நாட்டின் அடுத்த பிரதமர் யார்? மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்? Newstm கருத்துக்கணிப்பு முடிவுகள் !

  விசேஷா   | Last Modified : 09 Apr, 2019 04:37 pm
lok-sabha-election-2019-opinion-poll-results

நாட்டின் 17 வது மக்களவை பொதுத் தேர்தல், இம்மாதம் 11 -ஆம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 19 -ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன், பா.ஜ.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. 

அதே சமயம், கடந்த முறை, நாடு முழுவதும் வீசிய மாேடி அலையால் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அந்த கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் தலைமையில் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் என்பதால், அவருக்கும், அந்த கட்சிக்கும் மட்டுமின்றி, ராகுலின் இமேஜையும் சோதிக்கும் தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. 

இந்த இரு கட்சிகள் தவிர்த்து, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், மாநில கட்சிகள், தேசிய அளவில் தங்கள் பலத்தை நிரூபிக்க துடிக்கின்றன. 

இவ்வளவு பரபரப்பான சுழலில், நாளை மறுநாள் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று மாலைக்குப் பின், கருத்துக் கணிப்புகள் வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், தேசிய அளவில், எந்த கட்சி அல்லது கூட்டணி எவ்வளவு இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி, Newstm நடத்திய கருத்துக்கணிப்புகள் பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

Newstm வாசகர்கள் மத்தியில் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் தெரிவித்த கருத்துகள், முந்தைய தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள், மாநிலங்களில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

மாநிலம்  பா.ஜ.,கூட்டணி   காங்.,கூட்டணி   பிற கட்சிகள் 
ஆந்திரா - 25 03 03 19
அருணாச்சல பிரதேசம் - 02 01 01 -
அசாம் - 14  07 04 03
பீகார் - 40 31 09 -
சத்தீஸ்கர் - 11 06 04 01
கோவா - 2 02 - -
குஜராத் - 26 23 03 -
ஹரியானா - 10 07 03 -
ஹிமாச்சல பிரதேசம் - 04 03 01 -
ஜம்மு - காஷ்மீர் - 06 01 01 04
ஜார்கண்ட் - 14 08 03 03
கர்நாடகா - 28 18 10 -
கேரளா - 20 03 08 09
மத்திய பிரதேசம் - 29 17 10 02
மகாராஷ்டிரா - 48 36 11 01
மணிப்பூர் - 02 01 01 -
மேகாலயா - 02 01 01 -
மிசோரம் - 01 - 01 -
நாகலாந்து - 01 - 01 -
ஒடிசா - 21 08 02 11
பஞ்சாப் - 13 06 07 -
ராஜஸ்தான் - 25 14 11 -
சிக்கிம் - 01 - 01 -
தமிழ்நாடு - 39 10 29 -
தெலங்கானா - 17 02 02 13
திரிபுரா - 02 02 - -
உத்தரப் பிரதேசம் - 80 51 03 26
உத்தரகண்ட் - 05 04 01 -
மேற்கு வங்கம் - 42  08 03 31
       
யூனியன் பிரதேசங்கள்       
அந்தமான் நிக்கோபார் - 01 01 - -
சண்டிகர் - 01 - 01 -
தாத்ரா நாகர்ஹவேலி - 01 01 - -
டாமன் - 01 01 - -
லட்சத்தீவுகள் - 01 01 - -
டெல்லி - 07 03 02 02
புதுச்சேரி - 01 - 01 -
       
மொத்தம்  280 138 125

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 272 இடங்களில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். 

அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, 280 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 138 இடங்களிலும், பிற மாநில கட்சிகள், 125 இடங்களிலும் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதவாது, ஆட்சி அமைக்க தேவையான, 272 இடங்கள் என்ற எண்ணிக்கையை, பா.ஜ., கூட்டணி எந்தவித சிரமும் இன்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த, 2014ம் ஆண்டு தேர்தலில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., கூட்டணிக்கு, இந்த தேர்தலில் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சற்று பின்னடைவு ஏற்படலாம். 

அதேபோல், கடந்த தேர்தலில், வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி, இம்முறை, 80க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்தும், 130 - 140 இடங்களில், அதன் கூட்டணியுடனும் வெற்றி பெறலாம். 

இது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கும் மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கலாம். கடந்த தேர்தலில், மக்களவையில், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட பெற முடியாத காங்கிரஸ், இந்த முறை, பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கலாம். 

அதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின், டி.ஆர்.எஸ்., கட்சி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், உத்தரப் பிரதேச மாநிலத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி உள்ளிட்ட மாநில கட்சிகள், 125 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. 

பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் தான், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பிற மாநில கட்சிகள் இணைந்து, மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சிக்ககூடும்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால், தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஒடிசாவின் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆகியோர் பெரும்பான்மை பெற்ற கூட்டணியான பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளது. 

இவர்களின் பலமும் சேர்ந்தால், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 320 உறுப்பினர்களுக்கு மேல் சென்றுவிடும். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், எதிர்க்கட்சிகளின் வியூகம் பலிக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. 

கருத்துக்கணிப்புகளின் படியே, தேர்தல் முடிவுகளும் வெளியானால், பிரதமர் நரேந்திர மாேடியே மீண்டும் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பார்.

எனினும், தேர்தல் முடிவுகள், ஏழு கட்ட வாக்குப்பதிவுகளை பொறுத்து மாறுபடும். அடுத்தடுத்த ஓட்டுப்பதிவுகளுக்கு முன் நிகழும் முக்கிய சம்பவங்கள், அதனால் மக்கள் மனங்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். 

மொத்தத்தில், மே 23 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளின்போது, பா.ஜ.க., கூட்டணி, 280 - 310 இடங்கள் வரை கைப்பற்றலாம். அதேபோல் காங்கிரஸ் கூட்டணி 140 - 150 இடங்களில் வெற்றி பெறலாம். மூன்றாவது அணி தலைமையில் அல்லது மூன்றாவது அணி ஆதரவில் ஆட்சி அமைவது என்பது கேள்விக்குரிய விஷயமே. இம்முறையும் பா.ஜ.க., கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது, யார் பிரதமர் ஆகப்போகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்துக்கொள்ள மே 23 வரை காத்திருப்போம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close