காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடுமாறு உத்தரவிட்ட காந்தி

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Jan, 2019 02:18 pm
gandhiji-s-last-wish-disband-the-congress-develop-sangh

மஹாத்மா காந்தி விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் பேரியக்கத்துக்குள், விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி கொண்டு வந்தார். அவர் பல்வேறு போரட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நடத்திய போராட்டங்களும் ஓர் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல

விடுதலை அடைந்தவுடன் காங்கிரஸ் பேரியக்கத்தின் இந்த வெற்றி காந்தியை மகிழ்வித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் மகிழ்ச்சியுறவில்லை. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி பெற்ற சுதந்திரம்  அவர் கண்ட கனவு சுதந்திரம் அல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

 ஜவஹர்லால் தலைமையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று ஆட்சிபுரியும் திறமையைக் கண்ட அவர் அதில் அதிருப்தியுற்றார். அதையடுத்து, காங்கிரஸ் ஒரு கட்சியாக இருந்து தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தி கொள்ள‌ வேண்டும் என்றும், காங்கிரஸ் பேரியக்கம் அரசியல் கட்சியாக செயல்படுவதில் தமக்கு உடன்பாடு இல்லையென்றும் கருத்து தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல காங்கிரஸ் கட்சியையே கலைத்துவிட வேண்டும் என்றும். அந்த இயக்கத்தில் உள்ள தலைவர்கள் ஆட்சியதிகராத்தில் அமர வேண்டும் என்று விரும்பினால் புதிதாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் பெயரில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற பிறகு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரிட்டீஷாரிடமிருந்து தேசத்தை விடுவிக்கும் ஓர் முகமாக விடுதலைப் போராட்டத்தை ஒருங்கிணைக்கவும், மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தவும் மட்டுமே காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்டதாகக் கூறிய அவர், அரசியலில் ஈடுபடும் நோக்கில் காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்படவில்லை என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

எனவே காங்கிரஸ் இயக்கத்தை கலைத்துவிட்டு அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்கள் அனைவரும், அரசியலற்ற லோக் சேவக் சங்கத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், அரசியலில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் புதிய கட்சியைத் தொடங்கி அதன் கீழ்  செயல்படவேண்டும் என்றும் அவர் ஆலாேசனை கூறினார்.

அதன்படி லோக் சேவக் சங்க் 1948 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டு அதற்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் படி தேர்‌ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு சில கோட்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் லோக் சேவக் சங்கத்தில் உள்ளவர்கள் கட்டாயம் கதர் ஆடை தான் அணிய வேண்டும் என்றும், மேலும் அவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளை பட்டியலிட வேண்டும் என அறிவித்தார்.

லோக் சேவக் சங்கத்தில் உள்ளவர்கள் கிராமங்களுக்கு தினமும் சென்று அங்குள்ள மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். கிராம மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என அந்த அமைப்பின் நோக்கமாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் துரதிருஷ்டவசமாக அதை நடைமுறை படுத்துவதற்கு முன்னரே காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் பேரியக்கத்தை, தன்னுடைய சௌகரியத்துக்கு அரசியல் கட்சியாக மாற்றி ஜவஹர்லால் நேரு ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தார் என்பது இன்றைய தலைமுறையினருக்கு ஓர் செய்தியாக இருக்கும்.

அதுமட்டுமல்ல அந்த பேரியக்கமே, நேரு வாரிசுகளின் குடும்ப சொத்தாகவும் மாறிப்போனது இந்த தேசத்தின் துரதிர்ஷ்ட வரலாற்றின் மறுக்கமுடியாக உண்மையாக உள்ளது. காங்கிரஸ் பேரியக்கம் ஜவஹர்லாம் நேருவை மட்டுமே தலைவராக உருவாக்கவில்லை, ஏராளமான தலைவர்களை 1891ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உருவாக்கி வந்தது.

ஆனால் நேரு பிரதமராக பதவியேற்ற பிறகு ஏனைய காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தின் துணையோடு நாட்டு மக்களிடையே மறக்கடிக்கச் செய்யப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close