அமெரிக்கா வழியில் சீனாவிற்கு எதிராக சாட்டை சுழற்றுவோமோ?

  பாரதி பித்தன்   | Last Modified : 16 Mar, 2019 05:35 pm
special-article-about-china-india-relationship

உலக நாடுகள் மத்தியில்  கெத்து காட்ட, சீனா அவ்வப்போது ஏதாவது நடவடிக்கை எடுக்கும். பெரும்பாலும் அது இந்தியாவிற்கு எதிராக தான் இருக்கும். துணி தைக்காத டைலர், வாடிக்கையாளர் முன்னிலையில் காஜா பையனை தாக்குவதற்கு இணையாக, இந்தியாவை சீண்டும் வகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நடவடிக்கை எடுக்கும். ஆனால், நாம் எப்போதும் போல், ‛சீனா -  இந்தியா பாய் பாய்’ என்போம்.

அதாவது, சீனர்களும், இந்தியர்களும் சகோதரர்கள் என்று அர்த்தம். 

20.10.1962ம் ஆண்டு, சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லை கடந்து தாக்கியது. கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள்.ஒரு மாதம் போர் நடந்தது. அதற்கு முன்பு வரை நம் பிரதமர் நேரு, சீனா – இந்தியா  பாய் பாய் என்று கொஞ்சியவர். 

சீனா இப்படி செய்யும் என்று நினைக்கவே இல்லை. பாராளுமன்றத்தில், சீனா பிடித்த பகுதிகள் புல்பூண்டு விளையாத பகுதிகள் என்றார். இதைக் கேட்ட சியாமா பிரகாஷ் முகர்ஜி, என் தலையில் கூட எதுவுமே முளைக்காது அதனை வெட்டி எடுத்து விடுவோமா என்று கேட்டார். 

அதன் பின்னர் சீனா போர் நிறுத்தம் அறிவித்தது. அதாவது நாம் அவர்களை தோல்வி அடைய செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையையே நேரு இறப்பின் காரணங்களில் ஒன்றாக அமைந்தது. 
  
சமீபத்தில் பட்டு சாலை அமைத்தற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து அதற்கு மூடுவிழா நடத்தியதற்கு முன்புவரை, சீனி இந்தி பாய்பாய் தான். அவர் பாகிஸ்தானை துாக்கி பிடிப்பதற்கு காரணம், அந்த நாடு கூலிப்படையாக இந்தியாவை தாக்குவது தான் காரணம்.

உலக அரசியலை கரைத்துக்குடித்த இடதுசாரிகள், நமக்கு எதிராக இருந்தாலும், அவர்கள் கொள்கை அடிப்படையில் சீனாவை ஆதரிக்கிறார்கள். 

அமெரிக்க அதிபராக யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் வந்ததும், அவர் குணாதிசயத்தை வைத்து ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப டிரம்ப் உள்ளூர் தொழிலை காப்பாற்ற, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையாக வரி விதித்தார். 

இத்தனைக்கும், சீனாவும் அமெரிக்காவில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர்கவலைப்படுவதாக இல்லை.

சீனாவின் மூக்கைப் பிடித்ததும் அவர்கள் இறங்கி வந்து இருக்கிறார்கள். இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.  சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவுகள் தற்போது மிகவும் ஆபத்தான மற்றும் முக்கியமான நிலையில் இருக்கிறது. 

நாம் இரு நாடும் ஒருவருக்கொடுவர் மரியாதை கொடுத்து, நல்ல வர்த்தகத்தில் ஈடுபடுவோம் என்று கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் டிரம்ப், தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்கிறார். சீனா எவ்விதமான உடன்பாட்டிற்கும் வர வில்லை என்றால், 10 சதவீத வரி, 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மிரட்டல் விடுகிறார். 

டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் எந்த விதபாதிப்பும் இல்லாமல் இல்லை. மக்காசோள விவாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அமெரிக்க நாட்டின் ஏற்றுமதியாளர்கள் தங்களின் முதன்மை வாடிக்கையாளரான சீனாவிற்கு விற்பனை செய்ய முடியாமல் திணறுகின்றனர். 

