வருமான வரி இல்லாத நிலை வரட்டும்! 

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Feb, 2019 03:18 pm
no-income-tax-has-to-come-special-story

இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகும் தனித்தனியே வரி செலுத்துகிறோம். அதன் பிறகு கிடைக்கும் வருமானத்திற்கும் வரி. அதிகம் உழைத்து அதற்கு ஏற்ப சம்பாதிக்கிறாயா? அதற்கும் வரி கட்டு என்று சொல்லும் நிலை தற்போது வரை நிலவி வருகிறது.

இதன் காரணமாக, நாட்டில் வருமானவரியே இருக்க கூடாது என்று வாதாடுகிறவர்களும் இருக்கிறனர். இன்னொரு புறம் வரிகட்டுவதில் சலுகை வேண்டும் என்று கூறுகிறார்கள்.  ஆனால், அரசாங்கம் இதை பற்றி கவலைப்படாத காரணத்தால் தான், வரி ஏய்ப்பு நடக்கிறது.

பின்னர் இது தொடர்பான சோதனைகள் நடைபெறும் போது, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படவைக்க இந்த சோதனை நடக்கிறது என்று நமக்கு நாமே முத்திரை குத்தி விடுகிறோம்.

சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை விட, சலுகைகள் அதிகம் தருகின்றன. வருமான வரி சம்பளத்திற்கு மட்டும் தானே தவிர்த்து, சலுகைகளுக்கு கிடையாது. என் ஊழியன் எனக்கு உழைக்கிறான் பிறகு ஏன் வரி கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வட இந்தியாவில்  வைர வியாபாரி ஒருவர், வரி செலுத்த வேண்டிய தொகையை ஊழியருக்கு கார், வீடு என்று பரிசளித்து அதை செலவு கணக்கு காட்டி தப்பி விடுகிறார். அதிகாரிகள் உட்பட அனைவரும் அதைப்பார்த்து கைதட்டி விட்டு செல்ல வேண்டி இருக்கிறதே தவிர்த்து, வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

இது போன்ற எந்த செயலிலும் ஈடுபட்டு தப்பிக்க முடியாதவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே. சம்பள உயர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்தி அதிகரித்து கொண்டு, வருமான வரி வலையில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், வரி விலக்கிற்கான உச்ச வரம்பை, 2 லட்சம் என்பதில் இருந்து மேலும் ரூ. 50 ஆயிரம் அதிகரித்த பாஜக அரசு, தற்போது அதை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. அதாவது மாதத்திற்கு சுமார், 41 ஆயிரம் மாதசம்பளம் வாங்குபவர் வரை இப்போது வரி கட்ட வேண்டாம். இது வெறும் வகுத்தல் கணக்குதான்.

இதில் கழிவுகளை எல்லாம் குறைத்தால் சம்பளம் இன்னமும் அதிகரிக்கும். அதற்கு மேல் 6.5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள், சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் குறிப்பிட்ட திட்டங்களில் சேமித்தால் அதற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வரி விலக்கு ரூ. 5லட்சம் மறைமுகமாக வரி விலக்கு ரூ. 6.5 லட்சம் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயன் ஏமாற்றவே முடியாத அரசு ஊழியர்களுக்கும், சரியான கணக்கு காட்டும் தனியார் நிறுவனங்கள் இருந்தால் அவர்களின் ஊழியர்களுக்கும் தான் கிடைக்கும்.

வருமான வரி நீக்கம் என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. அதனை தொடர்ந்து நடைபோட வைப்பதும், இதே அளவுடன் இன்னும் பல ஆண்டுகளை கடத்த வைப்பதும் நம் விரல் நுனியில் தான் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close