முஸ்லிம்களுக்கென்று நான் எதுவும் செய்யமாட்டேன்: மோடி

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 08 Apr, 2019 08:24 pm
no-scheme-will-be-given-to-muslims-separately-said-modi

முஸ்லிம்களுக்கென்று நான் எதுவும்  செய்ததில்லை, செய்யப்போவதுமில்லை; ஹிந்துக்களுக்கென்றும் நான் எதுவும் செய்ததில்லை, செய்யப்போவதுமில்லை. ஒட்டுமொத்த தேசத்தையும் கருத்தில் கொண்டே நான் செயல்படுகிறேன் என்று பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி சமீபத்தில் ஓர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதன் அர்த்தம் என்னவென்று ஆனந்தன் அமிர்தன் அவரின் பார்வையில் எடுத்து எழுதியுள்ளார். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன் நண்பர்களே...

ஒரு நாட்டின் மன்னன் தன்னலத்திற்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும்  என்கிறார் ப்ளாட்டோ. தன்னலம் சரி! சட்டத்திற்கு எப்படி அப்பாற்பட்டு இருக்க முடியும்? அது எப்படி என்றால், சட்டம் என்பதே தர்மத்தை மீறுபவர்களைத் தண்டிக்கத்தான். எவனொருவனுக்கு சுயநலம் இல்லையோ, அவனுக்குச் சட்டம்  எனும் சட்டம் அவசியம் அல்ல!

நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் இந்தியத் திருநாட்டில் வேறு எந்த அரசியல் தலைவரையும் விட அதிகமாக விமர்சிக்கப்பட்டவர். சிறுபான்மையினருக்கு எதிரானவர், குஜராத் கலவரங்களுக்கு இவரே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்களாலும், ஊடகங்களாலும் திரும்பத் திரும்ப எடுத்து இயம்பப்பட்டவர்.

 ஓர் முறை இரு முறை அல்ல, ஐந்து விதமான நீதிமன்ற நடைமுறைகளால் நரேந்திர மோடி கோத்ரா கலவர வழக்கில் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டினை காங்கிரஸ் தலைவர்கள் சிறுபான்மையினரிடம் மீண்டும் மீண்டும் பரப்பி வந்தனர். காங்கிரஸ் தலைவர்களின் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டது என்று தெரியாதா என்ன.

தெரியும்... தெரிந்தே அவர்கள் அதைத் தொடர்ந்து செய்து வந்தனர். நரேந்திர மோடி அவர்கள் மீது எவ்வித நீதிமன்ற நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு சட்டப்படி அவருக்கு உரிமை இருந்தபோதிலும் கூட அவர் அவ்வாறு செய்யவில்லை என்பதே நடைமுறையில் உள்ள உண்மையாகும்.

 கோத்ரா ரயிலில் வைத்து எரிக்கப்பட்டவர்கள், அப்பாவி ஹிந்து சாதுக்கள் மற்றும் ராம பக்தர்கள். அப்படியான கொடூர கொலை நடந்ததால், அதைத்தொடர்ந்து, அதீத கோபத்திற்கு ஆளான ஹிந்துக்கள் முஸ்லிம்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவர இறுதியில் கடும் உயிர்ச் சேதம் இருபக்கமுமே நிகழ்ந்தன”

இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, குஜராத்தில், வேறு எந்த விதக் கலவரமும் குழப்பமும் மோடி முதல்வராக இருந்த வரை நிகழவில்லை. அதற்குப் பிறகும் நடைபெறவில்லை. ஆனால், நாடெங்கும் அவ்வப்போது, ஆங்காங்கே மத, ஜாதி மோதல்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தன.

அதையெல்லாம் எந்த ஊடகமும் பூதக்கண்ணாடி வைத்து கோத்ரா கலவரத்துக்கு பிறகு செய்ததைப்போல பெரிய செய்தியாக்கவில்லை. அதென்னவோ குஜராத் கலவரம் மட்டுமே இன்று வரை பேச்சுப் பொருளாகி இருந்து வருகிறது.  இவ்விஷயத்தில் ஊடகங்கள் பாகுபாடாக நடந்து கொண்டதை எவரும் மறுக்க முடியாது என்பதே உண்மை

 ஏன் இவ்வாறு நடைபெறுகின்றன என்று யாரேனும் யோசித்தார்களா? இல்லை அடுத்த 12 ஆண்டுகள் குஜராத்தில் ஏன் கலவரங்களே நடைபெறவில்லை என்று எவராவது கள ஆய்வாவது செய்தார்களா? மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டில் எங்கேயும் மத மோதல்கள் ஏதும் நடக்கவே இல்லை.

சிறுபான்மையினர் தங்கள் மதச் சம்பிரதாயங்களை இயல்பாகச் செய்து தான் வருகிறார்கள். இத்தனையும் நடந்த பின்பும் சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது,

“மோடிஜிக்கும் முஸ்லிம்களுக்கும் என்னவிதமான அலைவரிசை இருக்கிறது. பாஜகவைப் பார்த்தால் முஸ்லிம்கள் ஏன் பயப்படுகின்றனர்?”

  பிரதமர் மோடி அவர்கள் சொன்ன பதில். “ நான் இஸ்லாமியர்களுக்காக இதுவரை ஏதும் செய்ததில்லை, இனியும் ஏதும் செய்யப் போவதும் இல்லை; ஹிந்துக்களுக்காகவென்றும் நான் இதுவரை ஏதும் செய்ததில்லை. செய்யப் போவதுமில்லை. ஒட்டு மொத்த தேசத்தையும், தேச மக்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு நான் செயல்பட்டு வருகிறேன்.”

எளிமையான தெளிவான பதில். தான் எந்த மதச் சார்புடனும் இல்லை. என் நோக்கமெல்லாம் தேசத்தின் வளர்ச்சி மட்டும் தான். இத்தனை நாள் பொய்ப்பிரசாரம் கேட்டுப் பழகிய நமக்கு மதச்சார்பின்மை என்றால் ஹிந்து மதத்தை மட்டும் திட்டுவது என்பதை கண்டு வந்துள்ளோம்.

சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே பெரும்பான்மையான கட்சிகள் கருதி வந்துள்ளன. ஆனால் அதற்கு மாறாக அந்த பேட்டியில் முஸ்லிம்கென்றோ, ஹிந்துக்களுக்கென்றோ நான் தனித்தனியாக எதுவும் செய்யமாட்டேன்.

மக்கள் அனைவரும் எனக்கு ஓர் மக்கள்தான். அவரவர் மத வழிபாடு, சம்பிரதாயங்களில் பிறர் தலையிடாமல் இருப்பது தான் மதச்சார்பின்மை என்பதையும், நாட்டின் பிரதமர் தனக்கு ஓட்டுப் போட்ட, போடாத எல்லாருக்கும் விருப்பு வெறுப்பில்லாத நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார் அவர். 

அதாவது இந்த தேசத்தின் மக்கள் அனைவரும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் என்பதை மிகவெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். எவரையும் பயமுறுத்தியோ, தாஜா செய்தோ நான் அவர்களது வாக்கைப் பெற மாட்டேன். ஒட்டு மொத்த தேசத்திற்குமானவன் நான் என்பதை மிகவும் சாதாரணமான வார்த்தைகளில் வெளிப்டுத்தியுள்ளார் சொல்லியுள்ளார் அவர். இதன் மூலம் நம் தேசத்தின் மாண்பான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையையும் கட்டிக் காக்கப்படுகிறது.

கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் யாவும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close