மத்திய அரசின் உண்மையான வெற்றி !

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Feb, 2019 06:00 pm
mulayam-singh-yadav-praises-modi-special-story

அகில இந்திய அளவில் அனுபவம் மிக்க தலைவர்களாக சங்கரையா, நல்லக்கண்ணு, பரூக் அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி,அத்வானி, முலாயம் சிங் யாதவ் போன்று ஒரு சில தலைவர்கள் தான் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் அவர்கள் கட்சியை மறந்து தேசிய தலைவர்களாக மற்றவர்களால் கருத வேண்டியவர்கள். அவர்கள் தங்கள் கொள்கையை விடாமல் தொடர்ந்தாலும், இளமை காலத்தில் அவர்கள் இருந்ததைவிட இப்போது தேச நலன் மட்டுமே முக்கியத்துவம் கொண்டு வாழ்கிறார்கள். 

இந்த கூற்றுக்கு சாட்சியம் அளிப்பது போல லோக்சபாவின் கடைசி கூட்டத் தொடரில் முலாயம் சிங் யாதவ் உரை இருந்தது. 

தமிழகத்தில் மறைந்த கருணாநிதியும், இந்து இயக்கங்களும் கடைசி வரை எலியும் பூனையுமாகத்தான் இருந்தார்கள். இது வெறும் வாய் சொல் சண்டையாக தான் இருந்தது. கருணாநிதியால் இந்து இயக்கதவர்கள் உயிர் இழந்தார்கள் என்று எந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட முடியாது.
 
ஆனால் முலாயம் சிங் யாதவ் அப்படிபட்டவர் அல்ல. அவர் உபி முதல்வராக இருந்த போது பாஜகவினரின் இழப்பு அதிகம். 1990ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி முதல் கரசேவை நடந்தது. நாடு முழுவதும் இருந்து இந்து அமைப்பினர் அயோத்தியில் குவிந்தனர். அவர்களை கலைப்பதில் முலாயம்சிங் யாதவ் அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கரசேவகர்கள் திக்கு தெரியாத காட்டில் கொண்டு போய் இறக்கிவிடப்பட்டார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்கள் சடலங்கள் ஆற்றில் இழுத்து விடப்பட்டன. இன்று வரையில் இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாத சூழ்நிலையே உள்ளது.
 
பாஜக கூட்டணியில் விபி சிங் இடம் பெற்றதாலேயே முலாயம் சிங் அவரை வெறுத்தார். அவரை சமீபத்தில் கூட உபி அமைச்சர் நந்த்கோபால்குப்தா பேசுகையில் ராணவனின் அவதாரமாக விமர்சனம் செய்தார்.  இப்படி இந்து இயக்க எதிர்ப்பில் கருணாநிதி வாய் சொல் வீரர்  என்றால் முலாயம் சிங்யாதவ் செயல்வீரராகவே திகழ்கிறார்.

அப்படிப்பட்டவர் தான் லோகசபாவின் நிறைவு நாள் கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமாக வர வேண்டும் என்று பேசுகிறார். இதனால் அவருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும் பேசினார் என்றால் அவரின் அனுபவம் அவ்வாறு பேச வைத்துள்ளது.  அதிலும் சோனியா பக்கத்திலேயே அமர்ந்து இருக்கும் நிலையில் அவர் இப்படி கூறுகிறார் என்றால் எவ்வளவு மனம் திறந்த வார்த்தைகள் இவை. 

தமிழக சட்டசபையில் வெறும் ஜால்ரா ஓசைகளை மட்டும் கேட்டு பழகிய தமிழகத்தல், முலாயம் சிங் பேச்சு ஆச்சரியமான அதிர்சியை ஏற்படுத்தும். அவரின் பாராட்டை பெறுகிறார் என்றால் மோடியின் வெற்றியை அறிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசு இது வரையில் கடந்து வந்த பாதைக்கான அங்கீகாரம் அது . இந்த ஆட்சி தொடர்ந்தால் மற்றவர்கள் வாழ்க்கை இழப்பார்கள் என்பதால் தான் எதிர்கட்சிகள் கொள்கையை விட்டுக் கொடுத்து மோடி எதிர்ப்பு புள்ளியில் சந்திக்கின்றன.
 
இந்த நாடு இன்னும் வளம் பெற வேண்டும். அதற்கு கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதன் பின்னர் யார் ஆட்சி செய்தாலும் கவலையில்லை. இதற்காக முலாயம் ஆசி நிறைவேற வேண்டும் என்பது தான் நல்லர்களின் பிரார்த்தனை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close