மதம் மாற்ற முயற்சிப்(போர்) மனம் மாறினால் நன்று!

  பாரதி பித்தன்   | Last Modified : 16 Mar, 2019 04:25 pm
special-article-about-newzeland-attack

நியூசிலாந்து நாட்டில், மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தாேர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், 49 பேர் உயிரிழந்தனர். 

மசூதியில் தொழுகை நடத்தியோர் எந்த மத்தை சேர்ந்தவர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதே போல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், உலகையே கட்டி ஆண்ட, பிரிட்டாஷிர் பெரும்பாலானோர் பின் பற்றும் மதத்தை சேர்ந்தவர். அந்த மதமும் அமைதியையும், அன்பையும் போதிப்பதாகவே கூறப்படுகிறது. 

இந்த படுகொலையின் பின்னணியில் அகதிகள் பிரச்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அமைதியும், அன்பும் போதிக்கும் மதத்தை சேர்ந்த ஒருவர், அதே போல் அமைதியை போதிக்கும் மற்றொரு மார்க்கத்தை கடைபிடிப்பவர்களை ஏன் கொல்ல வேண்டும்?

இதிலிருந்து ஒன்று தெளிவாக புரிகிறது. மதத்தை பின்பற்றுபவர்களில் பலரும், அது சொல்லும் கருத்துக்களை பின்பற்றுவதில்லை. ஒரு மதத்தை பின்பற்றுபவர் அல்லது அந்த மதத்தின் வழி வந்தவர் என்றால், அது கூறும் கருத்துக்களை பின்பற்றுபவராகத்தானே இருக்க வேண்டும். 

ஆனால், இவர்களோ, மதம் கூறும் அடிப்படை அம்சத்தை மறந்து விட்டு, அல்லது மறுத்துவிட்டு, தங்கள் வழிபாட்டு முறை தான் சிறந்தது எனக் கூறுகின்றனர். அதையே கெட்டியாக பிடித்துக் கொண்டு, தங்கள் மத வழிபாட்டை கடைபிட்டபவர்களை தவிர மற்ற அனைவரையும் கொன்று குவிக்கின்றனர். 

இது தான், உலகின் பல நாடுகளிலும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரங்கள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில், இது போன்ற பயங்கரங்கள் தினம் தினம் நடைபெறுகின்றன. 

இத்தனைக்கும் ஒரே மதத்தின் இரு பிரிவினர் தங்களுக்குள் போர் செய்வது தான் உச்சபட்ச கொடுமை. இது தான், ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.  

அமைதியை வேண்டி, அரச வாழ்க்கை துறந்து, இன்று ஓர் மதத்தின் கடவுளாகவே வணங்கப்படுவரின் வழியை பின்பற்றும் சிங்களத்தார் தான், அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தனர். இன்றும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

பிற மதங்களை சேர்ந்தவர்களை கட்டாயப்படுத்தியோ, கருணை மழை பொழிவதாகக் கூறி நாடகம் ஆடியோ மதம் மாற்றம் செய்ய முயற்சிப்பதை விட, மதங்களின் ஆழமான கருத்துக்களை உணராமல் திரியும் பலரும், மனம் மாறினால், பூமி செழிக்கும், வாழ்வு நிலைக்கும், மனித குலம் தழைக்கும். 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close