கருத்து சொல்வது சுலபம்; ஆனால் உண்மையை அறிவது அவசியம்...

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Mar, 2019 05:43 pm
special-article-about-india-pak-situation

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வந்த, பாகிஸ்தான் விமானத்தை தடுத்து நிறுத்திய போது, நம் விமானப்படை விமானி அபிநந்தன் ஒரு வழியாக நாடு திரும்பி விட்டார். கிரிக்கெட் போட்டியை போலவே, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்கள், அந்த நாடு, அந்நாட்டு பிரதமருக்காக தேசிய கீதமே உருவாக்கிவிட்டனர். 

கடந்த காலங்களில் இது போன்று சிக்கிய, 56 பேர் இன்னும் அங்கேயே தான் சிக்கி உள்ளனர். அதை பற்றியயெல்லாம் நம்மவர்கள் கவலைப்படாததற்கு, அப்போது சமூக வலைதளங்கள் இல்லாதது தான் காரணம். 
புல்வாமா தாக்குதல், ராணுவதற்கு பதிலாக பயங்கரவாதிகள் தொடங்கியது. 

அதாவது, அமைதி தேசம், போரை எப்போதும் விரும்பாது. ஆனால், கங்காருவின் மடியில் இருக்கும் குட்டியைப் போல பங்கரவாதிகள் அதனை செய்வார்கள். நாமும் கூட ஒரு கடிதம் எழுதினேன், எச்சரிக்கை விடுத்தேன் என்றே கூறிக் கொண்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ராணுவம் இருக்கிறதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலும் நாம் கவலைப்பட போது இல்லை. 

இந்த முறை புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. உடனே அவர்களும் வெற்றி வேல், வீரவேல், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷங்கள் எழுப்பிக் கெண்டு  தெரு சண்டையை இழுத்துவிடவில்லை. 

திட்டமிட்ட ரீதியில் எந்த பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியதோ, அதன் தலைமை அலுவலகத்தை தேடிப் பிடித்து குண்டு போட்டு அழித்தது இந்திய விமானப்படை. போர் நடக்கவே இல்லை. நடந்தது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தான். 

அமெரிக்கா பின்லேடனை பிடிக்க செய்த அதே நிலைப்பாடுதான் இது. போர் என்றால் இரு நாடுகளுக்கு இடைப்பட்டது. ஆனால் தீவிரவாதிகளை தேடி கண்டு பிடித்து ஒழிப்பது, உலக நாடுகளின் இன்றையத் தேவை. அவர்களுக்கு செலவே இல்லாமல் தொல்லை முடிவுக்கு வரும். அதனால் தான் உலக நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு மவுனமாக ஆதரவு அளித்தது.
 
அபிந்தன் சிக்கியதும், தனது மதத்தை சேர்ந்த நாடாக இருந்தாலும் சவுதி அரசர் தன் அமைச்சரை பாகிஸ்தானுக்கு அனுப்பி அவரை விடுதலை செய்ய அழுத்தம் தந்தார். இன்னொருபுறம், இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கட்டாயப்படுத்தி சுஷ்மாவை அழைத்தார்கள். இதன் காரணமாகவே பாகிஸ்தான் இந்த மாநாட்டை புறக்கணித்தாலும் அவர்கள் அதை பற்றி கவலைப் படவில்லை. 

அமெிரக்க அதிபர் டிரப், இந்த பிரச்னையில் அமெரிக்கா தலையிடும் என்றார். அதை இந்தியாவே விரும்பாது என்பது வேறு விஷயம். ஈரான், ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இதன் காரணமாகத்தான் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். 

இது இங்குள்ள சமூகவலைதள போராளிகளை தவிர்த்து, அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டும் தான் இம்ரான்கான் மனித நேயத்துடன் அவரை விடுவித்ததாக புகழ்பாடினார்கள். ஒரே பந்தில், 110 கோடி மக்களின் இதயத்தை அவர் வெற்றி பெறதாக கூத்தாடினார்கள். 

இவர்கள் துாக்கிபிடிப்பது இம்ரான்கானுக்கு தெரியவே தெரியாது என்றாலும், அவர்கள் சொறிந்துவிடுவதற்கு தவறவில்லை. இவர்கள் அமைதித் துாதுவராக அடையாளம் காட்டும் இம்ரான்கான், பிப். 26ம் தேதிக்கு பின்னரும், தொடர்ந்து  இந்தியாவைதாக்கி கொண்டே இருக்கிறார். 

அபிநந்தன் விடுதலை செய்யப்படும் சூழ்நிலையில் கூட, தாக்குதல் நடந்தது. ஒரு பெண் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். இது நம் சமூக போராளிகளுக்கு கண்ணுக்கு தெரியவில்லை. 
அபிநந்தன் விடுதலையை எதிர்த்து அந்த நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. நம்ம ஊராக இருந்தால் பிரதமரை சிக்கலில் விட வேண்டும் என்றே அபிந்தன் விடுதலைக்கு தடை விதிக்கப்படும். அங்கு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 
இதையெல்லாம் சமூக போராளிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டிற்கு எதிராக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மோடியை எதிர்த்து, மன்மோகன் சிங், ராகுலை ஆட்சியில் அமர்ந்த இந்த நிலைப்பாடு சரியில்லை. 
நாட்டின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளில் அரசியல் பார்ப்பது மிகவும் அபாயகரமானது; தவறானது. இதை அனைவரும் உணர வேண்டும். 

இம்ரான்கான் போர் தொடுத்தாலும், வளர்ச்சிப்பாதையில் நாட்டை முன்னேற்றினாலும், அந்த நாட்டை விட்டு விரட்டப்பட போவது நிச்சயம். பெனாசீர், நவாஸ் ஷரீப் போன்றவர்களின் வாழ்க்கை இதை வெளிப்படுத்தும். அதனால் வளர்ச்சிப்பாதையையில் நாட்டை செலுத்துவது, பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் தெற்காசியாவிற்கே நல்லது. 

இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் போல் இல்லாமல், இம்மரான் கான் உண்மையில் அமைதியை விரும்பினால், இந்தியாவை குறை கூறுவதை விடுத்து, அங்குள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close