மறுதேர்தல் நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:56 am
n-chandrababu-naidu-in-letter-to-cec

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை முதலே, பல்வேறு வாக்குசாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதாக புகார் வந்தது.காலை 10 மணி வரையிலும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்காத நிலை ஏற்பட்டது. இதனால், வாக்களிப்பதற்காக  வந்த மக்கள் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதையடுத்து வாக்களிக்காமலே திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்ட தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close