அனுமன் பாணியில் அரக்கர்களிடம் இருந்து தப்பிய அபிநந்தன்!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 03 Mar, 2019 01:05 pm
special-article-about-wing-commander-abhinandan

ஆன்ட்ர்யூ சிக்காடிலோ என்றொரு சீரியல் கில்லர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று அவர்களின் உடலை ஆங்காங்கே அறுத்து, ரத்தம் பீறிடுவதைப் பார்த்ததும் தான், அவனது காம வேட்கை எழும். அதன் பிறகு, அந்த ரத்தத்தில் நனைந்த படி, அந்தக் குழந்தைகளை புணருவான். பரிணாம வளர்ச்சியில், வேட்டை குணத்தின் எச்சங்களாக, டி.என்.ஏ., வழியே மிஞ்சியிருக்கும் மிருக குணம் இது.

இந்த சிக்காடிலோ  போன்ற ரத்த வெறி பிடித்த மனித மிருகங்களின் கூட்டமைப்பு தான், இந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்.,  ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா, தலிபான் போன்ற அமைப்புகள். ரத்தம் பார்த்தால் உடலிலும், மூளையிலும் விரைப்பு ஏற்பட்டு, கொடூர திருப்தி பட்டுக்கொள்ளும் சீரியல் கில்லர்கள் இவர்கள்.

 இப்படியான கூட்டத்தின் பிடியில் இருந்து தான், நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தப்பிப் பிழைத்து வந்திருக்கிறார். அதற்கு இந்திய அரசின் வெளியிறவுத் துறை நிர்வாகம் எடுத்த துரித நடவடிக்கைகள் மிக முக்கிய காரணமாக இருப்பினும், அபிநந்தனின்  மனோதிடம், மனப்பான்மையும் (Attitute) ஓர் முக்கியமான காரணம். 

எந்தச் சூழலிலும் துவளாத மனோதிடம், சாக மாட்டோம் என்ற தீர்க்கமான நம்பிக்கை! தன் எதிர்கால வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகளும், வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஆசைகளையும் மனதளவில் முழுமையாகத் திட்டமிட்டு இருப்பதும் ஆகும். 

ராமாயணத்தில், சுந்தரகாண்டம் நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். அதில் அனுமனின் செயல்பாடுகளில் ஒன்றை அபிநந்தன் நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
  
சீதையை தரிசித்து விட்டு, சூடாமணியை அடையாளமாகப் பெற்ற பின் சும்மா திரும்பிப் போகாமல், இலங்கை ராட்சஷர்களுடன் வம்பிழுத்து சண்டை போடுவார் அனுமன். நோக்கம் என்னவெனில், சும்மா இருக்கிறவர்களை அடித்தால், பின்னால் அரசு தரப்பிலிருந்து யாராவது வந்து தம்மை ராவணனிடம் அழைத்துச் செல்வார்கள் என்பதே! 

அனுமனின் அட்டகாசம் தாளாது, ஒரு கட்டத்தில் மாவீரன் இந்திரஜித்தே, சண்டைக்கு வந்து வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவி, அனுமனைக் கட்டிப் போட்டு விடுவார். அனுமனும் கட்டுண்டு விடுவார். பிரம்மாஸ்திரத்தால் பாதிக்கப்பட மாட்டாய் என்ற வரம் இருந்த போதிலும், கட்டுண்டது போல் நடிப்பார். 

பிரம்மாஸ்த்திரத்தில் கட்டுண்ட பின், வேறு ஏதேனும் கொண்டு கட்டினால், பிரம்மாஸ்த்திரம் வேலை செய்யாமல் போய்விடும் என்று தெரியாது, கிங்கிரர்கள் மேலும் சில கயிறுகளைக் கொண்டு கட்டி விடுவர். இதைப் பார்த்த இந்திரஜித்க்கு, அனுமன் கட்டுண்டது போல் நடித்துக் கொண்டிருப்பது தெரிந்து விடும். 

விசயம் தெரிந்தே அனுமனை, ராவணனிடம் அழைத்துச் சென்றதும், அங்கே சென்ற பின், அனுமன், ராவணனுக்கே அறிவுரையும், எச்சரிக்கையும் விட்டு விட்டு வந்ததும் நாம் அறிவோம்.

சுந்தரகாண்ட நிகழ்வுக்கும், அபிநந்தன் நிகழ்விற்கும் ஓர் ஒப்புமை என்னவெனில்,  அபிநந்தனைப் பிடித்த பின், பாகிஸ்தான் கிங்கரர்கள் வீடியோ எடுத்ததும், அதை ஊடகம் மூலம் பரப்பியதும், பிரம்மாஸ்த்திரத்தில் கட்டுப்பட்டவரை, கயிறால் கட்டியதற்குச் சமம். 

ஊடகம் மூலம் பரப்பாமல் இருந்திருந்தால், அபிநந்தனின் உடலிலிருந்த ஒவ்வொரு செல்லும், வலியால் துடித்து உயிர் துறந்திருக்கும். நாங்கள் இந்தியர் ஒருவரை வீழ்த்தி விட்டோம் என்று, அந்நாட்டு மக்களிடம் காட்டி, பாலகோட்டில் ஒட்டிய மண்ணைத் தட்டி விட நினைத்து, வீண் வம்பில் மாட்டிக் கொண்டது பாகிஸ்தான் என்பது வேறு கதை.

அங்கே அனுமன் போல, மனதளவில் ஓர் இலக்கை, நிஜமாகவே அடைய விரும்பி, முழு அளவில் அதைப் பற்றிய சிந்தனை இருக்கும் எவருக்கும், அதை அடையாமல் மரணம் ஏற்படுவதில்லை. 

 தீவிரமாக விரும்பிய இலக்கை தான் சாதித்து விட்டோம், நிறைவாக வாழ்ந்து விட்டோம் என்ற திருப்தி ஏற்படாத வரை மரணம் நிகழப் போவதில்லை என்ற உளவியல் பாடத்திற்கு, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. 

‛வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு’  

என்ற குறளுக்கேற்ப, தன் உயர்வான சிந்தனையால், எதிரியின் கோட்டையில் நுழைந்தும், பத்திரமாக தாய் நாடு திரும்பியிருக்கும் அபிநந்தனின் வீரத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றால் அது மிகையல்ல.  

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close