நேர்மை இனி நன்மை தரும்! 

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Feb, 2019 04:12 pm
honest-will-give-success-special-story

'கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணன் பட்ட பதட்டத்தை, கம்பர் வர்ணனை செய்வார். இது உண்மை என்றால், நம் விவசாயிகளுக்கு என்றைக்குமே இலங்கை வேந்தனின் நிலைதான்.

பெரும்பாலான விவசாயிகள், 3 சீட்டு விளையாவது போல, கடன் வாங்கி, நிலத்தை அடகு வைத்து சாகுபடி செய்கிறார்கள். அப்புறம் வானத்தை பார்த்துக் கொண்டு வாழ வேண்டியது.

பூச்சி தாக்குதல், வறட்சி, வெள்ளம், கூலிக்கு ஆள் கிடைக்காதது  என்று எல்லா தடைகளையும் கடந்தாலும் சாகுபடியான பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. விளைந்தால் கொஞ்சம் நஷ்டம், விலையாவிட்டால் மொத்த நஷ்டம் என்றே நடக்கும். அதிலும், கடன் வாங்கி சாகுபடி செய்பவன் ஏழை விவசாயி, கடன் வாங்காமல் சாகுபடி செய்பவன் பணக்கார விவசாயி என்பது நம்ம ஊரில் எழுதப்படாத விதி.

அதனால் கடன் வாங்கிய விவசாயி, கடனை கட்டமாட்டார். பாவம் அவர் ஏழை, மத்தவன் வேறு எங்கோ கண்ணுக்கே தெரியாத இடத்தில் அடிபடுவான். அவனைப்பற்றி கவலைப்படுவதற்கு ஆளே இல்லை.

இன்னொரு புறம் நம் இடதுசாரி தோழர்கள் 'கடனை தள்ளுபடி செய், புதுக்கடன் கொடு’ என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துவார்கள். இதனால், வேறு வழியில்லாத அரசு, அவர்கள்  கட்டாத கடனை தள்ளுபடி செய்யும். அதனால் வங்கிகளுக்கும், அரசு இயந்திரத்திற்கும் லாபம் இருக்கோ இல்லையோ, அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு கிடைக்கும்.

கடனை தவணை மாறாமல் கட்டுபவனுக்கு, பைத்தியக்காரன் பட்டம் தான். அதனால், கடன் கட்டுவதை விட நம் ஆட்கள் கடன் கட்டுவதற்கு முன்வருவதே இல்லை. அதையும் மீறி யாராவது கடனை குறிப்பிட்ட தவணை அன்றே கட்டினால், இது வரையில் 4 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது. அதில் ஒரு நாள் தாண்டினாலும் இதனைப் பெற முடியாது. மேலும் அபராத வட்டி வேறு. ஒரே அடியாக கடன் தள்ளுபடி என்று கடன் கட்டாத விவசாயிகளை தாஜா செய்யாமல், இந்த பட்ஜெட், கடன் கட்டுபவருக்கு மேலும் சலுகை வழங்கி உள்ளது.

தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயக் கடனுக்கு, 7 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. முறையாக கட்டுவோருக்கு, 4 சதவீதம் மானியம் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில், 3 சதவீதம் வட்டிமானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விவசாய கடன் வாங்கி முறையாக கட்டுவோருக்கு, வட்டியே இருக்காது. இது நிச்சயம் விவசாயிகளுக்கு மிகப் பெரிய கொடைதான். ஆனால் என்ன, குறிப்பிட்ட நாள் என்று இருக்கும் நிபந்தனையை, குறிப்பிட்ட மாதம் என்று மாறினால் இன்னும் பலன் கிடைக்கும்.

சீன பொருட்கள் விலை மலிவாக கிடைக்க, அரசு தரும் மானியம் முக்கிய காரணம். அவர்கள் தனித்தனியாக மானியம் தராமல், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு மானியம் தருவதால், அவர்களால் விலை குறைவாக தர முடியும்

ஆனால், தமிழகத்தில் உரமானியம், விதை மானியம் என்று தனித்தனியாக தந்துவிட்டு, கடைசியாக உற்பத்திக்கு ஏற்ற விலை தராத காரணத்தினால், எப்போதுமே விவசாயி சிரமப்பட வேண்டியிருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில், இந்த பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவதன் மூலம், நெல் போன்ற பயிர்கள் ஓரளவு லாபம் கிடைக்க எதுவாக இருக்கும்.

அதாவது ஒரு ஆண்டிற்கு ஒரு போகம் சாகுபடி என்றால், அதில் தற்போது கிடைக்கின்றதை விட, கூடுதலாக 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் இந்த சூழ்நிலையில் விவசாயிகள் மேலும் நம்பிக்கையாக சாகுபடி செய்யமுடியும்.

ஒட்டுமொத்தமாக கூறப்போனால், இதுவரையில் நேர்மையாக இருப்பவர்கள் அனைவரும், இந்த நாட்டில் தொடர்ந்து நேர்மையாக உழைத்து வாழ முடியும் என்பதை, இந்த பட்ஜெட் வெளிப்படுத்தியிருக்கிறது.

இதை எந்த அளவிற்கு, பா.ஜ.க., வினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள் என்பதை பொருத்தே, இந்த பட்ஜெட்டின் வெற்றி அமையும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close