சொல்லத் தெரியாமல் தோற்றவன் காங்கிரஸ்காரன்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Feb, 2019 06:01 pm
about-congress-special-story

திமுக 1967 தேர்தல் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது பற்றி இந்து முன்னணியின் முன்னாள் செயலாளர் ஏகே முத்துவேல் பொதுக்கூட்டங்களில் கூறும் போது சொல்லத் தெரியாமல் தோற்றவன் காங்கிரஸ் காரன் என்பார். 

காமராஜரின் எளிமை, நேர்மை, அவர் தமிழகத்திற்கு தந்த திட்டங்கள், அவருக்கு முன்னாள் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி முதல்வர் செய்த சாதனைகள் போன்றவற்றை மக்கள் மனங்களில் பதிய வைக்க தெரியாமல் போனதால் தான், திமுக காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது என்று அவர் கூறுவார்.

இப்போது காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்து விட்டது.  வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தற்போது பாஜ தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜாவிடம், மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் வாயில் நுழையாத இந்தி பெயர்களாக இருக்கிறதே தமிழில் பெயர் வைத்தால் மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்களே என்று கூறினார்.
 
இதே போல மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முத்ரா கடன் திட்டம் இந்த திட்டத்தில் கடந்த டிசம்பர் 2018 வரை ரூ. 6.28 லட்சம் கோடி தமிழகத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக தொழில்முனைவோர் 10 சதவீதம் பேர் இந்தக் கடன் பெற்றுள்ளனர். 

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா, மூலகை சாகுபடி மானியத்திட்டம், பிரதம மந்தி பசல் பீமா யோஜனா உட்பட பலவிதமான திட்டங்கள் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டுகிறது. இதே போல துறைவாரியாக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.  இந்த திட்டங்களின் பயனை தமிழகம் கனிசமான அளவிற்கு அனுபவித்துள்ளது. 

தேர்தலுக்கு முன்பாக இந்த தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக பாஜவினருக்கு உள்ளது. குறிப்பாக இந்த திட்டங்களை பெற கமிஷன் இல்லை என்பதை கூடுதல் தகவலாக சொல்ல வேண்டியதும் அவசியம்.  வெறும் கூட்டங்களை நடத்தி தேசிய தலைவர்களை அதில் கலந்து கொள்ள செய்வதால், அது அன்றைய செய்தியாகலாமே தவிர, முழுப்பயனையும் தருமா என்பது சந்தேகம் தான். 

ஆனால் செய்நன்றி மறக்காத தமிழர்களை மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்களை ஒருங்கிணைத்து திரட்டுவதன் மூலம் மத்திய அரசின் சாதனைகளை எளிதில் வெளிப்படுத்த முடியும்.  மேலும், விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் தகுதி கொண்டவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த உதவி செய்யும். 

இதனை தமிழக பாஜகவினர் செய்யத்தவறினால், சொல்லத் தெரியாமல் தோற்றான் காங்கிரஸ்காரன் என்ற பட்டத்தை எளிதில் பாஜகவினர் தட்டி பறித்துவிடுவார்கள். அது நாட்டிற்கு நல்லது அல்ல. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close