தாலி கட்டும் நேரத்தில் பெண்ணை மாற்றிய காங்கிரஸ்..!

  பாரதி பித்தன்   | Last Modified : 03 Feb, 2019 08:21 pm
changing-bride-in-the-eleventh-hour-by-congress

பெண்ணை பற்றி விசாரித்து, ஜாதகம் பார்த்து சீர் வரிசை பேசி நாட்குறித்து திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நாளில் மணவறையில் தாலிகட்டும் நேரத்தில் வேறு பெண்ணை அமர வைத்தால் எப்படி இருக்கும். திருமணம் முறிந்து போகலாம், அல்லது கிடைத்த பெண்ணிற்கு தாலிகட்டி அதிஷ்டவசமாக நிச்சயக்கப்பட்ட பெண்ணை விட வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால் இது அபாயகரமானது என்பதால் யாரும் விளையாட விரும்புவதில்லை. ஆனால் ராகுல் இந்த விளையாட்டை விரும்பி விளையாடி இருக்கிறார். 

காங்கிரஸ் கட்சியில் 5 தலைவர்கள் இருந்தால் ஆளுக்கு ஒரு கோஷ்டி அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு கோஷ்டி என்று 6 கோஷ்டி இருக்கும். இது அந்த கட்சிக்கே உரிய சிறப்பு. ஆனாலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கலைஞர் போல, ஜெயலலிதா போன்று பிரபலமாக இருந்தால் எல்லா கோஷ்டிகளையும் தான் அவர் புகழால் காங்கிரஸ் வளர்ச்சி பெறும். அப்படி ஒருவர் உருவானால் மத்திய தலைமைக்கே நல்லது இல்லை என்று அது போன்றவர்கள் உருவாகிவிடாமல் பார்த்துக் கொண்டனர். விளைவு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற நிலை மாறி, அந்த கட்சியை மற்றவர்கள் தோளில் சுமக்க வேண்டி உள்ளது. 

இன்னும் 2 மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டிய லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இது வரையில் திருநாவுக்கரசர் மாவட்ட, கிளை நிர்வாகிகளை நியமித்து தேர்தலை சந்திக்க தேவையான ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஒரு புறம் கூட்டணி பற்றி பேச்சு நடந்தது. இன்னொருபுறம் தன்னை அதிமுக அனுதாபியாகவே காட்டிக் கொண்டார். இதன் காரணமாக அதிமுக கணிசமான வெற்றி பெற்றால் கூட கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தலாம். 

இந்த காலகட்டத்தில் மாநிலத் தலைவர் மாநிலம்  முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி தேர்தலில் களம் இறக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரை மாற்றி ரிஸ்க் எடுத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து வெளியே வசந்தகுமார் அளவிற்கு மற்றவர்கள் பிரபலம் இல்லை. தலைவ ர் பதவி மாற்றம் அறிவிப்பு அனைவருக்கும் சென்று சேரும் முன்பே தமிழக காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தில் மாற்றம் ஏற்படுத்தி விட்டார்கள் (இது 3ம் தேதி காலை நிலவரம்). இந்த அவசரத்தை புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் தங்களை களத்தில் அறிமுகம் செய்வதில் காட்ட வேண்டும் தலைமை மாறிவிட்டது என்பதற்காக மாவட்ட கிளை நிர்வாகிகளில் மாற்றும் வேலையில் ஈடுபடாமல் தங்களுக்கு தேவையானவர்களை கூடுதலாக சேர்ப்பது தான் புத்திசாலித் தனமான முடிவாக இருக்கும். 

மேலும் தங்களுக்கு தேவையான தொகுதிகளை பற்றி மட்டுமே சிந்திக்காமல் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை சிந்தித்து அதற்கு ஏற்ப கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த தலைவர்கள் முன் வர வேண்டும். இருக்கும் குறைந்த கால இடைவெளியில்  கடினமாக உழைத்து கரை சேருவதை விட புத்திசாலி தனமாக உழைத்து வெற்றிக்கனி பறிக்க வேண்டிய நிலை தற்போது தேர்வு பெற்ற தலைவர்களுக்கு உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதை நினைவில் கொண்டு அதற்கு ஏற்க விரைவாக பணியாற்ற வேண்டும் என்பது தற்போது நியமிக்கப்பட்ட தலைவர்களின் முன் உள்ள முதற்கடமை. 

இந்த நியமனத்தின் உதவியாக உடனடியாக வசந்த் டிவி காங்கிரஸ் டிவியாக உருமாறி இருக்கிறது. ஏற்கனவே அது அப்படிப்பட்ட டிவிதான் என்றாலும் முதன்நிலைக்கு வர வேண்டிய கடமையும் உள்ளது. இவற்றை எல்லாம் செய்து காங்கிரஸ் பாரம்பரியத்தை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close