நரிக்கூட்டத்தில் சிக்கிய தனி சிங்கம் கம்பீர கர்ஜனையுடன் நாடு திரும்பியது!

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 06:33 pm
special-article-about-wing-commander-abhinandan

நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே, பாகிஸ்தானுக்கு, காஷ்மீர் மீது ஒரு கண். இயற்கை எழில் கொஞசும் காஷ்மீரை, இந்தியாவுக்கு விட்டுத் தர அவர்களுக்கு மனமில்லை. ஆனால், இந்தியாவை எதிர்க்கவும் துணிவில்லை. 

என்ன செய்யலாம் என யாேசித்த பாக்., ஆட்சியாளர்கள், சத்தமில்லாமல், பயங்கரவாத இயக்கங்களை ஆதரிக்க துவங்கினர். விளைவு, லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது, அல் - குவைவா உள்ளிட்ட பல பெயர்களில் பயங்கரவாத இயக்கங்கள் தோன்றி, வேரூன்றின. 

அப்போது முதலே, இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரித்தெடுத்து, அதை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாக இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது பாகிஸ்தான். ஆனால், அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. 

ஜின்னாவுக்குப் பின் வந்த ஆட்சியாளர்களில் சிலர், காஷ்மீர் உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம் சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என முழக்கமிட்டனர். 

பாகிஸ்தானின் முழக்கம், காஷ்மீரில் உள்ள சிலரை ஈர்த்தது. விளைவு, பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து, அங்குள்ள இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தினர். 

பல முறை பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, இன்றளவும், இந்தியாவுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் போர் தொடுத்து வருகிறது பாகிஸ்தான். 

கடைசியாக, இந்தியா - பாக்., இடையே நடந்த மிகப் பெரிய யுத்தமாக பார்க்கப்படுவது கார்கில் யுத்தம் தான். அதிலும், புறமுதுகு காட்டி ஓடியது பாகிஸ்தான். இந்திய படையின் ஆற்றலை தாங்க முடியாமல், நம் வீரர்களின் வீரத்தின் முன் மண்டியிட்டனர் பாக்., வீரர்கள். 

இத்தனை அடிவாங்கிய பிறகும் திருந்தாத பாக்., பயங்கரவாதிகளை பயன்படுத்தி, கடந்த மாதம், 14ல், புல்வாமாவில், வாகனங்களில் சென்று கொண்டிருந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலுக்கு, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். உடனே எந்த நடவடிக்கையும் எடுக்காத நம் ராணுவம், சரியாக திட்டமிட்டு, பிப்., 26 அதிகாலை, விமானப்படை மூலம், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் மீது குண்டு மழை பொழிந்தது. 

12 விமானங்கள் மூலம், 21 நிமிடங்களில்,  1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசி, பயங்கரவாத முகாம்களை உருத்தெரியாமல் அழித்தது. 

இதனால் கடும் கோபமடைந்த பாக்., ராணுவம், மறு நாள் காலை, ஜம்மு - காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு நம் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 

அப்போது, நம் வான்வெளியில் நுழைய முயன்ற பாக்., விமானங்களை நம் விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். 
அந்த நடவடிக்கையின் போது, பாக்., போர் விமானங்களை விரட்டியடித்த நம் விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன், எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விமான விபத்தில், பாக்., எல்லையில் தவறி விழுந்தார். 


இதையடுத்து, பாக்., ராணுவ பிடியில் சிக்கினார். பாகிஸ்தானியர்களின் தாக்குதலுக்கு ஆளாகியும், தன்னைப் பற்றியோ, தாய் நாட்டை பற்றியோ எந்த வித ரகசியங்களையும் வெளியிடாமல் சிங்கம் போல் கர்ஜித்தார். 

மிஞ்சிப் போனால் உயிர் போகும் அவ்வளவு தானே. என்றோ ஒரு நாளும் பிரியப்போகும் இந்த உயிருக்கு பயந்து, தாய்நாட்டின் ரகசியங்களை கசிய விடமாட்டேன் என்ற வகையில் இருந்தது அவரின் பேச்சு. 

இதற்கிடையே, அவர் விமானத்திலிருந்து தவறி விழுந்ததும், தான் விழுந்த பகுதி, இந்தியாவா? பாகிஸ்தானா என கேட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், பாகிஸ்தான் வாழ்க என கூறியதும், நிலைமையை புரிந்து கொண்ட அபிநந்தன், தன்னிடம் இருந்த ராணுவ ரகசியங்கள் இடம் பெற்றிருந்த வரைபடத்தை வாயில் போட்டு விழுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதை தொடர்ந்து, அபிநந்தனை மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஜெனிவா ஒப்பந்தத்தின் படி, அவரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என நம் அரசு வலியுறுத்தியது. 

இந்நிலையில், உலக நாடுகள் பலவும், அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தன. இதனால் வேறு வழியின்றி, அபிநந்தனை ஒப்படைக்க பாக்., சம்மதம் தெரிவித்தது. இதற்கான அறிவிப்பை, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். 

இதையடுத்து, ராவல்பிண்டியிலிருந்து, விமானம் மூலம் லாகூர் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், அங்கிருந்து சாலை வழியாக, வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். 


எதிரிப்படையினரிடம் சிக்கியும், அவர்களின் தாக்குதலுக்கு ஆளான பிறகும் கூட, நம் நாட்டு ராணுவ ரகசியங்களையோ, தன்னைப் பற்றிய முழு விபரங்களையோ சொல்ல மறுத்த அஞ்சாநெஞ்சன், மாவீரன் அபிநந்தனை வரவேற்க, வாகா எல்லையில், ஆயிரக்கணக்கானோர் கூடினர். 

தேசிய கொடியுடன் அணி வகுத்து நின்ற அவர்கள், பாரத் மாதா கீ ஜெய் என கோஷமிட்டனர். மாவீரன் அபிநந்தன் வாழ்க எனவும் முழக்கமிட்டனர். 

முன்னதாக, அபிநந்தன் நல்லபடியாக நாடு திரும்ப வேண்டி, நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை நடைெபற்ற நிலையில், அவர் விடுதலை செய்யப்படுவார் என்ற அறிவிப்பு வெளியானதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வழிபாட்டு தளங்களில், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும், வாகா எல்லையில் தயார் நிலையில் இருந்த நம் நாட்டு அதிகாரிகளிடம், அபிநந்தனை, பாக்., அதிகாரிகள் ஒப்படைடத்தனர். 

அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் உற்காசத்துடன் அவரை வரேவற்றனர். 

நரிக் கூட்டத்தில் சிக்கிய தனி சிங்கம், கர்ஜனையுடன் திரும்பியது போன்ற உணர்வை உணர்ந்ததாக, எல்லையில் குழுமியிருந்த பலரும் உணர்ச்சி பொங்க கருத்து தெரிவித்தனர். 

என்றும் சிங்கம் சிங்கம் தான்; நரிகள் நரிகள் தான். ஆயிரம் நரிகள் ஒன்று கூடி எதிர்த்தாலும், ஒரு சிங்கத்தை சீண்டி பார்க்கக்கூட முடியாது. வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close