அக்னிபுத்ரி: ஏவுகணை நாயகி டெஸ்ஸி தாமஸ் பற்றி தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 03:20 pm
the-story-of-tessy-thomas-india-s-missile-woman

இன்றும் ஆண்கள் மட்டுமே கோலோட்சி இருக்கும் துறைகள் என பல இருக்கின்றன. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெரும்பாலும் ஆண்கள் தான் குறிப்பிடும் நிலையில் இருக்கின்றர். 

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெண்கள் என்று யோசிக்கும் போதே இரண்டே பெயர்கள் தான் இந்தியர்களுக்கு நினைவில் வரும் அதில் ஒருவர் கல்பனா சாவ்லா மற்றொருவர் டெஸ்ஸி தாமஸ். 

கேரளாவில் பிறந்த டெஸ்ஸியின் தந்தை ஒரு ஐஎஃப்எஸ் அதிகாரி. இவர்கள் வசித்த வீட்டிற்கு அருகில் தான் தும்பா ராக்கெட் லான்ச்சிங் நிலையம் இருக்கிறது. சிறு வயதில் இருந்தே இயற்பியலில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. திரிச்சூர் கல்லூரியில் படித்த பின் புனேவில் உள்ள   Institute of Armament Technologyல் முதுகலை பட்டப்படிப்பு படித்தார். அங்கு சந்தித்த சரோஜ் குமார் படேல் என்பவரை டெஸ்ஸி பின்னாளில்  திருமணம் செய்துக் கொண்டார். 

பிறகு தொடர்ந்து எம்பிஏ படித்த அவர் மிஸ்ஸில் கைடன்சில் பிஎச்டி முடித்தார். 1988ல்  Defence Research and Development Organisation பணிக்கு சேர்ந்த இவர், அப்துல் காலம் குழுவில் வேலை செய்தார். அவர் தான் டெஸ்ஸியை அக்னி ஏவுகனை திட்டத்தில் பணிப்புரிய நியமித்தார். அப்போதில் இருந்து கடுமையாக உழைத்த டெஸ்ஸி அதன் பலனை 2012ம் ஆண்டு அனுபவித்தார். அந்த ஆண்டில் தான் ஒடிசாவில் உள்ள வீலர் தீவில் அக்னி-வி ஏவுகனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்த வெற்றி அவருக்கு எளிதாக கிடைத்தவிடவில்லை. தொடர்ந்து பல தோல்விகள் மற்றும் சங்கடங்களை அனுபவித்தார். அவற்றை பாடமாக கொண்டு தவறுகளை சரி செய்துக்கொண்டே இருந்தார். 

ஒரு பக்கம் இதெல்லாம் நடக்க ஒரு குடும்ப தலைவியாகவும் அவர் செயல்பட்டு வந்திருக்கிறார்.  இவரது அர்ப்பணிப்பு குறித்து 2008ம் ஆண்டு இந்திய பெண்கள் ஆராய்ச்சியாளர்கள் சங்கம், " பெண் விஞ்ஞானிகளுக்கு டெஸ்ஸி தாமஸ் சிறந்த உதாரணமாக இருக்கிறார்" என்று கூறியது. 

தற்போது டெஸ்ஸி பாலிஸ்டிக் ஏவுகணை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறார். இவருக்கு 5 பல்கலைகழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். 

இவர் குறித்து மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திர பேசும் போது, "பாலிவுட் நடிகர் போல டெஸ்ஸி பிரபலமானவராக இருக்க வேண்டும். டெஸ்ஸியின் புகைப்படம் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டும். இதன்மூலம் நம்மூரில் கட்டமைக்கப்பட்ட சில விஷயங்கள் உடைக்கப்பட்டு அனைத்து துறையிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும்" என்றார். 

நாளைடைவில் பல டெஸ்ஸிக்களை சந்திப்போம் என்று நம்பலாம்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close