கருப்புப் பணத்தின் கழுத்தில் சுருக்கு...! அடுத்த குறி மறைமுக முதலீடு!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 12 Feb, 2019 03:03 pm
central-government-now-target-on-indirect-investments

பணமதிப்பிழப்பு போன்ற தமது கடுமையான நடவடிக்கைகளின் மூலம் மத்திய அரசு கருப்புப் பணத்தின் கழுத்தில் சுருக்கு போட்டுவிட்டது. இதனை அடுத்து மறைமுக முதலீட்டின் மீது குறிவைக்கப்பட்டுள்ளது.

அதென்ன மறைமுக முதலீடு?: திரு.ராகுல் என்பவர் இத்தாலியிலுள்ள கிரீட்டா என்ற நிறுவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்திருக்கிறார். அது நேரடி முதலீடு. இதில் மறைமுக முதலீடு என்பது, கிரீட்டா நிறுவனம் வேறு சில நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும்.

அதாவது சச்சின் இண்டஸ்ட்ரீஸ், அஷோக் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சோனி டெவலப்பர்ஸ் என பல கம்பெனிகளின் ஷேர்களை கிரீட்டா நிறுவனம் வாங்கியது என்றால், அதுவெல்லாம் திரு. ராகுலின் மறைமுக முதலீடு என்றாகும்.

இந்த மறைமுக முதலீட்டினைக் கணக்கில் கொண்டு வராதவர்கள் மீது தான் இப்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு தான் இப்போது எல்லாரும் ஐயோ...! அம்மா...! என்று அலறுகிறார்கள்.

இதற்கு ஏன் இத்தனை சத்தம் என்று கேட்கலாம். கருப்புப் பண முதலைகளின் மிகப் பெரிய அடைக்கலமே இதுபோன்ற பெயரளவு நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களை அடக்கிய நிறுவனங்கள் தான். 

இவர் முதலீடு செய்த முதல் கம்பெனி எந்தப் பலனும் கொடுக்காது. ஆனால், பணத்தைக் கொட்டி கொட்டி இரண்டாவது கம்பெனிகளின் ஷேர்களை மட்டும் வாங்கும். இரண்டாவது கம்பெனி வேறு நான்கு கம்பெனி ஷேர்களை வாங்கும். இந்த நான்கு கம்பெனிகளும் டிவிடெண்ட் கொடுக்கும் ஒரிஜினல் கம்பெனியாக இருக்கும். அந்த டிவிடெண்ட்டை வாங்கி லாபம் பார்க்கும் இரண்டாவது கம்பெனி, அந்த லாபத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் முதல் கம்பெனிக்கு அனுப்பாது.இந்தச் சூழலில், இந்தியாவிலிருந்து அயல்நாட்டில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற கம்பெனிகளில் முதலீடு செய்தவருக்கு லாபம் கிடைக்காது. அதனால், இங்கே இந்தியாவில் கணக்குக் காட்டத் தேவையில்லை. அதாவது, அது dead Investment எனவும், லாபம் வரும்போது கணக்குக் காட்டினால் போதும் எனவும் அமைதியாக இருந்துவிடலாம். இரண்டாவது கம்பெனியில் முதலீடுகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த தில்லுமுல்லுக்கு தான் 2016 ஏப்ரல் 1 -ஆம் தேதியிலிருந்து ஆப்பு வைத்தது மோடி அரசு. நீங்கள் முதலீடு செய்த முதல் கம்பெனி வாங்கிய இரண்டாவது கம்பெனியின் கணக்கையும் கொண்டு வாருங்கள் என்றது.

2016-17, 2017-18 ஆகிய இரண்டு வருடங்களில் இவர்கள் காட்டிய கணக்கில் திருப்திப்படாத வருமான வரித்துறையினர் இப்போது எல்லாருக்கும் அபராதத்துடன் முழு வரியையும் கட்டச் சொல்லி கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது. இதற்கு தான் இத்தனை அலறல்..

இது தேர்தல் நேரத்து ஸ்டண்ட் என வழக்கம் போல எதிரிகள் கூவுகின்றன. இதெல்லாம் சாமான்ய மக்களுக்குப் புரியாத கணக்கு. இதை சொல்லியெல்லாம் பத்து ஓட்டுகள் கூட வாங்க முடியாது என்பது புலம்புபவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஏதாவது உளறணுமே?

இந்த மறைமுக முதலீட்டுக்கான வரியால் பெரிய வருமானம் வந்துவிடாது என்ற போதும், வெளிநாட்டு முதலீடுகள் யார் யார் எந்தெந்த வகையில் ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று 90 சதவீதம் தெரிந்து விடும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close