மக்களுக்கு தவறான வழிகாட்டுகிறார் ‌மம்தா? 

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Feb, 2019 06:43 pm
mamta-showing-wrong-way-to-the-people

கடந்த இரண்டு நாட்களாக, கொல்கத்தா நகரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

முதல்வர் பதவி வைக்கின்ற ஒருவர், சாதாரண தொண்டனாக இப்படி தெருவில் இறங்கி தர்ணா போராட்டம் நடத்துவது, இந்திய அரசியலில் வினோதமான விஷயம்.

அரசியல் வழக்கிற்காக, மம்தா தெருவில் இறங்கி போராட வில்லை. அம்மாநிலத்தில், சாதாரண அடித்தட்டு மக்களை பாதிக்கக்கூடிய, பாதித்த, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரிக்க சென்ற, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு எதிராக, மம்தா இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

தமிழகத்தில், சிட்பண்டு பணம் கட்டி பொதுமக்கள் ஏமார்ந்த போது, காவல் துறையில் இது குறித்த விசாரைணக்கென தனி பிரிவே துவங்கப்பட்டது.

ஆனால் இன்று, மேற்குவங்கத்தில், மக்களை ஏமாற்றிய ஒரு சிட்பண்டு நிறுவனத்தின் வழக்கை விசாரிக்க, நாட்டின் உயரிய விசாரைண அமைப்பான, சி.பி.ஐ.,யால் கூட முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

ஒரு மாநிலத்தின் முதல்வர் தான், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. அப்படிப்பட்ட மம்தா, இன்றைக்கு சாதாரண தொண்டர்களை விட, சாலையில் இறங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கு, எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. கனிமொழி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து இருக்கின்றார். 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போது, கனிமொழிக்காக, தி.மு.க., அரசியல் கட்சியாக கூட ஆதரவு தரவில்லை.

இதை மறந்து விட்ட கனிமொழி, இன்றைக்கு குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு முதல்வர் போராட்டம் நடத்துவதற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது, அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகளை எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

 மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி’ என்பார்கள்.  இதை உணராமல், ஒரு மாநில முதல்வரே போராட்டம் நடத்துவது நாட்டிற்கு நல்லதல்ல.

இதனை அறிவுரையாக கூறி, மம்தாவை போராட்டத்தை கைவிட வைக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், இன்றைக்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.  மோடியை எதிர்க்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக, இன்றைக்கு எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மம்தாவுக்கு எதிராக இந்த பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்த ராகுல், தற்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றார். அதே நேரத்தில், மற்ற எதிர்க்கட்சிகளும் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

குஜராத் முதல்வராக மோடி இருந்த காலகட்டத்தில், போலி என்கவுன்டர் வழக்கில், சி.பி.ஐ., அவரிடம், 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதற்கு எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல், அந்த விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதேபோல, தமிழகத்தில், குற்றவழக்கில் அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராமமாேகன ராவிடம்,  அவர் அலுவலகத்திலேயே புகுந்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. ஆனால், சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு ஆளும்கட்சியான, அ.தி.மு.க., எவ்விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.

மோடியும் சரி, லேடிகட்சியும் சரி இந்த நடவடிக்கையை, சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடைபிடித்தனர். ஆனால், மம்தாவோ, தன் மாநிலத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்.

விசாரணைக்கு எதிராக போராட்டம் என, மாநில முதல்வரே களம் இறங்கினால். பின், குற்றங்களில் ஈடுபடும் நபர்களும், அவர்களின் உறவினர்களும் இதே பாணியை கடைபிடிக்க நினைப்பர். அப்படி ஒரு முன்னுதாரணத்தை, ஏற்படுத்துகிறாரா மம்தா என்ற சந்தேகமும் எழுகிறது.

மூத்த அரசியல் தலைவர், மத்திய மந்திரி பொறுப்பு வகித்தவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில முதல்வராக உள்ளவர், என்ற பன்முகத்தன்மை கொண்ட மம்தா, அரசியல் காரணங்களுக்காக தவறான பாதையில் செல்கிறாரோ என மக்கள் எண்ணும் வகையில் நடக்கலாமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close