மீண்டும் இந்தியாவில் பிறப்பாரா ஜார்ஜ் பெர்னாண்டஸ்?

  பாரதி பித்தன்   | Last Modified : 31 Jan, 2019 04:11 pm
article-about-george-fernandes

‛மகான்களையும், ஞானிகளையும் மதிக்காதவர்கள் நாட்டில், அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை’ என்பது மூத்தோர் வாக்கு. இயேசுவுக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவு செய்து, எளியவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஜார்ஜ்பெர்னாண்டஸ், மீண்டும் இந்தியாவில் பிறப்பாரா என்பது கேள்வி. 

இது, அவர் வியட்னாமில் பிறக்க வேண்டும் என்று எண்ணியதால் அல்ல, கடைசிகாலகட்டத்தில், காங்கிரஸ் கட்சி அவரின் மனதை நோக அடித்ததால் எழுந்தது. 

கர்நாடகாவின் மங்களூர் நகரில், 1930 ஜூன் 5ம் தேதி பிறந்தவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ். சிறு வயது முதலே, ஏசுவுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பது அவர் விருப்பம். இதற்காக, 16வயதில், பெங்களூர் செயின்ட் பீட்டர் செமினரி பள்ளியில் சேர்ந்தார். 

மூன்று ஆண்டுகள் அங்கு இருந்த அருக்கு, ‛ஏழைகளுக்கு ஊழியம் செய்வதே ஏசுவுக்கு செய்யும் ஊழியம்’ என்ற உணர்வு வந்தது. இதையடுத்து, அங்கிருந்து வெளியேறி மும்பை சென்று, பத்திரிக்கையில் பிழைதிருத்துபவராக பணியில் சேர்ந்தார்.

அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் பல திருப்பங்கள். தன் வாழ்க்கையை தொழிலாளர்களுடன் இணைத்து கொண்ட ஜார்ஜ், அவர்களுக்காகாவே வாழ்ந்தார்.

இந்தியா என்றால் இந்திரா என்று இருந்த காலத்தில், அவர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் ஜார்ஜ். 1974ம் ஆண்டு அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். 

சில மாதங்களிலேயே சம்பள உயர்வு கோரி, ரயில்வே ஊழியர்கள் போராட்டம் தொடங்கியது. இத்தனை விதமான பிரச்சார ஊடகங்கள் இல்லாத நிலையில், அந்த ஸ்டிரைக் நாடு முழுவதும் அதிர்வலையை அல்ல, மாபெரும் கடலையே ஏற்படுத்தியது. 

30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 19 நாட்கள் போராட்டம் தொடர்ந்தது. கடைசியில் ஜார்ஜ், போராட்டத்தை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் அவர் இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். 

அடுத்த ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா எமர்ஜென்சி அமல்படுத்தினார். எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் கோல்கத்தாவில், 1976 ஜூன் 10ம் தேதி  கைது செய்யப்படார். 

அவர் மீது அரசு அலுலகங்களில் குண்டு வீசுவற்தகாக வெடிமருந்து சேகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலே வழக்கு முடிந்தது.

சோசலிஸ்ட் தலைவராக உருவான ஜார்ஜ், தன் எண்ணத்தை ஈடேற்றும் வாய்ப்பை ஜனதா அரசில் பெற்றார். தொழில் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். முதலீட்டு விதிமுறைகளை மீறியதாக, ஐ.பி.எம்., கோககோலா நிறுவனங்கள் இந்தியாவை விட்டே விரட்டியடிக்கப்பட்டன.

 சுமார் 20 ஆண்டுகள் கடந்து, மீண்டும் கோககோலா நிறுவனம் இந்தியாவில் நுழைந்து, இன்றளவும் கோலோச்சி வருவது தனி கதை. வி.பி. சிங் அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராக இருந்த போது, கொங்கன் ரயில்வே அறிமுகமானது. 

அவர் வாழ்கையில் உச்சமும், வீழ்ச்சியும் வாஜ்பாய் அரசின் போது நடந்தன. பிரதமர் பதவிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ். அவர் பொறுப்பேற்ற, 1998ம் ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் கார்கில் போர் நடந்தது. 

அப்போது இவர் களத்திற்கே சென்று வீரர்களை வழி நடத்தினார்; முடிவு பாகிஸ்தானுக்கு எதரிான போரில்  இந்தியா மாபெரும் வெற்றி பெற்றது. 

அமெரிக்காவே அறிந்து கொள்ள முடியாமல், இந்தியா பொக்ரானில் அணு குண்டு சோதனையை அரங்கேற்றியது. அதிலும் இவர் பங்கு அதிகம். அதன் பின்னர் தான் உலகம் இந்தியாவை கவுரவமாக பார்த்தது. 

டில்லியில் அமர்ந்து கொண்டு ராணுவத்தை இயக்கிய அதிகாரிகளை, சியாசின் போர் முனைக்கு விரட்டியவர் தான் ஜார்ஜ். இதனால், யதார்த்ததை உணர்ந்து ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்தது. 

இப்படி, நாட்டுக்காக தன்னையே  அர்ப்பணித்து கொண்ட ஜார்ஜ் மீது, சவப் பெட்டி ஊழல் குற்றச்சாட்டை காங்கிரஸ் அள்ளி வீசியது. இதனால் மனமுடைந்த அவர், தீவிர அரசியலில் ஈடுபடமுடியவில்லை. அதற்கு ஏற்ப அவருக்கு அல்ஜீமர்ஸ் நோய் தாக்கியது. 

ஒரு புறம் சவபெட்டி ஊழல் என்ற போலி குற்றச்சாட்டினால் எழுந்த வேதனை, அதை மக்களும் நம்பியதால் ஏற்பட்ட அதிருப்தி, அவரை தாக்கிய நோய், ஆகிய 3ம் தான் படிப்படியாக அவரை கொன்று விட்டது. மக்கள் தலைவனை இப்படி மடிய வைத்த நாட்டில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீண்டும் தோன்றுவார் என்பது சந்தேகம் தான். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close