வேதம் ஓதும் சாத்தானா சசிதரூர்...?

  பாரதி பித்தன்   | Last Modified : 01 Feb, 2019 03:01 pm
sashi-tharoor-is-satan

இந்தியாவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது காங்கிரஸ் மற்றும் இந்து என்பது சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் உண்மை. ஆனால் சாத்தான் ஓதும்வேதம் போல சசிதரூர் இந்து, இந்துத்துவா, இந்தி ஆகியவை தான் இந்தியாவை பிரிப்பதாக கூறி இருக்கிறார். 

இந்திய ஒருமைப்பாட்டின் உணர்வு பூர்வமாக இருக்கும் சங்கிலி இந்துத்வா, அதுதான் காசியில் இருக்கும் ஏழை இந்துவை ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் திளைக்க வைக்கிறது. அதே போல வாழ்வில் ஒருமுறையாவது காசியை தரிசனம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ராமேஸ்வரம் வாழ் இந்துவையும் நினைக்க வைக்கிறது. ராமன் என்ற பெயர் நாடுமுழுவதும் சிறிது சிறிதான மாற்றங்களுடன் இன்றும் கூட திகழ்கிறது. இப்படி இந்துத்தவம் இந்த நாட்டின் கலாச்சாரத்தை ஒருங்கிணைப்பதை எடுத்துக் கூறிக் கொண்டே போலாம். 

லண்டனில் பிறந்த சசி தரூருக்கு மட்டும் இது தெரியாது. மோடியை , பாஜவை விமர்சனம் செய்வதாக கருதி அவர் இந்துக்களை, இந்த நாட்டின் பண்பாட்டை இழிவுபடுத்தி இருக்கிறார். 

அவரை இன்றும் கூட தலைவராக உலாவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியும், அவரது 3வது மனைவியின் மர்ம கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி இன்னும் கம்பி எண்ண வைக்காத காவல்துறையும் தான் காரணம். 

சசிதரூர் செய்த குற்றத்தை மற்ற யாராவது செய்திருந்தால் இந்நேரம் துாக்குதண்டனையே பெற்று இருப்பார்கள். ஆனால் இவரதுக்கு பின்னால் இருக்கும் அரசியல் ஆதரவு அவரை காப்பாற்றி வருகிறது. இந்த நாட்டின் பெரும்பான்மை சமுதாயத்தை இழிவபடுத்திய சசிதரூரை கண்டிக்க வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆனால் அவர்கள் செய்வார்களா என்பது தான் கேள்வி?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close