மோடியை மிரட்டுகிறாரா மல்லய்யா?

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Feb, 2019 09:35 pm
is-mallya-threatening-modi

பாராளுமன்ற நிறைவு உரையில் பிரதம் பேசும் போது, கடன் வாங்கியவர்களின் பட்டியலைக் குறித்துப் பேசும் போது ஒன்பதாயிரம் கோடி கடனை வாங்கிவிட்டு வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டவர் என்று பேசி விட்டாராமாம். அதனால் விஜய் மல்லய்யாவுக்கு ரோஷம் வந்துடுச்சு. ரோஷம் பொத்துக்கிட்டு ட்வீட் பண்ணியிருக்காரு. 

மதிப்புக்குரிய பிரதமர் என்னைக் கேட்பதற்கு பதில்  அவருடைய பேங்குகளிடம் சொல்லி கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் பப்ளிக் ஃபண்டிலிருக்கும் பணத்தை எடுத்துக்கச் சொல்லி ஏன் கேட்கவில்லை? என்று கேட்டிருக்கிறார். 

விஜய் மல்லய்யா கொஞ்சம் சொகுசு பேர்வழிதான். ஆனால், நம் நாட்டின் முக்கியமான தொழிலதிபர். பாரதத்திற்குப் பெருமை தரும் சில தொழிற் சாதனைகள் செய்தவர் / செய்ய முனைந்தவர். ஏதோ இப்ப அவருக்கு இறங்கு முகம் என்று மட்டும் நினைத்திருக்கும் சிலருக்கு, இந்த ட்வீட் அவர் மீது மரியாதையை இழக்கச் செய்து இருக்கிறது. 

அது என்ன அவருடைய பேங்குகளிடம் என்று பிரதமரைப் பார்த்து சொல்வது? பேங்க் என்பது பிரதமரின் சொத்தா? அல்லது மல்லய்யா இந்த நாட்டை விட்டு நிரந்தரமாக புலம் பெயர்ந்து, இந்தியக் குடியுரிமையை நீக்கிக் கொண்டாரா?  கடனை வாங்கிக் கொண்டு அதற்கு இங்கே நின்று பதில் சொல்லாமல் அடுத்த நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து கொண்டதே பெரிய அசிங்கம். இதில் பிரதமரை கேள்வி கேட்டு வேலை வாங்குகிறாராம்.

மல்லய்யாவுக்கு கடன் கொடுத்தது வங்கிகளா இல்லை பிரதமரா? இவர் கடனை அடைப்பதோ, அதற்கு விளக்கம் கொடுப்பதோ வங்கியிடம் தானே வைத்துக் கொள்ள வேண்டும்? ஊரை விட்டு ஓடியதே ஒழுக்கமின்மை, திருட்டுத்தனம். இந்த லட்சனத்தில் பிரதமருக்கு எதிர் கேள்வி. 
ஆனால், மல்லய்யா மாதிரி ஆட்கள் ஓடிப் போனால், அதற்கான விளக்கங்களைக் கொடுக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பு. மீடியாவில் எதிர்த்துப் பதில் சொல்லும் அளவிற்கு ரோஷம் இருந்தால், உடனே தன் சொத்துகளை விற்று கடனை அடைத்து விட்டுச் செல்லட்டுமே? 

அதில் அடுத்த பொய்… இவர் சொத்துக்களின் அளவு 14 ஆயிரம் கோடியாம். இவரா ஆயிரம் கோடி மதிப்பை ஏத்திச் சொல்கிறார். 
ஒரு இரண்டாம் தர அரசியல்வாதியைப் போல் மறுபடியும் மறுபடியும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் பொதுவில் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? கடன் கொடுத்தது ஒரு கம்பெனி. கடன் வாங்கினது ஒரு கம்பெனி. இது ஒரு வகையான நிதி சார்ந்த ஒப்பந்தம் (Contract between two companies) அதாவது பேங்குக்கும் கிங்ஃபிஷருக்கும் இருக்கும் ஒப்பந்தத்தில் இப்பொழுது ஒரு சிக்கல் / பிரச்சினை வந்திருக்கு. அதை நீதிமன்றம் உட்பட தீர்வை ஆணையங்கள் மூலம் தீர்வு தேடப்பட்டு வருகிறது. 

ஒரு பிரதமராக மோடி இதை பாராளுமன்றத்தில் விளக்குகிறார். அதில் மல்லய்யாவுக்கு என்ன வந்தது? அவ்வளவு யோக்கியமான மனிதர் இன்னும் ஏன் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார். நேரடியாக இந்தியா வந்து இவர் சொன்னது போல கே.எஃப்.ஏ  முதலீட்டாளர்கள் பொது நிதியிலிருந்து (அப்படி அங்கே பத்து பைசாவாவது இருந்தால்) எடுத்துக் கொடுத்து கடனை அடைத்து விடட்டுமே? யார் தடுத்தார்கள்?

நாடு கடத்த இருக்கும் சூழலில் இவர் மோடியுடன் மோதல் போக்கினைக் கொண்டால், இங்கேயுள்ள மோடி எதிர்ப்பாளர்களின் ஆதரவைப் பெறலாம். அதை வைத்து அரசியல் பண்ணலாம் என்று கணக்குப் போட்டு மிரட்டிப் பார்க்கிறாரா மல்லய்யா? சரி அப்படி விரும்பினால், நடந்த எல்லா விஷயங்களையும்  அதே ட்விட்டரில் மக்கள் முன் பொதுவில் வைக்கட்டும். மக்கள் முடிவுக்குக் கூட விட்டுப் பார்ப்போம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close