இந்த பிரச்னை வலுவாக இருந்தாலும், அவர்கள் கோ பேக் டிரம்ப் என்று கொடி பிடிக்கவில்லை. டிரம்ப் ஊர்சுற்றுகிறார். அவர் செவ்விந்தியர்கள் விரோதி என்றெல்லாம் ஆவேசம் காட்ட வில்லை. இதன் விளைவு சீனாவும், அமெரிக்காவும் கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இதுவே நம்ம பிரச்னைக்கு வருவோம். 1980களில் இருந்தே அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தொல்லை கொடுக்கும் தீவிரவாதி மசூத் அசார். இவன், ஜெய்ஸ் இ முகமது எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவன். சோமாலியாவில், அமெரிக்கபடைகளுடன் நேரடியாக சண்டையிட்டு, அவர்களுக்கும் தொல்லை கொடுத்தவன். 

1994ம் ஆண்டு, தன் சொந்த நாடான பாகிஸ்தானில் இருந்து, காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மற்ற தீவீரவாதிக்குழுக்களுடன் தொடர்பு கொள்ள வரும் போது, இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துனர். 1999ம் ஆண்டு வரை சிறையில் இருந்த அவனை, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தி, பணையமாக வைத்துக் கொண்டு, மசூத் அசாரை விடுவித்து சென்றனர் பயங்கரவாதிகள்.

அதன் பின்னர் 2001 ம் ஆண்டு முதல், இந்தியாவின் நெருக்கடியால் வீட்டுசிறையில் இருந்தவனை, 22–12– 2002ம் ஆண்டு லாகூர் நீதிமன்றம் விடுவித்தது.
தற்போது புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் காரணம். அதனால் தான், இந்தியா அதன் தலமை அலுவலகம் இருந்த இடத்தின் மீது தாக்கல் நடத்தியது. இது குறித்து, பாகிஸ்தான் கேள்வி கேட்பதை விட காங்கிரஸ் மற்றும் உள்ளூர் எதிர்கட்சிகள் செய்த விமர்சனங்கள் மோசமானவை. 

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரின் போது, அந்த அரசுகளுக்கு எதிரான நிலை கொண்ட மக்களின் எதிர்வினையுடன் ஒப்பிட்டால், இங்குள்ளவர்கள்  எவ்வளவு கேவலமானவர்கள் என்பது தெரியும். 
புல்வாமா தாக்குதல் காரணமாகத்தான் மசூத் அசாரை  சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல நாடுகள் இறங்கி உள்ளன. ஆனால், சீனா இதற்கு 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

இதனால் இந்தியா மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளும் ஆத்திரத்தின் உச்சத்தில் உள்ளன. இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்த இந்தியா முன்வர வேண்டும். அமெரிக்கா போன்ற வர்த்தக தடையாக அது இருக்கலாம். 

தற்கால நவீன போராக இது விளங்கும். ஆனால் இதற்கு இந்திய மக்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் மக்கள் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதால் மட்டும் ஒரு நல்ல அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுக்காமல் விட்டு விடக் கூடாது. 

மேலும் முள்ளில் சேலை விழுந்துவிட்டது போல, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையேில் மிகப் பெரிய எல்லை உள்ளது. வர்த்தகப் போராகவும் மாறக் கூடும். அதை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் இந்தியாவிற்கு உள்ளது. போரை தொடங்கிவிட்டு, சீனா - இந்தியா பாய் பாய் வேலைக்கு ஆகாது. 

ஆனால், தீவிரவாதத்திற்கு எதிராக இப்போது, இந்தியாவுடன் பல நாடுகள் ஒன்றாகக் கூடி உள்ளன. அதனை பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும். அது தான் நாட்டிற்கு நல்லது. ஆனால் அதை செய்யும் அரசு அமையுமா என்பது தான் கேள்வி?

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close