தைரியம் இருந்தால் இதை செய்து பாருங்கள் இம்ரான் கான்!

  பாரதி பித்தன்   | Last Modified : 28 Feb, 2019 04:14 pm
special-article-about-india-pak-relationship


ஒரே நாடா இருந்த இந்தியாவை, ஆங்கிலேயர்கள், போகிற போக்கில், 2 துண்டாக மாற்றி பகைமையை ஊட்டி விட்டினர்.  அவர்கள் சென்று, 70 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் பகைமை வளர்க்கிறோம். இது இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பதுடன், ஐரோப்பிய நாடுகளின் ஆளுமைக்கும் வழி வகுக்கிறது.  

இதனால் உள்நாட்டு வளர்ச்சி, பாகிஸ்தானில் ஏற்படவில்லை. இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து விட்டது என்று இந்தியர்கள் கத்தும் நிலையில், ஒரு பாகிஸ்தான் ரூபாய்க்கு இந்தியாவின் 51 பைசாவிற்கு சமம் என்ற நிலையில் தான் அந்த நாட்டின் பொருளாதாரம் உள்ளது. 

கடந்த, 1947ல், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை போலவே, தரையில் இருந்து எழுந்த நாடுகளின் எழுச்சியை பார்த்தால், இருநாடுகளும், எப்படி தள்ளாடிக் கொண்டு இருக்கிறது என்று தெரியும். 

இந்தியா, தொழில், விவசாயம் என்ற அடிப்படையில் வளர்ச்சியடையும் நிலையில், பயங்கரவாதிகளின் விடுதியாக பாகிஸ்தானை மாற்றி, அதில் கிடைக்கும் வருமானத்தில், அந்த நாட்டு தலைவர்கள் மஞ்சள் குளித்து வருகிறார்கள். 

மக்கள், மதம், இந்திய எதிர்ப்பு போன்ற போதையில் உறங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழிக்காமல் பயங்கரவாதிகள் பாதுகாக்கிறார்கள்.

மக்கள் வளர்ச்சி, அதன் மூலம் தேசத்தின் வளர்ச்சி என்று இருக்கும் நாடுதான், உலகில் தொடர்ந்து இருக்க முடியும். பயங்கரவாதிகளுக்கு தேசப் பற்றோ, மதப்பற்றோ இருக்காது. அப்படி இருந்தால் இஸ்லாமிய நாடுகளில் இடையே போரே இருக்காதே.  

அதனால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தன் தலையில் தானே கொள்ளிக்கட்டை தலையில் சொறிந்து கொள்வது போல ஆகும். 

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் நாட்டு ராணுவம் நடத்தியிருந்தால் கூட ஒரு நாடு போர் தொடுக்கிறது என்று ஏற்கலாம். ஆனால், பாகிஸ்தானில் வாடகைக்கு இருக்கும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இது, இரண்டு நாடுகளின் போராக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச பயங்கரவாதி பின்லேன்டனை பிடிக்க, 2 அமெரிக்க நாட்டு ஹெலிகாப்பர்களில் அந்த நாட்டு ராணுவ வீர்கள் வந்து  பாகிஸ்தானில் இறங்கி சென்று தைரியமாக பின்லேடைனை பிடித்து அவன் மனைவிகளை விதவை ஆக்கிவிட்டு கடந்து சென்றார்கள். அவரை பாகிஸ்தான் ராணுவம் வேடிக்கை தான் பார்க்க முடிந்ததே தவிர்த்து வேறு எதையும் செய்ய முடியவில்லை. 

இதை பாகிஸ்தான் அரசு புரிந்து கொள்கிறதோ இல்லையோ, அந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின்லேடன் போல யாரேனும் ஒரு பயங்கரவாதி இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியா போல மென்மையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

அதே நேரத்தில், அழிவு அப்பாவி பாகிஸ்தானியர்களுதான். கார்கில் போரில் இறந்த பாகிஸ்தான் கமாண்டோக்கள் உடலை கூட அந்த நாட்டு அரசு வாங்க மறுத்துவிட்டது என்ற நிலையில், மக்களை எந்த அளவிற்கு பாதுகாப்பார்கள் என்பது நிதர்சனம். 

இன்றைக்கு தேர்தல் அல்லது ராணுவ ஆட்சியின் மூலம் ஆள்பவர்களை மாற்றினால் கூட, புதிதாக வருபவர்கள் செல்லும் பாதை புதிதாக இருக்கவில்லை. அங்கு பிரச்னையா, இந்தியாவை சீண்டு, உள்நாட்டில் குழப்பமா ஜிகாத் போர்வையில் எவனையாவது தாக்கு என்ற விதத்தில் தான் புதியவர்களும் இருக்கிறார்கள். 
 
இந்தியா - பாக்., இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாடுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. 

அது எவ்வகை பேச்சாக இருக்க வேண்டும். முதலில், பயங்கரவாதத்தை வேரறுக்க, இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். பாக்., ஆதரிக்கும் பயங்கரவாதம், இந்தியாவை மட்டுமின்றி, பாகிஸ்தானின் வளர்ச்சியையும் கடுைமயாக பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

மதம், மதமாகவே இருக்கட்டும். இந்தியாவுடன் அமைதி பேச்சு நடத்துவதால், அங்குள்ள முஸ்லிம்கள், இந்துக்கள் ஆகப்போவதில்லை. ஆண்டுக்கு ஆண்டு, இந்தியாவில் முஸஅலிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் நலமாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்கின்றனர் என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் தேவையும் கிடையாது. 

எனவே மத பேதங்களை கடந்து, காஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி, மக்களை பிரித்தாளும் பயங்கரவாதிகளை ஒடுக்கி, அமைதியான முறையில், சுமுக உறவை வளர்த்துக் கொண்டால், ஆசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி, உலக அளவில், இந்த இரு நாடுகளையும் பார்த்து அஞ்சாதே நாடுகளே இருக்காது எனலாம். 

அப்படி ஒரு நிலை வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. அதை ஆதரிக்கும் அந்நாட்டு அரசையும் ஆதரிக்கிறது. 

இந்தியாவும், பாகிஸ்தானும் இனி ஒன்றாக இணைவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. இது, இன்று பிறக்கும் சிறு குழந்தைக்கு கூட புரியும். உடைந்து கண்ணாடியை எப்படி ஒட்டினாலும், அதில் இரு வேறு பிம்பங்கள் தெரியும் என்பது போலத்தான், இரு நாடுகளின் இணைப்பு என்பது சாத்தியமற்றதே.

ஆனாலும், இரு நாடுகளும் சகோதர மனப்பான்மையுடன், கொள்கை முடிவுகளில் இணைந்து செயல்பட்டால், இரு நாடுகளுமே, உலக அரங்கில் சக்தி வாய்ந்த வல்லரசாக திகழ்வதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு நிலை உருவாக, இந்தியாவுடன் கை கோர்ப்பாரா பாக்., பிரதமர் இம்ரான் கான்? 

newstm.in
 

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close