்து ஆட்சிக்கு வந்தும் கூட நாங்கள் மக்களின் சம்பாதிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் ஏதும் இல்லை. வெளிநாடுகளில் கடன் மீது கடனை வாங்கி அதை இலவசம் என்ற பெயரில் மக்களுக்குக் கொடுத்து நாட்டை திவாலாக்குவோம்.

சொல்லாமல் விட்டவை...

1, யார் ஏழைகள்? அவர்களின் வருமானம் என்பது எதை வைத்து வரைமுறைப்படுத்தப்படும்?

2. அத்தனை பேருக்கும் எப்படி இந்தப் பணத்தை கொண்டு செல்லப் போகிறார்கள்? (ஜன் தன் கணக்கு காங்கிரஸிற்கு ஏற்புடையதன்று). இடைத்தரகர்களாக காங்கிரஸ் கட்சியார்களே இருப்பார்கள். பாதிக்கும் மேலே நாங்களே கொள்ளை அடித்துக் கொள்வோம்

3. எந்த வருமானத்தைக் கொண்டு இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்படும் ? ஏனெனில் டென்மார்க், சுவிஸ், போன்ற வளர்ந்த நாடுகளில் தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தையும், உபரியாக வரும் வருமானத்தையும் பிரித்துக் கொடுக்கிறார்கள். இந்தியாவில் எந்த வருமானத்தைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார்கள்.

4. ராகுலின் அப்பா ராஜிவ் காந்தி அமேதி தொகுதியில் ஒவ்வொரு ஏழை வீடுகளுக்கும் சென்று அவர்களின் தோழன் என்று காட்டிக் கொள்ள அவர்கள் வீட்டில் சாப்பிட்டு ஸ்டண்ட் செய்தார். ராகுலும் அவரைத் தொடர்ந்து ஏழைகள் வீட்டில் சப்பாத்தியைக் கூட விடாமல் புடுங்கித் தின்று வருகிறார். அடுத்ததாக கொடுத்த பணத்தை இதே போல் ஆட்களை விட்டு புடுங்கித் தின்போம் என்பது.

5. இறுதியாக, இத்தனை வருடங்களாக நாங்கள் ஆட்சியில் செய்த ஊழல்களை எல்லாம் வடிகட்டி எடுத்து மிகக் கடுமையான வலையில் பிண்ணிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த முறை ஆட்சிக்கு வராவிட்டால், எங்கள் உடமைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு இத்தாலியிடமோ சீனாவிடமோ அடைக்கலம் ஆகிவிட வேண்டிய அவலத்தில் இருக்கிறோம் ஐயோ சாமி காப்பாத்துங்க! 

மக்களுக்கு, தன் தேவையைத் தானே நிறைவேற்றிக் கொள்ள வழிகாட்டுவது தான் ஒரு நல்ல அரசின் அதிகபட்சத் திறனாகும். இலவசம் என்பது இனப்பெருக்க சக்தியைக் கூட முடக்கி மலடாக்கி விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close