மத்திய பட்ஜெட் 2019ல் இவற்றை எதிர்பார்க்கலாம்!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 12:43 pm
budget-expectations


பார்லிமென்ட்டில் நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டாகவும், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது. 

நாளைய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்: 

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படலாம். அதே சமயம், 
வருமான வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வங்கி பரிவர்த்தனைக்கும் வரி விதிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
மத்திய அரசு, விவசாய கடன் தொகையை, 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் திட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் நலன் கருதி, புதிய வேலை வாய்ப்புகளுக்கான திட்டம் அறிவிக்கப்படலாம். 

நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களில், உடான் திட்டத்தின் கீழ், விமான சேவை துவங்குவதற்கான அறிவிப்பு இடம் பெறும் என பலமாக நம்பப்படுகிறது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், புதிய திட்டங்கள் வெளியாகலாம்.

பாதுகாப்பு துறையில் 1.5 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பும் இடம் பெற வாய்ப்புள்ளது. 
சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவு தொழில் நிறுவனங்களுக்கு தற்போது வழங்கப்படும் கடன் உதவி மேலும் நீட்டிக்கப்படலாம். 

முத்ரா வங்கிகள் மூலம், சுயவேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இதன் மூலம் புதிய தொழில் முனைவோரை உருவாக்கவும், பெண் தொழில் அதிபர்களை உருவாக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது.

விளையாட்டு துறையை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, சர்வதேச அளவில் அவர்கள் சாதிக்கவும், பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கவும் வாய்ப்புள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை பெருக்க புதிய அறிவிப்புகள் வெளியாகலாம். மருத்துவம், ஆராய்ச்சி, உயர் கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு முன்பை விட, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close