பாகிஸ்தான் சரவெடி- இந்தியா அதிரடி

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Feb, 2019 02:37 pm
article-about-india-attack-on-pakistan

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் இந்திய எல்லையோர கிராமங்கள் மீது அத்து மீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை உலுக்கியது. இந்த தாக்குதலை தாங்கள் தான் நடத்தினோம் என்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பு கொக்கரித்தது.

இந்த தாக்குத‌லை பாகிஸ்தான் கண்டிக்கவில்லை. காஷ்மீர் தாக்குதலையடுத்து ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தானின். பாலகோட், முசாபர்பாத் மற்றும் சகோட்டி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடங்கள் மீது இந்திய விமானப்படை 12 மிராஜ்  போர் விமானங்களில் வெறும் 21 நிமிடங்கள் பறந்து ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் மூலம் பயங்கரவாதிகள் இருந்த இடத்தை பஸ்பமாக்கினர்.

இந்திய தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 300 மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் 21 நிமிடங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 2 மணி நேரம் தாக்குதல் நடத்தியிருந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

இனியாவது பாகிஸ்தான் தன்னுடைய வாலை சுருட்டிக்கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால், இந்தியா வாலை ஒட்ட வெட்டி விடும் என்பது தான் நிதர்சனம். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்பதை பாகிஸ்தான் உணர்ந்தால் சரி.....

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close